நாய எவன் கண்டு புடிச்சான்? அது சரி எல்லா ஜீவா ராசி போல் அதுவும் ஒன்னு. எனக்கு அது மேல் இருக்கும் பயம் போல வேற யாருக்குமே இல்லையா னுட்டு சில சமயம் எரிச்சலா இருக்கும். எனக்கும் நாய்க்கும் ஆன இந்த பகை இன்னிக்கி நேத்திக்கி இல்ல. ரைட் பரம் மை சைல்ட் வூட். எத்தனை கிலோ மீட்டர் ஓடி இருப்பேன் இது வரைக்கும்? ஆனால் பெருசா கடி வாங்கினது கெடயாது. ஏனோ ஒரு எரிச்சல். கடுப்பு. பயம். ஏழு கழுத வயசு ஆய்டுச்சு. நாய் பயம் மட்டும் போக மாட்டேன்குது. எரும ச்சே.
இப்படி தான் ஒரு தடவ ஸ்கூல் முடிச்சி வந்துகிட்டு இருந்தேன். தெனம் அந்த வழியாதான் வருவேன். அன்னிக்கி பாத்து மூஞ்சில வெல்ல கலர் அடிச்சகருப்பு நாய் (கிட்ட தட்ட இந்த படத்துல இருக்கற மாதிரி, இன்னும் கொடூரமா). மொதல்ல ஒரு உர்ர்ர். அப்புறம் ஒரு கர கரப்பு. அப்புறம் ஆரம்பிச்சது பாருங்க. கொரகொர நு கொரைகுது. இதுல அந்த தெரு நாய் அத்தனையும் சப்போர்ட்க்கு சேர்ந்துகிடுச்சு. சப்த நாடியும் அடங்கி போச்சு. அந்த நேரம் பார்த்து என் கிளாஸ் பொண்ணுங்க அந்த பக்கம் வர, வெளிறி போன என் மூஞ்ச பாக்க, இத்தனநாள் நான் சேத்து வச்சி இருந்த கௌரவம் செத்து போச்சு. என் ரவுடி இமேஜும் போச்சு. அன்னிக்கி முடிவு பண்ணினேன். நாய் தான் என் ஜென்ம எதிரினு .
நாயை கூட விடுங்க. அத வளக்கரவுங்க பன்ற சேட்டை இருக்கே. ஐயோ. அதுக்கு நாயே பரவ இல்ல. மூஞ்சி உசரத்துக்கு ஒரு நாய். அவங்க வீட்டுக்கு ஒரு நாள் போனேன் (முன்னாடியே தெரியாது. இப்டி ஒன்னு இருக்குன்னுட்டு). அதுக்கு வழக்கமா நாய் முதலாளிங்க யூஸ் பண்ற டயலாக் - "சும்மா வாங்க, கடிக்காது."
அது தண்ணி அடிச்ச பண்ணி ஆட்டம் கண்ணு ரெட் ஆயி கொர்ர் நு சொல்லுது. டேய் உனக்கு மனசாட்சியே இல்லையா டா? நாயே வளக்க சொன்ன ஒரு குதுரைய வளத்துகிட்டு இருக்கான் (இது முதலாளிக்கு, கௌண்டர் ஸ்டைலில் படிக்கவும்). அப்டியே வளத்தாலும் யாராவது விருந்தாளி வந்தா கட்டி போட வேண்டியதானே? அது வந்து கால தூக்கி என் தோளுல வெக்குது (என்ன ரொம்ப புடிக்குதாம்!).
No comments:
Post a Comment