எனது 'ட்விட்டர் மொழி'களை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.. பிடித்து இருந்தால் ஃபாலோவுங்கள்....
டூர் போய்விட்டு ஆர்குட்டில் போட்டோ போடுவது போய், ஆர்குட்டில் போட்டோ போடுவதற்காகவே டூர் போகும் காலமிது.
############
ஒவ்வொரு பவர் கட் போதும் வீட்டில் சண்டை வருவதை கண்டு பிடித்து இருக்கிறேன். மனிதனுக்கு என்னேரமும் பொழுது போக்கு தேவை படுகிறதோ..?
############
இந்த 'சேனா'க்கள் பண்ணுகிற கூத்தில், சேன கிழங்கு சாப்பிட கூட பயமா இருக்கு..
############
தயவு செய்து,ஒருவர் சாப்பிடும் போது,அவருடைய உள் நாக்கை தேடாதீர்கள்
############
பாபு, யமுனாவை சென்னையில் முதல் முறை பார்க்கும் அந்த காட்சி, நம்மையும் கதி கலக்கி விடுகிறது #மோகமுள்
############
"தலைவி உன் தமிலுக்கு, என் தமில் நாட்டை தருகிறேன்" - இளையராஜாவின் கிண்டல் :-) #nowhearing கோவா பாட்டு
############
சிலர் இயற்கையாகவே செயற்கையாக இருக்கிறார்கள் #அனுபவம்
படு பயங்கர பிஸி ஆகி, இந்த சைடு வர முடியாமல் ஆகி விட்டது. இடைவெளி விழுந்த உடனே, பதிவு எழுதுவதில் உள்ள கவர்ச்சி கொஞ்சம் குறைய வேற ஆரம்பித்தது.. ஒரு 4 புத்தகங்கள் படித்தேன் (ஜெ.மோ -1, சுஜாதா-3).. திரும்பி எப்படியோ எழுத வேண்டும் என்று உண்டாகி விட்டது.. ஆக்கி விட்டார்கள்..
5 comments:
நிறைய எழுதுங்கள். உங்கள் எழுத்தைக் காண ஆவலுடன் இருக்கிறோம்.
@ஜெயந்தி..
நன்றி :)
கலக்குங்க கொத்து.. இது செம குத்து..
@ருத்ர வீணை®,
Thanks for your visit:) glad that you liked it..
நண்பரே, இந்த பதிவை என் பதிவில் சுட்டி இருக்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றிங்க.
http://surendharj.blogspot.com/2010/08/blog-post_29.html
Post a Comment