பொதுப்படையாக பார்ப்போம்,
ஏன் அரசியலில் இப்படி அதிகாரத்திற்கு போட்டி? இறுதியில் வரும் பணத்திற்காகவும், ஏற்கனவே சம்பாதித்த பணத்தை காப்பதற்காகவும் தானே?
'சக்தி' வாய்ந்த சாமியார்கள் எப்படி உருவாகிறார்கள். எப்படி/ஏன் அந்த சக்தி தக்க வைக்கப்படுகிறது (சிலர் திருட்டு பேர்வழிகள் என்று நிரூபமான பிறகும்)?
பெரும்பாலான கொலைகள் எதற்கு நடக்கின்றன?
கொஞ்சம் சப்பையாக பார்க்க வேண்டுமென்றால், சில அலுவகங்களில், எவ்வளவு அலைந்தாலும் ஞயாயமாக நமக்கு கிடைக்க வேண்டியதும் (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை) கிடைக்க மாட்டேங்கிறதே.?
Specific ஆக பார்த்தாலும் சரி.
அணு ஒப்பந்தம்? அக்கறையிலா செய்யப்படுகிறது? பின்னனியில் பணம் தான்..
இடைத்தேர்தல்? ஹீ ஹீ
மத வெறி.. ஏன் உருவாகிறது? மூலைச் சலவையினால்.. ஏன் மூலைச் சலவை? கட்சி வளர்க்க.. எதற்கு? அதிகாரம் வேண்டி.. அதிகாரம் ஏன்? மறுபடி பணம்.
இப்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணமே 98% செய்திகள்/பிரச்சினைகளுக்கு காரணம் என்று எண்ண வைக்கிறது. சரி, அதற்கு என்ன இப்போ என்று கேட்கிறீர்களா? ஒன்றும் இல்லை.. இது சரி, தவறு என்று எல்லாம் சொல்லவில்லை.. சும்மா பேப்பர் படிக்கும் போது தோன்றிய இந்த பணத் 'தியரியை' எழுதி உங்கள் கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று தான்..
3 comments:
இந்த கால கட்டத்தில், அனைத்துமே
பணத்தை வைத்துதான் மதிப்பிட படுகிறது.
அட.. பணம்தான் பிரச்சனையா..?
பதிவு நல்லாத்தான் இருக்கு.. ஆனா, எங்கள யோசனை பண்ணி பார்க்க சொல்லக்கூடாது..
@சைவகொத்துப்பரோட்டா,
வருகைக்கு நன்றி, வெஜ் counter part அவர்களே :)
@பட்டாபட்டி,
ஹீ ஹீ இனி யோசனை எல்லாம் பண்ண சொல்லல.. நல்லா Think பண்ணுங்க :)
வருகைக்கு நன்றி
Post a Comment