May 27, 2010

பதினைந்தாவது ரொபாட்

அதி ரகசியமான அந்த ப்ராஜக்ட் வெர்ல்ட் ரூல் (Project World Rule) பற்றி  தெரிந்தவர்கள் மொத்தம் எட்டு பேர் தான். அமெரிக்க அதிபருக்கு கூடத்தெரியாது. இந்த ப்ரொக்ராமின் அ,ஆ வான மார்க் மற்றும் டாம் அன்று இறுதி கட்ட செக்கப்கள் முற்றிலும் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். படபடப்புடந்தான்.

"இது எந்த அளவு வெற்றி பெரும் என்று நினைக்கிறாய் டாம்?", கேட்டவர் மார்க்.
"முழு வெற்றி தான். கூடிய சீக்கிரம் இந்த உலகமே நம் சொல் படி ஆட போகிறது!" உணர்ச்சிவசப்பட்டார் டாம்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்ட 15 ரொபாட்களும், பதினைந்து முக்கிய நாடுகளில் விடப்படும். ஐந்து வருடங்கள் கழித்து, அந்தந்த நாடுகளின் சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு, அந்த நாட்டையே ஆட்டி படைக்கக் கூடியவர்களில் ஒருவராக ஆக வேண்டும் (ஆகும்).. இதுவே அந்த பதினைந்து 'பேரின்' உள்ளே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ப்ரொக்ராமின் சாராம்சம்.

"ஐந்து வருடங்களில் இவை அத்தகைய உயர்வை எட்ட வாய்ப்பு இருக்கு என்றா நினைக்கிறாய்?", இம்முறை சந்தேகத்துடன் டாம்.


"மனிதனின் சுய சிந்தனையும், மிஷினின் உண்டு - இல்லை என்கிற துல்லியமும் ஒரு சேர வாய்ந்தவை இவை. இந்த கூட்டின் சக்தி அளவிட முடியாதது டாம். அதுவும் இவைகளை செயற்கை என்று யாராலும் சொல்ல முடியுமா? இதோ 'இதுக்கு' இருக்கும் மீசையைப்பார்" ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் ரொபாட்டின் மீசையை த்டவிக்கொண்டே மார்க்.. டாமிற்கு இது எல்லாம் தெரிந்தாலும் கடைசி நேர படபடப்பை அடக்க யாரால் முடிகிறது?

ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. அந்தந்த நாடுகளில் கொண்டு போய் விடப்பட்டனர் அந்த பதினைந்து பேரும், அந்தந்த நாடுகளின் குடிமகன்களாக.

....

முதல் முறை பார்த்ததை விட, 5 வருடங்களில் கொஞ்சம் குண்டாகி விட்டிருந்தனர் மார்க்கும் டாமும்.. அவர்களின் கண்டுபிடிப்புகள் எந்த பதவியில் இருந்து, உலக நாடுகளை எப்படி ஆண்டு கொண்டு இருக்கிறது என்று ஆய்வு செய்து, அடுத்த கட்டத்திற்கு தயாராக 'உலகச் சுற்றுப்பயணம்' கிளம்பினர் இருவரும்.

"அவைகளின் நியூரல் நெட்வொர்க்கும் மனித மூலையை ஒத்து இருப்பதால், எல்லாம் ஒரே அளவு அறிவுடன் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பதினைந்தில் எது மிக அறிவானது, எது சக்தி வாய்ந்தது என்பதயும் பார்க்க வேண்டும்" பிளைட்டில் பாதி தூக்கத்தில் முனகிக்கொண்டார் டாம்.

முதலில் அவர்கள் இறங்கிய இடம் அவர்களின் தலை நகரான வாஷிங்டன். இவர்களின் 'அது' அந்த நாட்டின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக இருந்தது.

"ஆகா. என்ன சக்தி வாய்ந்த பதவி? நாம் நினைத்ததை விட நம் ப்ராஜக்ட் பெரும் வெற்றி தான்" என்று ஆனந்த் குக்கூரலிட்டார் மார்க்.

அடுத்து ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா என்று பயணப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு அமைச்சர், பிரதமர், ராணுவ தளபதி (பாகிஸ்தான்) என்று விதவிதமான, சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்தார்கள் இவர்களின் கண்டுபிடிப்புகள்.

எல்லா நாட்டையும் முடித்துக் கொண்டு, கடைசியாக இந்தியா வந்து, அந்த பதினைந்தாவது ரொபாட் வீட்டின் முன் இறங்கியதுமே... இருவரும் சிறிது அதிர்ச்சி அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னே மத்த 14 நாடுகளில் பார்க்காத காட்சியை அல்லவா இங்கு கண்டனர்? அந்த 'வீட்டு அரண்மனையின்' வெளியே ஒரே மக்கள் கூட்டம். எக்கச்சக்க கார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டவை 'நானும் விஐபி தான்' என்று சொல்லிக்கொள்ளும் சிகப்பு விளக்கு பொருத்த பட்டவை.


"அதோ, அங்கு நிற்பவர் இவர்களின் பிரதமர் போல் அல்லவா இருக்கிறார்? அவரே வெளியில் காத்து கொண்டு இருக்கிறாரே? 'இவர்தான்' பதினைந்து பேரில் மிகுந்த சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும்.. எவ்வளவு கூட்டம்? " வாயை பிளந்தார் டாம்.

"ஆம். உண்மைதான். ஆனால், பிரதமரை விட உயர்ந்தவராக இருந்தாலும், இவர் எந்த பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லையே?" என்றபடியே அங்கு இருந்த 'காரிய தரிசி'யிடம் உள்ளே சொல்லி அனுப்பினார் மார்க்.

அவர்கள் உடனே உள்ளே விடப்பட்டு, 'அவர்' எதிரில் நிற்க வைக்கப்பட்டனர்.

தன் ஒளி பொருந்திய கண்களை திறந்து, இவர்களை நோக்கி புன்முறுவல் பூத்தார் ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த ஸ்வாமிகள்..


                                                                ************





டிஸ்கி: இது நான் ஏற்கனவே எழுதி வெளியிட்ட கதை தான். என்னடா இவன், எழுதியதே 25 பதிவுகள் தான் இருக்கும். அதற்குள் மீள் பதிவா என்று பெரியவர்கள் கோபித்துக்கொள்ளாமல், ஆதரவை 'அள்ளி' வழங்குமாறு கேட்டு கொள்கிறேன் ;)

16 comments:

மகேஷ் : ரசிகன் said...

Nice da...

அ.முத்து பிரகாஷ் said...

// ராணுவ தளபதி (பாகிஸ்தான்)... //
சகோதரர்களுக்கு விமோசனமே இல்லையா பிரசன்னா ...

ILLUMINATI said...

ஹாஹஹா......
It happens only in India..... :)
நம்ம ஆளுங்களுக்கு உள்ள blind faith இருக்கே....யப்பா....

வால்பையன் said...

ஜூப்பரு!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

super kadhai...pudhusaa innum eludhunga prasanna

ஜில்தண்ணி said...

//தன் ஒளி பொருந்திய கண்களை திறந்து, இவர்களை நோக்கி புன்முறுவல் பூத்தார் ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த ஸ்வாமிகள்..//

Sci Fi கதைகளிலும் நம்ம இந்தியா அப்டித்தானா பிரசன்னா


ப்ராஜக்ட் வெர்ல்ட் ரூல் - மிஷன் சக்சஸ்

King Viswa said...

சூப்பர்.

//ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த ஸ்வாமிகள்..//

பார்த்துங்க, புதுசா ஏதாவது சாமியார் இந்த பெற யூஸ் பண்ணப்போறார். அதுக்குள்ள ரெஜிஸ்டர் பண்ணிடுங்க.

ஹேமா said...

பிரசன்னா...முயற்சிக்கு வாழ்த்தும் பாராட்டும்.
ஏன் இந்தச் சாமியார் இங்க?

தக்குடு said...

Hahahaha..;) nice finishing touch prasanna...;) good job!

சிநேகிதன் அக்பர் said...

கதை அருமை. ரொம்ப யோசித்து எழுதியிருக்கிறீர்கள்.

நல்லதொரு சயின்ஸ் ஃபிக்ஷன்.

சாமக்கோடங்கி said...

சூப்பரு..

அண்ணாமலை..!! said...

அடி சக்கைன்னா..!!
அலும்புக்கு அளவே
இல்லையா??

Prasanna said...

@மகேஷ் : ரசிகன்,
நன்றிண்ணா :)

@நியோ,
இப்போதைக்கு இல்லை என்று தான் தோன்றுகிறது.. போதாக்குறைக்கு ஆமெ வேறு புகுந்து விட்டது ;)

@ILLUMINATI,
சரியா சொன்னீங்க..

@Chitra,
மிக்க நன்றி!

@வால்பையன்,
மிக்க நன்றி!

@அப்பாவி தங்கமணி,
மிக்க நன்றி.. ஓ கண்டிப்பா புதுசா எழுதறேன் (இப்படின்னு தெரிஞ்சு இருந்தா கேட்ருக்க மாட்டோமேனு ஒரு அப்பாவி குரல் கேக்குது?)

Prasanna said...

Sci-fi களம் வந்து சும்மா ஒரு கவர்ச்சிக்காக.. சொல்ல வர்ற விஷயத்துக்காக யூஸ் பண்ணிகிட்டேன் :) சக்சஸ்னு சொல்லிடீங்க மிக்க நன்றி..!


@King Viswa,
யாரு கண்டா? ஏற்கனவே அப்படி ஒருத்தர் இருந்தாலும் இருக்கலாம் :)மிக்க நன்றி..!


@ஹேமா,
நமது நாட்டின் தலை எழுத்தை தீர்மானிப்பவர்களில் சாமியார்கள் அதிகம் என்பதை காட்ட :)மிக்க நன்றி..!


@ILLUMINATI,
Thanks for making us remember the past.. Why to remove the comment? Let this stay here :)

Prasanna said...

@தக்குடுபாண்டி,'
Thanks a lot Thakkudu :)


@அக்பர்,
ரொம்பலாம் யோசிக்கல.. சும்மா வழக்கம் போல தான் :)மிக்க நன்றி..!


@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி,
மிக்க நன்றி..! வருகைக்கும், கருத்திற்கும்..


@அண்ணாமலை,
ஹீ ஹீ வாங்க அண்ணாமலை.. பிடிச்சிருக்கா இல்லையா.. :)மிக்க நன்றி..!

Prasanna said...

//Sci-fi களம் வந்து சும்மா ஒரு கவர்ச்சிக்காக.. சொல்ல வர்ற விஷயத்துக்காக யூஸ் பண்ணிகிட்டேன் :) சக்சஸ்னு சொல்லிடீங்க மிக்க நன்றி..!
//

இந்த பதில் ஜில்தண்ணி உங்களுக்குதான்.. அங்கிட்டு பேர் போட மறந்துட்டேன்..