Jul 4, 2016

Master of None

ஒரு முன்னணி ஆங்கில சிட்காம் தொடரில் டிஎம்எஸ் பாடுகிறார் "பொன் அந்தி மாலைப்பொழுது...". காரணம் தமிழரான அஜிஸ் அன்சாரி (சரி.. தமிழ் வம்சாவளி). நம்மவர் எடுக்கும் தொடர் என்பதாலேயே ஒரே நேரத்தில் நல்லாயிருக்கணும் - நல்லாயிருக்காதோ என்று புத்தி அலைக்கழித்தாலும் தற்சமயம் வெளிவந்து கொண்டிருக்கும் எந்த சிட் காமை விடவும் மேலான தரத்துடன் அருமையான அனுபவத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட 'Louie' தொடரை ஒட்டிய ஸ்டைல், ஆனால் அதைவிட இலகு.


தொடரும் கிட்டத்தட்ட அஜீஸின் சொந்த வாழ்வை ஒட்டியதே (இதுவும் லூயியை போல்.. லூயி இப்போது Horace & Pete என்று வேறு தளத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார். அதைப்பற்றி பிறகு.. பிகு:நான் ஒரு லூயி சி.கே. வெறியன்). தொடரிலும் நிஜத்திலும் அஜீஸின் தந்தை அமெரிக்காவில் செட்டிலான தமிழ் டாக்டர். அஜிஸ் பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்குதான் என்பதால் முழு அமெரிக்கர். அவர் சந்திக்கும் வேலை/முடிவுகள்/அன்றாட/தத்துவ/கனவு/உறவுச் சிக்கல்களின் தொகுப்பே இத்தொடர்.. அவரே உருவாக்கியது. நம்மவர் என்பதால் (முடிவெடுக்க திணறும் மத்திம வயது என்பதாலும்) உடனே அவரோடு சேர்ந்து கொள்ள முடிகிறது.. நகைச்சுவைத் தொடர் ரசிகர்களுக்கு நிச்சயம் பரிந்துரைக்கிறேன்..


முழுதும் படிக்க..

May 28, 2016

தெரு கிரிக்கெட் ‬..1

'மூணு பால் ஆடிட்டு போய்டுவேன்.. சும்மா போடுங்கடா' விளையாட்டின் நடுவில் திடீரென புகுந்து ஓசி காஜ் ஆடும் முடித்தொடைத்தடியன்கள் பதின்மங்களில் என் எதிரிகள். பத்துக்கு பத்து 'கிரௌண்டில்' விளையாடும் நாங்கள் தூக்கி அடிச்சிறாதீங்கன்னா எனும் பதைப்போடுதான் 'பேட்'டை கொடுப்போம். மூன்று என்றால் ஆறு பந்துகள் ஆடுவார்கள். சரியாக ஆறாவது பந்தை நான்கைந்து அடுக்ககங்களுக்கு அப்பால் போவது போல் வெறியுடன் அடித்து விட்டு சென்று விடுவார்கள். கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே பந்தை தேடிக்கிளம்புவோம்.

பக்கத்தில் சிறுவர்கள் விளையாடும் சலசலப்பு. சும்மா மூணு பந்துகள் ஆடலாமா எனத் தோன்றுகிறது.

(தொடரும்)
முழுதும் படிக்க..

Jan 17, 2016

வைரல் (அறிவியல் புனைவு)

வினோத தொத்து வியாதி ஒன்று பரவியது. 'இந்த நோய் எனக்கு வந்துவிடுமோ' என்று யாராவது பயந்தால், அந்த நோய் உடனே அவருக்குத் தொத்திக்கொண்டு சரியாக ஒரு நிமிடத்தில் இறப்பு. அதற்கு வாலி என்று சம்பந்தமில்லாமல் பெயர் சூட்டுவதற்குள் அப்படி ஒரு பெயரை யோசித்தவரும் பயந்து பலியானார்.

அந்த வைரஸ் பெரும் சக்தி பெற்றிருந்தது. அதற்குத் தேவையானதெல்லாம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மூளையில் அதைப்பற்றின பயம். உடனே பரவிவிடும். இப்படி ஒன்று பரவுகிறது என்று செய்தி வாசிப்பாளர் வாசித்ததுமே ஒரு நிமிடத்தில் இறந்தார். ஒரு சிலர் செய்தி வாசிக்கும்போது யோசிப்பதில்லை என்பதால் அவர்கள் மட்டும் அப்போதைக்குத் தப்பி பிறகு பொறுமையாக இறந்தனர். செய்தி எழுதுபவர்களுக்கும் அதே தான் நடந்தது.

இந்த நோய் ஏற்கனவே கூட ஒருமுறை தோன்றியிருக்கிறது. ஆனால் அப்போது இது சிந்தனையினால் பரவும் என்று தெரியாததால் முதல் சில பேருடன் அமுங்கிவிட்டது. இந்த தடவை பேரழிவை ஏற்படுத்திவிட்டே மறையும் போல் தோன்றுகிறது. பேஸ்புக், ட்விட்டரிலும் அந்த நோயைப்பற்றி பகிர்ந்து பரப்பிக் கொத்துக் கொத்தாக இறந்தனர். பரப்பினால் பரவும் என்று தெரிந்தாலும் பரப்பினார்கள். இனி இந்த நோயைப்பற்றி யாரும் பேசக்கூடாது என அரசு தடை பிறப்பித்தது. ஆனால் தடையாணை வெளியிடுவதற்குள் அதிகாரிகள் அனைவரும் இறந்தனர். ஆனால் உப விளைவாக ஒரு நிமிட அன்பு ததும்பி ஓடியது. முந்தைய நிமிடம் வரை வெறுப்பை உமிழ்ந்தவர்கள் கூட பயந்ததும் கடைசி நிமிடத்தில் அனைவரிடமும் பரபரப்பான அன்போடு பழகினார்கள்.

கடைசியாக எஞ்சியவர்கள் குழந்தைகள், சுயமாக யோசிக்க முடியாத மனநிலை சரியாக இருந்தவர்கள் (இறந்தவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்று மாற்றி அழைக்கப்பட்டனர்), செய்தி பரவ முடியாத இடத்தில் இருந்த ஆதிவாசிகள் போன்றவர்கள்.

இவர்களுடன் அம்மாபாக்கம் ஏரியா பஞ்சாயத்து தலைவரும் பிழைத்தார். இப்படி ஒரு நோய் பரவுவதாகச் சொன்ன உதவியாளரிடம் அவர் கேட்டார், "இந்த பிரச்சினையில நமக்கு பணம் எதுவும் கிடைக்க வழியிருக்கா? எவ்வளவு தேறும்?"
உதவியாளர் பதிலேதும் சொல்வதற்குள் இறந்து விழுந்ததும் தலைவர் நோயைப்பற்றி அதற்குப் பிறகு சிந்திக்கவில்லை.


இன்னொரு முக்கியமான விஷயம். இக்கதையின் கடைசி வரியை எழுதி முடித்ததும் கதாசிரியர் ஒரு நிமிடத்தில் மாண்டார். உங்களுக்கு இன்னும் அறுபது நொடிகள் அவகாசம்.


("ஆவி டாக்கீஸ்" குறும்பட சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)


முழுதும் படிக்க..

Jan 1, 2016

பார்த்த படங்கள் - 2015

$ = Interesting 
* = Very Good
# = Must watch

English:
Ron Burgundy
Midnight in Paris (2011) *
Man on the moon
Solaris (1972) *
Last Night (1998)
World War Z $
PreDestination #
Boyhood (2014) $
Brazil (1985)
Edge of Tomorrow $
Looper (2012) 
Dawn of the Dead (2004)
Nightcrawler (2014) #
Time Lapse $
Her (2013)
Mad Max Fury Road *
Step Brothers *
It Follows $
The Boy $
Idiocracy
The world's end
Clerks 2 #
Gone Girl *
Chasing Amy
Jay and Silent Bob Strike Back
Mall rats
Clerks *
Big Fish $
Never Let Me Go
Birdman $
Whiplash #
Dead Alive AKA Braindead
Neighbors (2014)
The Grand Budapest Hotel
The Martian $
Austin Powers - International Man of Mystery (1997)
Do The Right Thing $

World:
Motorcycle diaries (Argentina) #
Nameless Gangster Rules of the Time (Korea, 2012) $
Tangerines (Georgia) #
Blue is the warmest color $
Father Of A Soldier (Georgia) (1964) *
The Intouchables (French) #
Dead Snow
The Song of Sparrows #

Regional:
Johnny Gaddar *
PK *
Black Friday
Ishqiya
Oru vadakkan selfie (Malayalam)*
1983  (Malayalam)*
Manjadikkuru  (Malayalam)*
The Court #
Premam $
Ugly *
Manjhi *
Vicky Donar $

Tamil:
என்னை அறிந்தால்
வெள்ளைக்கார துரை
காக்கா முட்டை #
மாசூ
இன்று நேற்று நாளை #
பாபநாசம் #
36 வயதினிலே
பாகுபலி $
புறம்போக்கு *
குற்றம் கடிதல் *
கிருமி
நானும் ரவுடிதான்
தூங்கா வனம் $
உப்பு கருவாடு *

Series:
The office (US) - Seasons 1 to 9 #
Breaking Bad - Season 1 $
Big bang theory - Season 8 *


குறிப்பு: இப்பதிவு ஒரு நினைவுக்காக. சில படங்கள் மீள். சில படங்கள் விடுபட்டுள்ளன.


முழுதும் படிக்க..