Apr 17, 2010

தனிமை

ரயில் பயணத்தில், வெளியில் தெரியும் இருட்டில், திடீரென்று ஒரு வீடு தெரிகிறது. அதில் ஒற்றை மஞ்சள் பல்பு. வெளியில் ஒரு குழந்தை வேறு உட்கார்ந்திருக்கிறதே? சட்டென்று பார்வையில் இருந்து அக்காட்சியை மறைத்து விடும் ரயிலின் வேகம். இப்படி தனிமையை அப்பட்டமாக பார்த்ததில் ஒரு பிரமிப்பு கலந்த பரிதாபம். அந்த வீட்டை சுற்றி பல கிலோ மீட்டருக்கு ஒன்றும் கிடையாது. அப்படி ஒரு வீட்டை பார்த்தவுடன் பல கேள்விகள் மனதில்..

அந்த தனி வீட்டில் இருப்பவர்கள் உடம்பு சரி இல்லை என்றால், எங்கே போவார்கள்? குழந்தை எங்கு படிக்கும்? மளிகை சாமான் எல்லாம் எங்கு வாங்குவார்கள்? அய்யோ..



இப்படி 'கவிதை'த்தனமாக யோசித்துக்கொண்டு இருக்கும் போதே.. ரயிலில் 3 பேர் உட்கார வேண்டிய இடத்தில் நாலு பேர் உட்கார்ந்து, போட்டு நசுக்கி உயிரை வாங்குகிறார்கள். மனிதர்களை விட்டு தனியாக எங்காவது ஓடிப்போய் விட்டால் என்ன என்று, இப்போது யோசித்து கொண்டிருக்கிறேன்.

11 comments:

Prasanna said...

'குட்டியூண்டு கதை' கொள்கை விளக்கம்: ஒரு க்குட்டி குட்டி கதை :)

சைவகொத்துப்பரோட்டா said...

குட்டி கதை நல்லா
இருக்கு.

Prasanna said...

@சைவகொத்துப்பரோட்டா,
நன்றி வெஜ் :)

அன்புடன் அருணா said...

hahahahaha!

Prasanna said...

@அன்புடன் அருணா,
வருகைக்கு நன்றி :)

ஜெய் said...

நல்லா சொல்லியிருகீங்க பிரசன்னா..
// மனிதர்களை விட்டு தனியாக எங்காவது ஓடிப்போய் விட்டால் என்ன என்று, இப்போது யோசித்து கொண்டிருக்கிறேன். //
இப்படி யோசிச்சவரைப்பத்தி Into the Wild அப்படின்னு ஒரு படம் வந்திருக்கு.. பாத்திருக்கீங்களா? போன வாரம் விகடன்ல கூட எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி இருந்தார் அந்த படம் பத்தி..
சுப.தமிழினியனும் எழுதி இருக்கார். http://supathamiziniyan.blogspot.com/2009/12/into-wild-cast-away.html

கே. பி. ஜனா... said...

'நறுக்'கென்று அருமையான குட்டிக் கதை.

Prasanna said...

@ஜெய்,
ஓஹோ Into the Wild இன்னும் பாக்கலை.. உடனே பார்த்துடறேன் :)

Cast Away எனக்கு மிக மிக பிடித்த படம்.. தனி மனிதன்/கடைசி மனிதன் - இந்த மாதிரி சிந்தனைகளில் எப்போதுமே எனக்கு ஈர்ப்பு அதிகம்.. அதிலும் இது மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்ட படம் அல்லவா :))

Prasanna said...

K.B.JANARTHANAN,
வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி :)

மகேஷ் : ரசிகன் said...

அட!

Prasanna said...

@மகேஷ் : ரசிகன்,
நன்றிண்ணா :)