May 7, 2010

பிடித்த பத்தும்., ராவணன் பாடல்களும்..

பிடித்த பத்தை எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று இப்போது தான் தெரிகிறது.. பிடித்த படம், அதற்கு கீழே ஏன் என்று..

************

சபாஷ் மீனா
நகைச்சுவை, சிவாஜி (இயல்பான நடிப்பு), சந்திரபாபு

நாயகன்
மணி, கமல்

முள்ளும் மலரும்..
ரஜினி,ரஜினி,ரஜினி

அன்பே சிவம்
செவத்த அன்பு :)

பேசும் படம்
புதுமை

தில்லு முள்ளு
'வெண்கல கடையில் யானை புகுந்தது போல' படம்..

மௌன ராகம்
மென்மை, பெண்மை, பிளாஷ்பேக்

பம்பாய்
இரண்டாம் பகுதி (எதுக்குடாப்பா இதெல்லாம் என்று தோன்ற வைப்பதால்)

காக்க காக்க
ஸ்டைல், ஹீரோயிசம் (வித்அவுட் பன்ச் டைலாக்ஸ்)

16 வயதினிலே..
பேரை கேட்டாலே.. மழை வரும் போல இருக்குமே, அந்த வாசனை.

விட்ட படங்கள் என்னை மன்னிக்குமாக.. இதை எழுத அழைத்த ஜில்தண்ணி அவர்களுக்கு நன்றி..


************

இரண்டு நாட்கள் முன்னாடி இப்படி இல்லை - ராவணன் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கிறது இன்று.. அதனால், எதுவாக இருந்தாலும் 'ஒரு' இரண்டு நாட்கள் கேட்டு விட்டு முடிவுக்கு வரவும். முடிந்தால் ஹெட் போனில் கேட்கவும் (எவ்வளவு வித்தியாசம்?).
சிறந்த இசையில், ஒரு மெல்லிய சோகம் நிச்சயம் இருக்கும் என்ற என் எண்ணத்தை இதிலும் சில பாடல்கள் உறுதி படுத்துகின்றன..
 
'காட்டு சிருக்கி'யில் பாடல் கூடவே வரும் அந்த வாத்தியங்களின் இசை.. வார்த்தைகளுடன் அதன் சங்கமம்.. அற்புதம்..
 
'கள்வரே' பாடலின் மென்மை, அப்படியே வருடி சொக்க வைக்கிறது (படுத்து கேட்டால் தூங்கி விடலாம்).
 
'கெடாக்கறி' கல்யாண பாடல் ஜாலியாக செல்கிறது, 'யாரோ யாரோடி' மாதிரி.
 
'வீரா' - 'என் யுத்தம் நீ செஞ்சா, நீ ராமன் தான்.. ராவணன் தான்' என்று சொல்வது, 'செ'யின் quote போல இருக்கிறது.. இடையில் வரும் 'குடியே மிஸ்தி...' என்பது போல ஏதோ ஒன்றை பாடும் குரலும் அதை தொடரும் இசையும் (ட்ரைலரில் வரும்).. கேட்டு பாருங்கள்..
 
'உசிரே போகுதே' ஆணின் தாபத்தை அருமையாக சொல்கிறது.. மிக மெதுவாக, உச்ச குரலில், வேகமாக என்று அவன் மன நிலை போலவே நகரும் பாடல்.. இது தான் பெஸ்ட் என்று சொல்ல முடியாது.. இந்த படத்தில் எல்லாமே எனக்கு பெஸ்ட் தான் (ஒரு வேளை, குருட்டு மணி/ரஹ்மான் வழிபாடு செய்கிறேனா? அதெல்லாம் தெரியாதுபா)..
 
'கோடு போட்டா' மிக முக்கியமான பாடலாக தெரிகிறது.. பென்னியின் இனிமையான குரலை விட கொஞ்சம் கரடு முரடான குரலாக இருந்தால் இன்னும் ஆக்ரோஷத்தை எடுத்து காட்டி இருக்கும்.. முதல் சரணத்திற்கு பிறகு வரும் அந்த பீஸ் (பீப்பி மாதிரி).. டாப் கிளாஸ்.. சில வரிகள் (கீழே கொஞ்சம்) எதிர்பார்ப்பை எக்கச்சக்கச்சக்கமாக கிளறி விட்டு விட்டது..
 
'வில்லை போல வளைந்த கூட்டம்,
வேல போல நிமிர்ந்து விட்டோம்'
 
'வேலி போட்டா, வெட்டி போடு'
 
'பாட்டன் பூட்டன் பூமிய யாரும்
பட்டா போட கூடாது'

23 comments:

Chitra said...

Good ones. :-)

தர்ஷன் said...

ம்ம் அருமை பிரசன்னா,
பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். உங்கள் பட வரிசையில் பல எனக்கும் பிடித்தவை அம்மாம் சிவாஜியின் இயல்பான நடிப்பு என என்னவோ சொல்லியிருந்தீர்களே ஜோக்தானே

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மௌன ராகம்
மென்மை, பெண்மை, பிளாஷ்பேக்//

யாரோட ப்ளாஷ்பேக்... தெளிவா சொல்லுங்க பிரதர் (ஜோக்ஸ் அபார்ட்....நல்ல தேர்வுகள்...)

ஜெய் said...

// எதுவாக இருந்தாலும் 'ஒரு' இரண்டு நாட்கள் கேட்டு விட்டு முடிவுக்கு வரவும். //

super.. Not only 2 days.. sometimes even a month.. Always this applies to Rahman songs.. As it takes more time to start enjoying the song, you will enjoy it forever.. Unlike "use n throw" songs of some other music directors..

ஜெய்லானி said...

:-))

ஜில்தண்ணி said...

வித்யாசமான ரசனைதான் தங்களுக்கு நல்லது

கண்டிப்பபாக பிரசன்னா இதுவரை கேட்டவரை
நிறைய வித்யாசங்கள் இசையில்

கேட்க கேட்க தான் பிடிக்கும்,காட்டு சிறுக்கி தான் என் ஃபேவரட்
:))

ILLUMINATI said...

ராவணா பாட்டு பத்தி நீங்க சொன்னது சரி பாஸ்.ஆரம்பத்துல அவ்ளோவா பிடிக்கல...headphone ல கேக்குரப்போ அவ்ளோ வித்தியாசம்.கெடாகறி,கொடு போட்டா செம பீட்ஸ்... :)

கே. பி. ஜனா... said...

படங்கள் தேர்வு அருமை! பாடல் விமரிசனம் சுவை!

பாலாஜி சங்கர் said...

பாடல்கள் ஹிந்தி தாக்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியவில்லை

பாலாஜி சங்கர் said...

வரிகள் சிதைந்து இருப்பது போல் இருப்பதை உணர முடியும்
தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

Prasanna said...

@ Chitra, Thank you :)


@ தர்ஷன்,
ஹிஹி.. இந்த படத்தில் அவர் நடிப்பு ரொம்ப பிடித்திருந்தது.. உதா.அந்த நாடக ஒத்திகை காட்சி..
மிக்க நன்றி!


@அப்பாவி தங்கமணி,
படத்துல என் அளவுக்கு இல்லனாலும் சுமாரா ஒருத்தர் வருவாரே.. அந்த பிளாஷ்பேக்கைத்தான் சொனேன் சிஸ் :) மிக்க நன்றி!

Prasanna said...

@ ஜெய்,
ஆமா ஆமா. பாய்ஸ் பட பாட்ட முதல்ல கேட்டுட்டு என்னடா இதுனு பசங்க திட்ட ஆரம்பிச்சிடாங்க..

அப்புறம் ரொம்ப நாளைக்கு 'என்னடா இது!'னு எப்போவும் அதே பாட்டு தான் ஓடுச்சு :) மிக்க நன்றி!



@ ஜெய்லானி,
வாங்க ஜெய்லானி.. மிக்க நன்றி!


@ஜில்தண்ணி,
வித்தியாசம்னா சொல்றீங்க.. இந்த படங்களை நிச்சயம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது இல்ல :) எனக்கு எல்லா பாட்டுமே ஃபேவரட்.. மிக்க நன்றி!


@ ILLUMINATI,
அதே தான் அதே தான் :) மிக்க நன்றி!

Prasanna said...

@ K.B.JANARTHANAN,
இனிப்பு கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடுச்சோனு நெனச்சேன்..சுவையாதான் இருக்கா :) மிக்க நன்றி!


@பாலாஜி,
ஹிந்தி பாடல்களை முதலில் கேட்டீர்களா? நானும் அதை கேட்டு விட்டு இதை கேட்ட போது முதலில் அப்படித்தான் தோன்றியது.. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)

மகேஷ் : ரசிகன் said...

இரண்டு மூன்று பாடல்கள் ஏற்கெனவே கேட்ட மாதிரி இருக்கிறது. உசுரே போகுதே பாட்டு கூட.

Prasanna said...

@மகேஷ் : ரசிகன,

அண்ணே, எனக்கு பழசு எல்லாம் மறந்து போச்சு.. இந்த பாடல்கள் கேட்டதும் :)

ஹேமா said...

பிரசன்னா...உங்கள் பாடல் தெரிவுகள் ரசனையோட இருக்கு.இராவணன் பாடல்கள் இன்னும் கேட்கவில்லை.

Prasanna said...

@ ஹேமா,

மிக்க நன்றி.. May be இது ஒருதலைபட்சமான பாடல் விமர்சனமாக இருக்கலாம்.. எதற்கும் கேளுங்கள் :)

Paleo God said...

//பிடித்த பத்தை எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று இப்போது தான் தெரிகிறது.//

ஹி ஹி நான் இதுவரை அழைத்தும் எழுதாத தொடர் பதிவு இதுதான்..! :)

Prasanna said...

@ 【♫ஷங்கர்,

என்னை ஒருத்தர் எழுத கூப்பிட்ட தொடர் பதிவே இது ஒன்னு தான்.. அதனால வாய்ப்பை விடாம எழுதிட்டேன் :)

So included only best of the bests ;)

தக்குடு said...

yes prasanna, nice collection

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கு "விருது" கொடுத்துள்ளேன், வந்து பெற்று கொள்ளவும்.
நன்றி.

Philosophy Prabhakaran said...

Ur blogger theme is looking cool... i like it a lot...

Prasanna said...

@ தக்குடுபாண்டி,
Thank you :)

@சைவகொத்துப்பரோட்டா,
முதல் முறையாக நமக்கு விருது கொடுத்த அண்ணன் வெஜ்ஜிற்கு நன்றி நன்றி நன்றி !

@philosophy prabhakaran,
Yes me too like it :) You can also get it from the link shown at the bottom of my page..

I first thought //Ur blog is looking cool... i like it a lot...//

hee hee