May 1, 2010

ஔவையார் விண்வெளி ஆராய்ச்சியாளரா?

'அண்ணே, ஔவையார் பெரிய விண்வெளி ஆராய்ச்சியாளர்னு கண்டு பிடிச்சிருக்கேன்' என்றபடியே ஓடி வந்தான் மானஸ்தன்.

இவனை பற்றி நன்றாக தெரிந்தவர் ஆதலால், மணி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், 'என்னடா சொல்ற' என்றார்.

 'ஔவையார் பெரிய விண்வெளி ஆராய்ச்சியாளர்னு கண்டு பிடிச்சிருக்கேன்' என்று மறுபடியும் அதையே சொன்னான்.

'டேய் டகால்டி மண்டையா.. எத வச்சி சொல்றனு கேக்கறேன்?'

'அண்ணே.. இங்க்லீஷ்காரனே கண்டு புடிச்சு சொல்லி இருக்கான். ஆனா நம்ப ஆளுங்க அத கண்டுக்காம உட்டுட்டாங்க..'

'டேய் பில்ட் அப் குடுக்காம மேட்டர சொல்லு' என்றார் மணி.

சிறிது நேரம் தீவிர யோசனைக்கு பிறகு..

இந்த கவிதை வரிய பாருங்கண்ணே..
'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..
ஔவை வொண்டர் வாட் யூ ஆர்..'

'பாருங்க அந்த இங்க்லீஷ் கவிஞன் நம்ப பாட்டி ஏதோ ஒரு நட்சத்திரத்த பத்தி ஆராய்ச்சி பண்ணினத எவ்வளோ அழகா சொல்றான்.. அனேகமா இவன் எந்த நூற்றாண்டோ இந்தியாவுக்கு வருகை செஞ்சு இருக்கான்.. அதை கண்டு புடிச்சு...'
என்று மானஸ்தன் ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போக.., மணி உருட்டுக்கட்டையை தேடிக்கொண்டு இருந்தார்.
.
.
.


ஔவையார் அந்த நட்சத்திரத்த ஆராய்ச்சி செய்த போது எடுத்த படம்


 
*******

டிஸ்கி: இன்னும் கொஞ்ச நாள்ல இலக்கியவாதி ஆன பிறகு, இப்படி மொக்கைகளை போட முடியாது ஆகையால்.. இப்போதே போட்டுக்கொள்கிறேன்..

19 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

வருங்கால இலக்கியவாதி வாழ்க!!

King Viswa said...

அருமை. அற்புதம்.

இந்த மேட்டர தஞ்சாவூர் கோவில்ல கல்வெட்டா பதிச்சு, நீங்களும் அங்கேயே உட்கார்ந்துக்கொண்டு வருங்கால சந்ததியினர் அதனை படிக்க உதவுங்களேன்?

King Viswa said...

//வருங்கால இலக்கியவாதி வாழ்க!!//

இப்படி எல்லாம் போட்டா, இவரு தொடர்ந்து எழுதிக்கிட்டே இருப்பாரு. அதனால,

தற்கால இலக்கிய மாமேதை (அட, நம்ம ராமராஜன் படம் இல்லீங்க) வாழ்க.

Prasanna said...

@ சைவகொத்துப்பரோட்டா,

ஓ நன்றி நன்றி (இப்போதான் வெக்கமே இல்லாம பாராட்டுகள வாங்கிகரது ஒரு பேஷனா போச்சே)
:))

@ King Viswa,
இங்க பாருங்க, அந்த மானஸ்தனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன் :)

//தற்கால இலக்கிய மாமேதை //
இந்த டெக்னிக் எல்லாம் பலிக்காது.. மொக்கை தொடரும்.. வருகைக்கு நன்றி :)

King Viswa said...

////தற்கால இலக்கிய மாமேதை //
இந்த டெக்னிக் எல்லாம் பலிக்காது.. மொக்கை தொடரும்..//

அப்படியா? அப்ப சரி, நம்ம கலைஞர் அஸ்திரத்தை உபயோகப்படுத்த வேண்டியது தான். வேற வழியே இல்லை.

வாழும் வள்ளுவனே, சிரிக்கும் சிலப்பதிகாரமே,

படுத்துறங்கும் பாரதியே, டி சர்ட் போட்ட கம்பனே,

இப்படி பட்டங்கள் தொடரும். யாருப்பா அது? நம்ம ஜகத் இரட்சகன கூப்புடுங்க, உடனடியாக இவருக்கு வள்ளுவர் கொட்டத்துல ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

Chitra said...

why indha kolai veri???? :-)

ஹேமா said...

அட...அட
உங்க ஆராய்ச்சியே ஆராய்ச்சி.

வாழ்க பிரசன்னா !

சிநேகிதன் அக்பர் said...

இதை கேட்க ஔவையார் உயிருடன் இல்லையேன்னு நினைக்கும் போது...

Prasanna said...

@King Viswa,

வேண்டாம்.. இத்தோட நிறுத்திக்குவோம்.. எங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பற வரைக்கும் நீங்க விட மாட்டீங்க. அதான் உங்க ஐடியானு நினைக்கிறேன் :)
வருகைக்கு நன்றி :)



@Chitra said,
//why indha kolai veri//

அது வந்து.. சும்மா அடிமட்டம் வரைக்கும் போய் அலாசலாம்னு ஒரு ஆசை வந்துச்சு.. அதான் :))
வருகைக்கு நன்றி :)

Prasanna said...

@ஹேமா,
இதுக்கே இப்படினுட்டா எப்படி.. அடுத்து ஷேக்ஸ்பியர் பாடல்கள் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளார் மானஸ்தன்..
வருகைக்கும், "வாழ்த்திற்கும்" நன்றி :)



@அக்பர்,
இதுக்கு அடுத்து என்ன சொல்வீங்கன்னு தெரியும்.. 'அப்படியே கொஞ்சம் கிழக்க பாத்து நில்லு' தானே?
வருகைக்கு நன்றி :))

மகேஷ் : ரசிகன் said...

கைல சிக்காமயா போய்டுவ?

அப்ப இருக்கு கச்சேரி...............

மகேஷ் : ரசிகன் said...

அவ்ளோ வெட்டியா இருக்கியா டா?

மகேஷ் : ரசிகன் said...

நீ சொன்ன இந்த வாக்கியத்த எங்கயாச்சும் எழுதிட்டு பக்கத்த்துலயே உக்காந்துக்க!

Prasanna said...

@மகேஷ் : ரசிகன்,

அண்ணே.. எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.. நோ பொது மாத்து and all.. I am paavam :))

//பக்கத்த்துலயே உக்காந்துக்க//

ஆ, அப்பறம் யாரு இந்த மாதிரி காவியங்களை படைக்கரது..? கிகிகி..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

முடியல... நெஜமாவே முடியல....

Prasanna said...

@ அப்பாவி தங்கமணி,
//முடியல... நெஜமாவே முடியல//

அதான்.. அதான் வேணும்.. தொடர் வருகைக்கு நன்றி :)

Anisha Yunus said...

இந்த போஸ்ட் படிச்சப்புறம் என்ற பையனுக்கு அந்தப் பாட்டு சொல்லி தர்றதையே நிறுத்திட்டேன்.

ஔவையை வச்சு, காமடி கீமடி எதும் பண்ணலியே?

Prasanna said...

@அன்னு,

//இந்த போஸ்ட் படிச்சப்புறம் என்ற பையனுக்கு அந்தப் பாட்டு சொல்லி தர்றதையே நிறுத்திட்டேன்//

எழுத்து மூலமா மாற்றங்கள் கொண்டு வர முடியும்கரதுக்கு நான் ஒரு உதாரணம் (ஹீ ஹீ)..
மிக்க நன்றி!

லட்சுமணன் said...

நண்பரே..இந்த நகைச்சுவை போன்று உண்மையிலேயே நடந்துள்ளது. எழுத்தாளர் கவிதாசரண் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி நடத்தினார். அப்பள்ளியில் பணியாற்ற ஆசிரியர்கள் தேடினார். அவர் செய்த நேர்முகத்தில் எம்பில் படித்திருந்த பெண்ணிடம் கவிதாசரண் கேட்ட கேள்வி 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடலை யார் எழுதினான்ங்க..எம் ஏ எம் பில் படிச்ச அந்த பேரறிஞர் சொன்ன பதில் 'அவ்வையார்'..ஏம்மா அப்படி சொல்றீங்கன்னு கேட்டதுக்கு அதான் பாட்டிலேயே சொல்லிருக்கே சார் னு விளக்கம் வேறு ரொம்ப சீரியசா கொடுத்தாங்க