Apr 26, 2010

சில பாடல்களும் எண்ணங்களும்..

ரொம்ப நாள் கழித்து, கிழக்கு சீமையிலே படத்தில் கத்தாழங்காட்டு வழி பாடலை பார்த்தேன்.. ஒரு பெண் மணம் முடித்து புகுந்த வீடு போகும் போது, அண்ணனும் தங்கையுமாக தங்கள் மனதில் உள்ள வலியை (பிரிவு என்றாலே வலிதானே?)  பாடுவதாக இருக்கும். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, இருவர் உள்ளம் மட்டும் பழைய நினைவுகளை நினைத்து அழும்..

இனி, நான் என் வீட்டில் இருக்க போவதில்லை என்ற உண்மை அவளை தாக்கும் அந்த பொழுதில், கண்ணீரை அடக்க முடியுமா..? பாடல் படமாக்கப்பட்ட விதமும் நன்றாகவே இருந்தது..



ஜெயச்சந்திரன் குரலில், மிகவும் அற்புதமாக உயிர் பெறும் அந்த பாடல்.. இந்த வரிகளை பாருங்கள்..
வாசப்படி கடக்கையிலே வரல்லியே பேச்சு..
பள்ளபட்டி தாண்டிப்புட்டா பாதி உயிர் போச்சு..

இது நாள் வரையில் தான் வளர்ந்த வீட்டை விட்டுவிட்டு, வேறு வீடு போகும் பெண்ணின் உள்ளம் எப்படி இருக்கும்? முற்றிலும் புதிய சூழலை அவளால் எப்படி எதிர்கொள்ள முடிகிறது? இது எனக்கு என்றுமே பெரும் வியப்பை அளிக்கும் விஷயங்கள்.. இது போன்ற பல சமயங்களில் கள்ள சந்தோஷம் அடைந்து கொள்வதும் உண்டு, நல்ல வேளை ஆணாக பிறந்தோம் என்று..!

*****
அப்புறம் ஜெயச்சந்திரன் குரலில் ஏதோ ஒன்று உள்ளது.. காந்தம் காந்தம் என்று சொல்வார்களே.. அது போல.. சமீபமாக அவர் பாடிய இன்னும் சில பாடல்கள் - என் மேல் விழுந்த (மே மாதம்).. ஒரு தெய்வம் தந்த (கன்னத்தில் முத்தமிட்டால்)..

சில நாட்கள் கழித்து கருத்தம்மா பாடல்களையும் கேட்டேன். 'போறாளே பொன்னுத்தாய்' இரண்டு வெர்ஷனும் இரண்டு எக்ஸ்ட்ரீம்.. அப்புறம், இதில் வரும் காடு பொட்டகாடு.. விவசாயிகளின் வலியை அற்புதமாக விவரிக்கும் வரிகள். இந்த பாடலை இத்தனை நாளாக எப்படி கேட்காமல் விட்டேன் தெரியவில்லை. கேட்டு பாருங்களேன்..
 
"வானம் பாத்து வாழும் பூமி
தூங்கி போச்சு எங்க சாமி"


"ஆறு எங்கே ஆறு அட போடா வெட்க கேடு
மழை வந்தா தண்ணி ஓடும்..
மறு நாளே வண்டி ஓடும்"
 
"பட்ட மரத்து மேலே,
எட்டி பார்க்கும் ஓணான் போலே,
வாழ வந்த பூமி மேலே..."

12 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும்
ஒன்று, பிரசன்னா!!!

Prasanna said...

@சைவகொத்துப்பரோட்டா,

இதிலும் ஒற்றுமை :)

ஜெய் said...

கிழக்கு சீமையிலே, உழவன், வண்டிச்சோலை சின்னராசு, கருத்தம்மா.. எல்லாமே ரஹ்மானின் அருமையான கிராமத்து பாடல்கள்..

Chitra said...

Good songs. :-)

தக்குடு said...

thanks for reminding good songs! unga blogla comment box kandupidikkarthukku CBI thaan kuutindu varanum...;)

Prasanna said...

@ஜெய்,

இதே லிஸ்டை தான் இப்போ கேட்டுட்டு இருக்கேன் :) தெரியாம பல நல்ல பாடல்களை மிஸ் பண்ணி விட்டேன்.. கருத்திற்கு நன்றி :)

@Chitra,
Very true.. Thanks :)


@தக்குடுபாண்டி,
அடாடா. கண்ணுல சிக்க மாடேங்குதா..? ஒரு தடவை கஷ்டப்பட்டு template மாத்திட்டேன்.. திரும்பி மாத்துற தைரியம் இன்னும் வரல.. இருந்தும் கமென்ட் போட்ட உங்கள் அன்புக்கு நன்றி :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கிழக்கு சீமயிலே பாட்டு எப்ப கேட்டாலும் எனக்கு கல்யாணம் முடிஞ்சு மறுவீடு போன ஞாபகம் வரும். அதே கண்ணோட்டத்துல நீங்களும் எழுதி இருந்தீங்க. ரசிக்கும் படி இருந்தது

Prasanna said...

@அப்பாவி தங்கமணி,
என் அக்காவும் சமீபத்தில் தான் திருமணம் முடிஞ்சு போனாங்க.. அந்த பாதிப்பு தான் போல இருக்கு எனக்கு..

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)

ஹேமா said...

நல்லதொரு பாட்டு பிரசன்னா.

Prasanna said...

@ஹேமா,
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)

மகேஷ் : ரசிகன் said...

ஒரு தெய்வம் தந்த பூவே.... வாவ்...

செம பாட்டு மச்சி!

ஜெய்ச்சந்திரன்னா வைதேகி காத்திருந்தாள் தான் ஞாபகத்துக்கு வருது,

Prasanna said...

ஆமாண்ணே.. ராசாத்தி உன்ன பாட்டு சும்மாவா :)
இளையராஜாக்கு அடுத்து ரஹ்மான் தான் இவரை சரியா உபயோகிக்கிறார்..