Jul 21, 2010

நண்பர்களை குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..

மனைவியும் இல்லாமல் தோழியும் இல்லாமல் அல்லாடுபவர்கள்,  இரண்டும் இருக்கும் நண்பர்களை (அட தனித்தனியாதான்... ஐயோ வேற வேற... அட எப்படி சொன்னாலும் தப்பா வருதே?) ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..
.
சார்ஜ் இல்ல என்று சொல்லி, 'அஞ்சு நிமிஷம் உன் மொபைல் குடு மச்சி' என்று வாங்கி விட்டு, தொலை நோக்கோடு நாம் ஆறு மாதத்திற்கு போட்டு வைத்து இருந்த ரீசார்ஜ் தொகையை ஒரே நாளில் தீர்த்து விடுவானே, அப்போ..


கூட வாடா என்று போட்டு இருக்கும் கைலியோடு இழுத்துச்சென்று, ஒரு இடத்தில் நின்று கொண்டு இருக்க.. திடீரென்று அவன் தோழி எங்கிருந்தோ வர.. ஓகே மச்சி பாப்போம் என்று மனசாட்சியே இல்லாமல், பேருந்துக்கு பணம் கூட கொடுக்காமல் நட்டாற்றில் விட்டு செல்லும்போது..


பசங்களோடு படத்திற்கு போக டிக்கெட் புக் பண்ணிக்கொண்டு இருக்க, அங்கு வந்து கிண்டலாக சிரிக்கும் போது.. 


'நீங்க எல்லாம் பட்டிகாட்டானுங்க மாதிரி இருக்கீங்களாம்' என்று தோழி சொன்னதாக கொலை வெறியுடன் சொல்லி ரணகளப்படுத்தும்போது..


ஒரு டீ கூட எங்களுக்கு வாங்கித்தராமல், அந்த பக்கம் புது துணி, செருப்பு எல்லாம் வாங்கி கொடுக்கும் போது..


திடீரென்று சம்பந்தம் இல்லாமல் நடந்து கொள்ளும்போது.. உதா. வெளியூர் டூர் ப்ளான் எல்லாம் போட்டு, கெளம்ப இருக்கும் சமயத்தில், அடிக்கும் வெயிலில் போர்வையை போர்த்திக்கொண்டு  'நான் வரல' என்று சொல்லும் போது.. 


டைப் பண்ணி வைத்திருக்கும் இந்த இடுகையை பார்த்து, மச்சி பொறாம தான? என்று சரியாக கணிக்கும்போது (லைட்டா)..

49 comments:

Karthick Chidambaram said...

கலக்குறீங்க தலைவா .... உங்களுக்கு தோழி யாரும் இல்லையா ? :-)

பிரசன்னா said...

//கலக்குறீங்க தலைவா .... உங்களுக்கு தோழி யாரும் இல்லையா //

இப்படி பொது இடத்தில் கேட்டு அசிங்கப்படுத்தும் போது (ஹீ ஹீ சும்மா)

சௌந்தர் said...

கலக்கல்.... நண்பர்களால் மிகவும் பாதிக்க உள்ளார் போல

Jey said...

தல, எனக்கென்னமோ, அடுத்தவங்கள நீங்க இந்த மாதிரி கொலையா கொண்டுட்டு, இங்க வந்து அடுத்தவங்கள( ஃபிரண்ட்ஸத்தான்) திட்டுரீங்களோனு தொனுது....

சரி சரி நடத்துங்க.., நல்லா சுவாரஸ்யமாத்தான் எழுதிருகீங்க.

பிரசன்னா said...

@ சௌந்தர்,
இப்படி நண்பர்கள வச்சிக்கிட்டு என்ன பண்றது சொல்லுங்க :)


@ Jey,
ஒரு படைப்பாளிக்கு (நாந்தான்) இந்த சுதந்திரம் கூட இல்லனா எப்படி ஹீ ஹீ

தர்ஷன் said...

அருமை

கார்க்கி said...

ஹிஹிஹிஹி

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

அண்ணாமலை..!! said...

"ஏழு தருணங்கள் தான் இருக்கு!
மத்த மூணையும் கமெண்ட்-லயே தேத்துறதா திட்டமா?
"

என்பது போன்ற ஏடாகூட கேள்விகள் கேட்கும்போது!-ந்னு போடாதீங்க!!!!
:)

பத்மா said...

heheeh nice

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... சூப்பர் பிரசன்னா. இன்னும் நிறைய பாயிண்ட்ஸ் இருக்கு. நான் தொடரவா..

பிரசன்னா said...

@ தர்ஷன், எது நான் படர அவஸ்தையா ஹி ஹி


@ கார்க்கி & T.V.ராதாகிருஷ்ணன்,
மிக்க நன்றி :)


@ அண்ணாமலை,
ச்ச ச்ச அப்படி எல்லாம் செய்வனா :) அது என்ன கணக்கு பத்துன்னு தான் எழோட முடிச்சாச்சு.. அது இருக்கு எக்கச்சக்கமா :)

பிரசன்னா said...

@ பத்மா, Thanks :)


@ விக்னேஷ்வரி,
ஆமா நீங்க சொல்ற மாதிரி எக்கச்சக்கமா இருக்கு.. சூட்டோட சூடா போடலாமேன்னு அவசர அவசரமா போட்டுட்டேன்..
நீங்களும் தொடருங்கள் :)

Balaji saravana said...

"சரக்குக்கு மட்டுமே கஷ்டப்பட்டு காசு தேத்தி இருக்கும் போது
சைடு டிஷ்க்கு தந்தூரி கேட்கும் போது"
y blood, same blood...

super prasanna..

பரிசல்காரன் said...

நாட்ல எல்லாருமே குத்து வாங்கியே தீரணும்போல இருக்கே....

விக்னேஷ்வரி said...

தோழியையும் குத்தியாச்சு பிரசன்னா. :)
http://vigneshwari.blogspot.com/2010/07/blog-post_21.html

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நல்லாருக்கு நண்பா

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்லா பண்ணியிருக்கீங்க பிரசன்னா, ஆனா ரொம்ப கொஞ்சமா, பர்ஸ்ட் கியர் போட்டு செகண்ட் வர்றதுக்கு முன்னாடியே, பிக்கப் பண்றீங்கன்னு நினைக்குறதுக்குள்ள ஆஃப் பண்ணிட்டீங்க. :-))

க‌ரிச‌ல்கார‌ன் said...

என்ன‌ப்பா இது எந்த‌ ப‌க்க‌ம் போனாலும் ஒரே குத்தா இருக்கு??

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

இந்த வாரம் குத்து வாரம்....

எம்.எம்.அப்துல்லா said...

இஃகிஃகி :)

அஹமது இர்ஷாத் said...

ரைட்டு நண்பா..

அக்பர் said...

பொறாமையா பாஸ் :)

ஹேமா said...

இதைவிட தனிய இருக்கலாம் பிரசன்னா.அழுதாலும் பரவால்ல.சீரியல் பாருங்க.

பிரசன்னா said...

@ Balaji saravana,
உங்களையும் விட்டு வைக்கலியா பய புள்ளைக.. வாங்க வாங்க :)


@ பரிசல்காரன்,
ஜப்பான்ல, ஒரு கடை இருக்கு.. வர்றவங்களுக்கு பிடிக்காதவங்கள போட்டோ புடிச்சி ஒரு அறையில் மாட்டி விடுவார்களாம்.. அந்த அறையில் போய், அந்த போட்டோவ பாத்து கேவலமா திட்டி ஆசை தீர அதை தாக்கலாம்... அந்த கடைக்கு அவ்வளவு கூட்டம் வருதாம்.. இதில் இருந்து என்ன தெரியுதுன்னா.. ஐயோ யாரோ அடிக்க வராங்க,,

பிரசன்னா said...

@ விக்னேஷ்வரி,
ஓட்டும் குத்தியாச்சு :)


@ |கீதப்ப்ரியன்|Geethappriyan|,
மிக்க நன்றி :)@ ஆதிமூலகிருஷ்ணன்,
வாசகர்களுக்கு குறைவா தந்து நிறைவை ஏற்படுத்தனும்னு எங்கயோ படிச்சத நாந்தான் தப்பா புரிஞ்சிகிட்டேன் போல இருக்கு ஹீ ஹீ..
அப்படி இல்ல.. எக்கச்சக்கமா இருக்கு.. சூட்டோட சூடா போடலாமேன்னு அவசர அவசரமா போட்டுட்டேன்..

பிரசன்னா said...

@ க‌ரிச‌ல்கார‌ன்,
ரொம்ப பதம் பாத்துட்டேனோ :)


@ வழிப்போக்கன்,
ஹா ஹா ஹா..


@ எம்.எம்.அப்துல்லா,
நம்ம கடைக்கு பெருந்தலைகள் எல்லாம் ஒண்ணா வந்துருக்கீங்க.. மகிழ்ச்சியா இருக்கு.. வாங்க வாங்க :)

பிரசன்னா said...

@ அஹமது இர்ஷாத்,
என்ன உங்க 'நண்பா'ல ஏதோ சூட்சமம் தெரியுது? ஒரு வேலை நீங்களும்??? :)


@ அக்பர்,
லைட்டா :)


@ ஹேமா,
அக்கறை எப்போமே பச்சைதான்னு சொல்றீங்க.. ஹ்ம்ம் ஒண்ணு சொல்றேன் யார்கிட்டயும் சொல்லாதீங்க.. சீரியலும் பாத்துட்டு தான் இருக்கேன் :)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

எங்க பாத்தாலும் என்ன ஒரே குத்தா இருக்குது :)

//ஆறு மாதத்திற்கு போட்டு வைத்து இருந்த ரீசார்ஜ் தொகையை ஒரே நாளில் தீர்த்து விடுவானே, அப்போ..//

நாமெல்லாம் ஆறு மாசத்துக்கு பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ற ஆளாச்சே :)

//ஒரு டீ கூட எங்களுக்கு வாங்கித்தராமல், அந்த பக்கம் புது துணி, செருப்பு எல்லாம் வாங்கி கொடுக்கும் போது..//

அதேதான் அதேதான்
இங்க சிங்கில் டீக்கு காசு இல்லன்னு சொல்லிபுட்டு,அவன் ஆளுக்கு அருண் ஐஸ்கிரீம் அதுவும் 35 ரூபாய்க்கு,குத்தனும் டா :(

தனி காட்டு ராஜா said...

உங்ககிட்ட இருந்து இன்னும் நெறய எதிர்பார்க்கிறோம் .....

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மச்சி இத சொல்ல விட்டுட்டியே

நம்மள பாத்து எழுதின பயலுவோ எப்டியோ பாஸ் ஆகிட்டு,எல்லாம் என் திறமைடா அப்டின்னு ஒரு பிட்ட போடுவானுவோ பாரு

ஓங்கி ஒரு குத்து விடணும் டா :)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அவனுக ஃபிகருகிட்ட சீன் போட நம்ம பைக்க வாங்கிகிட்டு நம்மகிட்டயே பெட்ரோல் போட காசு கேப்பானுங்க பாரு அப்பவும் கு_____ :)

Cable Sankar said...

இந்த நண்பா உனக்கொரு குத்து.. சப்பக்..

தெய்வசுகந்தி said...

:-))!!!

செ.சரவணக்குமார் said...

எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்க.. ரைட்டு நடத்துங்க.

rk guru said...

குத்துயுங்க எசமான் குத்துங்க

பிரசன்னா said...

@ ஜில்தண்ணி - யோகேஷ்,
//நாமெல்லாம் ஆறு மாசத்துக்கு பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ற ஆளாச்சே//

இப்படி இருக்கருதோட அருமை எங்க அவனுக்கு தெரியுது :)

//நம்மள பாத்து எழுதின பயலுவோ எப்டியோ பாஸ் ஆகிட்டு//

இது வேற சப்-ஹெடிங் கீழ வருது.. அத தனியா போட்டு குத்திடுவோம் :)

//நம்ம பைக்க வாங்கிகிட்டு நம்மகிட்டயே பெட்ரோல் போட காசு கேப்பானுங்க

இந்த பிரச்சினைக்கு தான் நான் பைக்கே வாங்கல :)

பிரசன்னா said...

@ தனி காட்டு ராஜா,
சரி இனி பாவம் பாத்தா முடியாது.., எழுத்துக்களை வாரி வழங்கறேன் இருங்க இருங்க :)


@ Cable Sankar,
ஹா ஹா அந்த சவுண்டு எபக்ட்டு தான் சூப்பர் :)


@ தெய்வசுகந்தி, மிக்க நன்றி!


@ செ.சரவணக்குமார்,
எல்லாரும் உள்ளுக்குள்ள எவ்வளவு வன்மத்த வச்சிக்கிட்டு இருக்காங்க பாருங்களேன் :)


@ rk guru,
இதுக்கு மேல குத்தறதுக்கு ஏதும் இல்லன்னு நினைக்கிறேன் :) செவுத்த கூட விட்டு வெக்கல பய புள்ளைக..

தக்குடுபாண்டி said...

me only incoming call, no outgoing...:)) yeppuudiii!!...:))

நல்லா இருக்குடே!!...:)

ILLUMINATI said...

ஹிஹி,அது ஏன் மச்சி எனக்கு மட்டும் எப்பயும் வெட்டனும்னே தோணுது? ;)

ILLUMINATI said...

அதிலும் குறிப்பாக,ஆட்டைப் பார்த்த உடனே மஞ்சத்தண்ணி நினைவுக்கு வருவது ஏன்? :)

Chitra said...

'நீங்க எல்லாம் பட்டிகாட்டானுங்க மாதிரி இருக்கீங்களாம்' என்று தோழி சொன்னதாக கொலை வெறியுடன் சொல்லி ரணகளப்படுத்தும்போது..


...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... கும்மாங் குத்துதான்....

பிரசன்னா said...

@ தக்குடுபாண்டி,
ஹா ஹா நீங்க தான் என்ன மாதிரியே ஒரு நல்ல பிள்ளைன்னு (!) தெரியுமே :)


@ ILLUMINATI,
வாய்யா வா.. எப்படி உன்ன பத்தி கரக்டா எழுதி இருக்கேனா ;)


@ Chitra,
இதுக்கு மட்டும் நல்லா சிரிங்க :(
:)

Shri ப்ரியை said...

ரொம்ப அடிபட்டுட்டிங்கன்னு புரியுது.... image ரொம்ப demage ஆயிடிச்சி போல......

philosophy prabhakaran said...

தங்களது பழைய பதிவுகள் சிலவற்றை இன்றுதான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது... தமிங்கிலம் சிறப்பாக இருந்தது...

ப்ரியமுடன் வசந்த் said...

ஹா ஹா ஹா...

//பிரசன்னா said...
//கலக்குறீங்க தலைவா .... உங்களுக்கு தோழி யாரும் இல்லையா //

இப்படி பொது இடத்தில் கேட்டு அசிங்கப்படுத்தும் போது (ஹீ ஹீ சும்மா)//

:)))))

பிரசன்னா said...

@ Shri ப்ரியை,
உன்மைஙர்தால விட்டுட்டேன்.. இல்ல நடக்கர்தே வேற :)

@ philosophy prabhakaran,
மிக்க நன்றி பிரபா.. விடாதீங்க எல்லாத்தையும் படிங்க :)

@ ப்ரியமுடன் வசந்த்,
நன்றி அண்ணே :)

Shri ப்ரியை said...

ஆஹா.... அவரா நீங்க.....????????

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா.. அனுபவ பதிவோ...