Mar 26, 2010

ஒரு புதுப்பதிவனின் மனக்குமுறல்கள்

அவன் எழுத ஆரம்பித்து ஒன்றரை மாதம் ஆகிறது. இது வரை இலக்கியங்கள் எதையும் படைத்து விடவில்லை. பேமஸ் பதிவர்களின் பதிவுகளை உடனுக்குடன் படிப்பான். பின்னூட்டம் ரொம்ப போட மாட்டான். பெரிய பெரிய ஆளுங்க வர்ற இடம், சின்ன பிள்ளத்தனமா ஏதாச்சும் போட்டு, பேர (!) கெடுத்துக்க வேணாமே அப்படின்னு ஒரு நெனப்பு. அவங்க எல்லாரும் நல்ல விதமாத்தான் பதில் போடுவாங்க. இருந்தாலும்..


நல்லா யோசிச்சி வச்சி ஒரு கான்செப்ட எழுதலாம்னு பாத்தா, அதே விஷயத்த ஏற்கனவே எழுதி இருப்பாங்க. வேற ஏதோ ஒன்ன அடிச்சி புடிச்சி போட்டா, views ஓரளவுக்கு இருக்கும், அப்பப்ப நல்ல Comments வரும். தமிழிஷ்ல பிரபலமாயிடும். ஆனா கமென்ட், பாலோவர்ஸ் கொஞ்சம் தான் என்பதில் வருத்தமே. இதனால் ஓட்டு, கமென்ட், பாலோவேர்ஸ் ஆள் சேர்ப்பது போன்ற விஷயங்களில் இவன் கவனம் திசை திரும்ப ஆரம்பித்தது. எதற்க்காக எழுத வந்தோம் என்பதற்கு கொஞ்சம் விடையும் கிடைத்தது..

பெரிய பதிவர்களுக்கு 'மீ த ஃபர்ஷ்டுனு' போட்றதுக்கு பெரிய அடி தடியே நடக்கும் (மீ செகண்ட், தர்ட்க்கு கூட). இப்படி நாமும் ஒரு நாள் வருவோம்னு ( மீ த ஃபர்ஷ்டு போட இல்ல, வாங்க..) பயலுக்கு நப்பாசை. நெலமை இப்படி  இருக்க,

கட் பண்ணா - ஒரு வருடம் கழித்து..

'ஏன் பின்னூட்டத்துக்கு எல்லாம் பதிலே போட மாட்டேங்கரீங்க?'
'ஏன் மீள் பதிவு போட்டு கொல்றீங்க?' 
'நேரமின்மைதான் ஒரே காரணம், உங்க விமர்சனங்களை நோட் பண்ணாம இல்ல'
'தொடர் பதிவுக்கு கூப்ட்டா எழுத முடியாதோ'?
'இலக்கிய பணிக்கு இடையூறாக இருப்பதால்.. சாரி..'
'500௦ பாலோவர்ஸ், வாழ்த்துக்கள்'
'ம்ம்.. நன்றி..'
'சர்வேசன் 2010 கதை போட்டில உங்களுக்குத்தான் முதல் பரிசு..வாழ்த்துக்கள்'
'மகிழ்ந்தேன்.. பணத்துக்காக எழுதவில்லை. பரிசுத்தொகையையும் உதவும் கரங்களுக்கு அளித்து விடுங்கள்'
'ஆஹா என்னே இவர் பரந்த மனப்பான்மை.. ஆஹா ஆஹா'





சட், தூங்குனதுல நேரம் போனதே தெரியல (இனி கனவுன்னு ட்விஸ்ட் கொடுக்கறவங்கள தூக்குல போட்டுடலாம்.. நானே இதுல கடைசியா இருந்துக்கறேனே?). ப்ளாக்கர் ஓபன் பண்ணி பார்த்தா ஒரு புது கமென்ட். பெரிய பதிவர் ஒருத்தர் 'பிடிச்சிருக்கு, ரசித்தேன்'னு போட்டுருக்கார். தலை கால் புரியல (அடுத்தத இன்னும் நல்லா கொடுக்கணும்.. ம் ம்..)

எது எப்படியோ, எழுத ஆரம்பித்ததில் இருந்து, கவனிக்கத்தக்க மாறுதல்கள் அவனிடம். மூளை முன்னிலும் அதிகமாக வேலை செய்தது. அவனை சுற்றி நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் (இத எழுதலாமா? வேணாம்.. அது? ம்ம் மைண்ட்ல வச்சி அப்பறம் யூஸ் பண்ணலாம்.. ). ஒவ்வொரு பாராட்டுக்கும் அளவில்லா மகிழ்ச்சி. அதிக உற்சாகத்துடன் வளைய வந்தான். எழுதணும், எதாச்சும்  எழுதணும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

என்ன ஒரே பிரச்சினை.. எழுத படிக்க என்று, பதிவுலகம் நேரத்தை பயங்கரமாக சாப்பிட ஆரம்பித்து விட்டது. வேலையையும் கெடுக்கிறது. நேரத்தை சரியாக மானேஜ் பண்ண வேண்டும். அச்சச்சோ விடிஞ்சு போச்சா? என் டீம் லீட் வர்றார்.. ஓகே, நைட் ஷிப்ட முடிஞ்சு போச்சு. கெளம்பறேன்.

லாகிங் ஆப்..

35 comments:

Prasanna said...

நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வித்தியாசமாக யோசித்தாலும், நாம் எழுதியதை வேறு யாரோ, எப்பொழுதோ, எழுதி விடுகிறார்கள்..

.
.
.
.

இதையும் யாராவது எழுதி இருப்பாங்களோ..?

Unknown said...

உண்மைதான் பிரபல பதிவர்கள் எனப்படுபவர்கள் கதைகள் இலக்கியவாதிகளாகி விடுகிறார்கள்

பழமைபேசி said...

//பிரபல பதிவர்கள் எனப்படுபவர்கள் //

இதுக்கான அளவுகோல் என்னங்க? எல்லாமும் மாயை!!

ஆத்ம திருப்திக்காகவும், தெரிந்ததைப் பதியவும், பொழுது போக்குக்காகவும், எழுத்துப் பயிற்சிக்காகவும்தான் இதுன்னு நினைச்சி எழுதுறேன் நான்....

துளசி கோபால் said...

மீ த ஃபோர்த்:-)

Paleo God said...

என்ன ஒரே பிரச்சினை.. எழுத படிக்க என்று, பதிவுலகம் நேரத்தை பயங்கரமாக சாப்பிட ஆரம்பித்து விட்டது. வேலையையும் கெடுக்கிறது//

நீங்க எழுதலைன்னாலும் ஒன்னும் பாதகமில்லை வேலையும் ஓய்வும் முக்கியம் நண்பரே ..:))

ஓய்வில் தெரிந்ததை எழுதுங்கள். போதும். இது உங்கள் டைரி அவ்வளவுதான்.

வாழ்த்துகள்.

Paleo God said...

சொல்ல விட்டுப்போச்சு நல்லா எழுதறீங்க பிரசன்னா.:)

அன்புடன் அருணா said...

பழமைபேசி says

/ஆத்ம திருப்திக்காகவும், தெரிந்ததைப் பதியவும், பொழுது போக்குக்காகவும், எழுத்துப் பயிற்சிக்காகவும்தான் இதுன்னு நினைச்சி எழுதுறேன் நான்..../
நானும் கூட!

ஜெய்லானி said...

//நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வித்தியாசமாக யோசித்தாலும், நாம் எழுதியதை வேறு யாரோ, எப்பொழுதோ, எழுதி விடுகிறார்கள்..

.
.
.
.

இதையும் யாராவது எழுதி இருப்பாங்களோ..?//


என்னுடைய முதல் பதிவ பாருங்க!!!

ஜெய்லானி said...

முதலுக்கும் இரண்டாவதுக்கும் ஒரு வருட கால வித்தியாசம்.

ராம்ஜி_யாஹூ said...

go with palamaipesi

கே.என்.சிவராமன் said...

அன்பின் பிரசன்னா,

நலமா? நானும். நட்பின் அடிப்படையில் சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

1. பதிவுலகில் புதியவர் / பழையவர் என்று யாரும் கிடையாது.

2. வலையுலகில் மட்டுமல்ல, எங்குமே பிரபலம் என்று யாருமில்லை. அப்படியிருந்தால், உங்களுக்கு நீங்களேதான் பிரபலம்.

3. வலைத்தளம் இல்லாத, வலையுலகில் எழுதாத பலர், வலையுலக வாசகர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் மறுமொழி எழுதுவதில்லை.

4. நமக்குத் தெரிந்ததை, நாம் வாசித்ததை, நமது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறோம் என்பது தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை. எழுத்திலும், அதில் பதிவாகும் அனுபவத்திலும் நேர்மையும், உண்மையும் இருந்தால், நிச்சயம் அந்த இடுகையைத் தேடி வாசகர்கள் வருவார்கள். ஒரு வருடம் கழித்துக் கூட வரலாம். வருகிறார்கள்.

5. வாசகர்கள் என்று யாருமில்லை. அப்படி யாரேனும் இருந்தால், அவர்களில் நாமும் இருக்கிறோமா என்று ஆராய்வது நல்லது.

6. நமக்கு பிடித்தமானவற்றை நாம் வாசிப்பது போலவே அவரவருக்கு ப்ரியமானதை அவரவர் வாசிக்கிறார்கள். வாசிப்பவர்களுக்கு ப்ரியமாக எழுதுவது ஒருவகை. நம் வாசிப்புக்கு ப்ரியமானதை எழுதுவது இன்னொரு வகை. இதில் நம் ப்ரியம் எதில் இருக்கிறது என்பதை சார்ந்தே ப்ரியமானவர்கள் கிடைப்பார்கள்.

7. காதல் முதல் அழுகை வரை எல்லோருக்குமே ஒரே உணர்வுதான். அந்த உணர்வுகளையே ஒவ்வொருவரும் பதிவு செய்கிறார்கள். அப்படி பதிவாகும் எழுத்தில் வித்தியாசம் தெரிவது அவரவர் மொழியை, அவரவர் எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான். நாம் யோசிப்பதை அடுத்தவர் எழுதிவிடுகிறார்களே என்று நினைக்காமல், நாம் யோசிப்பதை எழுத்தில் என்னவாக பதிவு செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது நல்லது என்பது என் எண்ணம்.

தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறோம்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சிநேகிதன் அக்பர் said...

அட எல்லோர் மனசுல உள்ளதையும் அருமையான சொல்லிட்டிங்க.

//என்ன ஒரே பிரச்சினை.. எழுத படிக்க என்று, பதிவுலகம் நேரத்தை பயங்கரமாக சாப்பிட ஆரம்பித்து விட்டது. வேலையையும் கெடுக்கிறது//

இதில் கவனம் அதிகம் தேவை. முதலில் வேலை பின்புதான் எல்லாமே.

வாழ்க்கையில் சில நல்ல போதைகளும் உண்டு அதில் பதிவெழுதுவதும் ஒன்று.

Dr.Rudhran said...

keep writing. you have a nice craft.

வாக்காளன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

அதே அதேதான்...
ஒரு புது பதிவர்..

வாக்காளன் said...
This comment has been removed by the author.
Prasanna said...

@A.சிவசங்கர்,
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி :)


@பழமைபேசி,
முழுக்க உண்மை. நானும் இதே எண்ணத்தில் தான் எழுத வந்தேன். ஆனால் கொஞ்ச நாட்களில் 'ஒட்டு' போன்றவற்றில் நோக்கம் திசை திரும்பி விட்டது.. இந்த பதிவு நான் எழுத வந்து சில நாட்களில் எழுதியது.. இப்பொழுது தான் நீங்கள் சொன்ன பக்குவம் வர ஆரம்பித்து இருக்கிறது..
கருத்திற்கு நன்றி :)

@துளசி கோபால்,
கனவை நனவாக்கி விட்டீர்களே.. வருகைக்கு நன்றி :)

Prasanna said...

@ஷங்கர்,
நீங்கள் சொல்வது சரி.. வருகைக்கும், ஊக்கத்திற்கும், கருத்திற்கும் நன்றி

@அன்புடன் அருணா,ராம்ஜி_யாஹூ,
அதையே செய்கிறேன் இனி.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...
ஆமாம், கிட்ட தட்ட ஒரு வருடம்! சுட்டியதற்கு நன்றி

Prasanna said...

@பைத்தியக்காரன்,
தங்களின் பின்னூட்டம், காட்டு பாதையில் நடக்க தொடங்கி இருக்கும் எனக்கு, ஒரு நிலவொளி போல்..

வருகைக்கும், ஊக்கத்திற்கும், கருத்திற்கும் நன்றி,

@அக்பர்,
//வாழ்க்கையில் சில நல்ல போதைகளும் உண்டு அதில் பதிவெழுதுவதும் ஒன்று//
Exactly இதே கருத்தை நானும் யோசித்து இருக்கிறேன்! வருகைக்கும், ஊக்கத்திற்கும், கருத்திற்கும் நன்றி

Prasanna said...

முகம் தெரியாத ஒருவரின் கருத்துகளை படித்து விட்டு வரும் நட்புணர்வும், அவர்களின் மீது காட்டும் அக்கறையும் பதிவுலகில் மிக சாதாரணமாக நடக்கிறது..வேறு எங்கும் இந்த அளவிற்கு சாத்தியமா, தெரியவில்லை..

Prasanna said...

@Dr.Rudhran,
I am humbled by your comment doctor. It gives tremendous confidence.. Thank you!

Prasanna said...

@முரளி,
வாங்க சகா :) வருகைக்கு நன்றி :)

எல் கே said...

@prassana
nice writing. i accept what was said by paitthiyakaaran and palamaipesi. recently i read in a blog written by a director that there should be a training center for bloggers in how to write . i tottaly disagree . beauty of the blog is that there are lot of people who never used to write before writes beautifully. In the name of training we should not spoil them.

i never worry abt comments and vote.
in between i have started a magazine http://vezham.co.cc
when u have time please read and let me know ur views

மரா said...

விடுங்க பாஸ்...இப்படியெல்லாம் யோசிச்சா நானெல்லாம் பதிவு போட முடியுமா?! இந்த உலகமே இப்படித்தான்.......எதையாச்சும் எழுவிக்கிட்டே இருங்க ஆனால் உங்களுக்கு புடிச்சிருக்கோனும்...அதேன் முக்கியம்....வாழ்த்துக்கள் பிரபல பதிவர்
ஆவுறத்துக்கு!!!

மணிஜி said...

தொடர்கிறென்..தொடருங்கள்...

Prasanna said...

@LK,
Me too agree. But, I think its good to learn the nuances of writing.. But that should not be done via 'coaching classes' but by continuous reading.

I am unable to open the link http://vezham.co.cc, any technical problem..?

Thanks for ur visit and comments..

@ மயில்ராவணன்,
//ஆனால் உங்களுக்கு புடிச்சிருக்கோனும்//
மிகவும் சரி..
வாழ்த்துக்களுக்கு நன்றி !

@மணிஜீ,
தொடர்வேன்.. தொடர்வதற்கு மிக நன்றி!

எல் கே said...

@prassanna
yes the site is down at present . I have mailed the hosting people regarding the same. it will be up soon

ராமலக்ஷ்மி said...

பழமைபேசி அவர்கள் சொல்லியிருப்பது போலவேதாங்க. என்னுடைய எண்ணங்களை சேமிக்கும் ஒரு இடமாகவே வலைப்பூ:)!

//நேரத்தை பயங்கரமாக சாப்பிட ஆரம்பித்து விட்டது. வேலையையும் கெடுக்கிறது. நேரத்தை சரியாக மானேஜ் பண்ண வேண்டும்.//

தெளிவாக இருக்கிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்!

சரவணகுமரன் said...

கலக்குங்க...

gulf-tamilan said...

/இதையும் யாராவது எழுதி இருப்பாங்களோ..?/
:)))

Anonymous said...

ஓ..நீங்களும் பிரபல பதிவராய்ட்டீங்க...இவ்ளோ பின்னூட்டம் குவிஞ்சிருக்கு!

Prasanna said...

@LK, Thanks LK!

@ராமலக்ஷ்மி,
அது தான் சரி! வருகைக்கும், வாழ்த்திற்கும், கருத்திற்கும் நன்றி :)

@சரவணகுமரன்,
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி :)

@gulf-tamilan,
வருகைக்கு நன்றி :)

@ஆர்.கே.சதீஷ்குமார்,
பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருக்கு.. இருந்தாலும் பிரபல பதிவருங்கர்த uncompartable ஆ பீல் பண்றேன் :)
வருகைக்கு நன்றி..!

வெங்கட் said...

ஆஹா.., வடை போச்சே..!
முந்திக்கிட்டீங்களே தல..!

Prasanna said...

@ வெங்கட்,
ஹீ ஹீ, ஏன் எழுதி Draft-இல் வச்சிருக்கீங்களா? பிளாக்கர் வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம் :)

தமிழ் மின் நூலகம் said...

யதார்த்தம்!