Jul 6, 2010

முதல் நாள் கல்லூரி

நேற்று நடந்த சம்பவங்களே நினைவில் நிற்க மறுக்கும் போது, 7 வருடங்கள் முன் (அத்தனை காலம் தாண்டி விட்டதா?), முதல் நாள் கல்லூரி காட்சிகள் 'பச்சக்' என்று ஞாபகத்தில் எப்படி?


முதல் நாள் விடுதி அறையினுள் நுழைய, எனக்கு முன்னமே அங்கு இரண்டு பேர். உன்னுடன் தான் குப்பை கொட்ட வேண்டுமா என்ற பார்வைகள் (பின்னர் அறை குப்பைகள் வெளியில் கொட்டப்படவே இல்லை என்பது வேறு விஷயம்).. கைக்குளுக்கல்கள்.. விசாரிப்புகள்..





இருந்ததில் மூன்றாவது சிறந்த கட்டில் மற்றும் அலமாரியை இடம் பிடித்து PRASANNA என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பெரிய பெட்டியை இறக்கி வைப்பதற்குள் நான்காவது ஆளும் வந்து சேர்ந்தான். மீதம் இருந்த அந்த கட்டிலும் அலமாரியும் அவனிடம் பெரிதாக அபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை.


வளாகத்தில் புதிதாக சந்திப்பவர்களிடம் முதல் கேள்வி - என்ன டிபார்ட்மென்ட்? கொஞ்ச நேரம் பேசிய பிறகு என்ன மதிப்பெண்/Rank என்ற கேள்வியும் வராமல் இருக்காது. நிரம்ப மதிப்பெண் பெற்றவன் என்ற எண்ணத்துடன் இருந்த எனக்கு, அந்த மதிப்பெண்கள் கேட்டதும் 'என்னடா இது, எல்லாரும் நல்லா படிப்பவர்கள் போல இருக்கே' என்ற கலக்கம் (கல்லூரி படிக்க மட்டுமான ஒரு இடம் என்று அப்போது ஒரு 'பள்ளிக்கூட மனநிலை').


முதல் முறை வீட்டை விட்டு வெளியில் தங்கும் எனக்கு, பயத்தை விட ஒரு வித எதிர்பார்ப்பே மேலோங்கி இருந்தது. நான் எங்கே பயப்படுகிறேனோ என்று கிளம்பும் சமயத்தில்  அம்மா அவர் பயந்து சொன்னது, 'எதுக்கும் பயப்படாத.. பிடிக்கலேனா உடனே ரயில் ஏறி ஊருக்கு வந்துடு. அங்கேயே கூட எப்படியாவது பாத்துக்கலாம்..'


ஆனால் எனது வாழ்வின் சிறந்த வருடங்களை அங்குதான் கழிக்கப்போகிறேன் என்று அப்போது எனக்கு தெரியாது.. இந்த நினைவுகள் என்ன குளிர்பானமா மடக்கென்று குடிப்பதற்கு? ராட்சச பேஸ்டை (Paste) போல.. கொஞ்சம் கொஞ்சமாக பிதுக்கி எடுத்து கொடுக்கிறேன்.. இப்போதைக்கு அறிவுரை - புதிதாக கல்லூரியில் சேரப்போகும் மாணவர்களுக்கு.. :)


கல்லூரி வாழ்கையை முதல் நொடியில் இருந்தே மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். வேகமாக போய்க்கொண்டு இருக்கும் ரயில் பயணத்தில், அற்புதமான ஒரு காட்சி குபுக்கென்று தோன்றி மறைவது போன்றது அது. இன்னும் நன்றாக பார்த்திருக்கலாமோ என்று பின்பு ஏங்கலாமே தவிர, திரும்பி வராது.


வாழ்த்துக்கள்..

20 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனுபவித்தவனுக்கு தான் தெரியும் இதன் அருமை...

என்றும் எப்போதும் நினைவில் வரக்கூடிய ஒரு சுகமான வலியுடன் கூடிய வசந்த காலங்கள் அது ..

http://rkguru.blogspot.com/ said...

கல்லுரி வாழ்வு.... பசுமை நிறைந்த நினைவுகள்....

ஜெய் said...

// இருந்ததில் மூன்றாவது சிறந்த கட்டில் //
ஒரு வரியில நிறைய அர்த்தங்கள்... ரசிக்கிறமாதிரி...

பழைய ஞாபகங்களை கொண்டு வந்துருக்கீங்க... :)

ஜில்தண்ணி said...

//ராட்சச பேஸ்டை (Paste) போல.. கொஞ்சம் கொஞ்சமாக பிதுக்கி எடுத்து கொடுக்கிறேன் //

பிதுக்குங்க பிதுக்குங்க
கேக்குறோம்

இரண்டாம் நாள் கல்லூரி சீக்கிரம் போடுங்க

Ranjithkumar said...

நன்றி நண்பரே நல்ல பதிவு.

Chitra said...

கல்லூரி வாழ்கையை முதல் நொடியில் இருந்தே மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். வேகமாக போய்க்கொண்டு இருக்கும் ரயில் பயணத்தில், அற்புதமான ஒரு காட்சி குபுக்கென்று தோன்றி மறைவது போன்றது அது. இன்னும் நன்றாக பார்த்திருக்கலாமோ என்று பின்பு ஏங்கலாமே தவிர, திரும்பி வராது.


....rightly said.... :-)

சிநேகிதன் அக்பர் said...

ம்ம்ம்... மலரும் நினைவுகள்.

அண்ணாமலை..!! said...

கடைசி பாரா கலக்கல்!
நல்ல ஒப்புமை!

மகேஷ் : ரசிகன் said...

:)

மகேஷ் : ரசிகன் said...

ஹை.... நம்ம காலேஜ் பத்தி பதிவா?

ரைட்டு..... ஆவலுடன் வெய்ட்டிங்க்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//கல்லூரி படிக்க மட்டுமான ஒரு இடம் என்று அப்போது ஒரு 'பள்ளிக்கூட மனநிலை//

super statement... FIR போட்டுடலாமா? ha ha ha

ஹேமா said...

பிரசன்னா...
என்ன திடீர்ன்னு ஞாபகங்கள் !

Prasanna said...

ஜெய் has left a new comment on your post "முதல் நாள் கல்லூரி":

// இருந்ததில் மூன்றாவது சிறந்த கட்டில் //
ஒரு வரியில நிறைய அர்த்தங்கள்... ரசிக்கிறமாதிரி...

பழைய ஞாபகங்களை கொண்டு வந்துருக்கீங்க... :)

----------

@ ஜெய்,
ஆமாம் ஜெய். தலைங்க படம்லாம் பார்த்த பிறகு ஒரு முடிவு எடுத்துருக்கேன்.. அதாவது வளவளான்னு எழுதாம, ஒரே வரியில் பல அர்த்தங்களை கொண்டு எழுதனும்னு. ஆனா அது ரொம்ப கஷ்டம்னு மட்டும் தெரியுது..

மேலும் அந்த வரியை சேர்த்ததன் காரணம், இப்படி இருப்பவர்கள் பின்னாட்களில் எப்படி மாறப்போகிறார்கள் என்பதற்கு ஒரு முன்னோட்டமாக..

Prasanna said...

வெறும்பய has left a new comment on your post "முதல் நாள் கல்லூரி":

அனுபவித்தவனுக்கு தான் தெரியும் இதன் அருமை...

என்றும் எப்போதும் நினைவில் வரக்கூடிய ஒரு சுகமான வலியுடன் கூடிய வசந்த காலங்கள் அது ..

-----------

@ வெறும்பய,
சுகமான வலி - முற்றிலும் உண்மை...!

Prasanna said...

rk guru has left a new comment on your post "முதல் நாள் கல்லூரி":

கல்லுரி வாழ்வு.... பசுமை நிறைந்த நினைவுகள்....

-----------

@ rk guru,

அது என் அப்படி என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன் :)

Prasanna said...

@ ஜில்தண்ணி - யோகேஷ்,
ஹி ஹி.. ஒரொரு நாளா இல்லாம.. ஒவ்வொரு நினைவுகளா பிதுக்குகிறேன் ;)


@ R. Ranjith Kumar,
முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும், நன்றி :)


@ Chitra,
Thank you akka..


@ அக்பர்,
ஆமாம்.. மறுமலர்ச்சி :)

Prasanna said...

@ அண்ணாமலை,
அட நல்ல பகிர்வு..மிக்க நன்றி!



@ மகேஷ் : ரசிகன்,
அதே தான்னே :) எத எழுதறது எத விடறதுன்னு தான் தெரியல.



@ அப்பாவி தங்கமணி,
FIR போட்டே ஆக வேண்டும்.. வருங்கால மாணவர்களுக்கு உதவும்லா :)



@ ஹேமா,
என் வாழ்வின் மிகச்சிறந்த வருடங்கள் அவை.. ஆனா ஏங்க ஆரம்பிக்க என்று தெரியாமல் நிறுத்தி வைத்திருந்தேன் :)

அம்பிகா said...

பசுமை நிறைந்த நினைவுகள்.
நல்ல பகிர்வு.

தக்குடு said...

//வேகமாக போய்க்கொண்டு இருக்கும் ரயில் பயணத்தில், அற்புதமான ஒரு காட்சி குபுக்கென்று தோன்றி மறைவது போன்றது அது. இன்னும் நன்றாக பார்த்திருக்கலாமோ என்று பின்பு ஏங்கலாமே தவிர, திரும்பி வராது.//

கலக்கல் வரிகள் பிரசன்னா!! ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம் உங்க அனுபவத்தை படிக்க..:)

Prasanna said...

@ அம்பிகா,
உண்மைதான்.. வருகைக்கு நன்றி :)


@ தக்குடுபாண்டி,
கண்டிப்பாக.. கொஞ்சம் சக்கரை போல் கற்பனையும் கலந்து தான் தருவேன் :)
நன்றி..!