வாரா வாரம் ஆனந்த விகடன் வாங்கியதுமே, வலைபாயுதேவில் நமக்கு தெரிந்தவர்கள் யார் யாரின் ட்வீட்கள் வந்துள்ளன என்று பார்ப்பது வழக்கம். இந்த தடவை, அந்த பக்கத்தில் இருந்த தோனி சம்சாரம் சகிதம் இருந்த படத்தை பார்த்து கடந்து விட்டேன். திரும்ப புரட்டும் போது அட இதை எப்படி விட்டோம் என்று வந்த ட்வீட்களை படித்துக்கொண்டு இருக்க, கனவு போல என் பெயரும் இருந்தது.. prasannag6@twitter.co (m விட்டு போய் இருந்தது. 'எம்', 'என்' என்று சுயநலத்தை கை விட்டால் நீதான் ராஜா (கோ) என்று சொல்கிறார்களோ?)
வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அடுத்து சில நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிவித்ததும், 'நெருங்கிய நண்பன்' (நானும் ஜவுளி கடைல சேர்ந்த நாள்ல இருந்து பாக்கறேன்..) அழைத்து..
'டேய் என்ன டா எழுதின?'
'அது வந்து சும்மா தாண்டா.. எப்டி போட்டாங்கன்னு தெரில'
'சரி, என்னனு சொல்லு'
'அது சொன்னா அவ்ளோ நல்லா இருக்காதே?'
'*&^ இப்போ சொல்றியா இல்லையா?'
சொன்னேன்..
'என்ன டா? இதையா போட்டாங்க?'
'..... எப்டியோ போட்டுட்டாங்க விடேன்'
'யாருடா இத செலக்ட் செஞ்சது?'
'டேய் சரியா கேக்கல, அப்புறம் கால் பண்றேன்'
****
அவன் கெடக்கான் அந்த ட்வீட் இதுதான்.. மற்ற ட்வீட்களை படிக்க http://twitter.com/prasannag6 பார்க்கவும். அந்த 120 ஆம் பக்கத்தை இங்கு பார்க்கலாம் http://www.vikatan.com/av/2010/nov/03112010/p120a.jpg
(2010 Nov 03 தேதியிட்ட இதழ்)
"ஒரு வேளை கடவுள் இருந்தால்? என்று சந்தேகம் நாத்திகனுக்கு.. ஒரு வேளை வேற்று மதக்கடவுள் இருந்தால்? என்று சந்தேகம் ஆத்திகனுக்கு."
***
(updated on Jan 2011)"காரில் முன்னிருக்கையில் இருந்துகொண்டு பாடல்கள் மாற்றுபவர் நமக்கு நேர் எதிரான ரசனையையே கொண்டிருப்பார்"
11 comments:
valthukkal thala !
"ஒரு வேளை கடவுள் இருந்தால்? என்று சந்தேகம் நாத்திகனுக்கு.. ஒரு வேளை வேற்று மதக்கடவுள் இருந்தால்? என்று சந்தேகம் ஆத்திகனுக்கு."
...Good one..
.... Congratulations!
//"ஒரு வேளை கடவுள் இருந்தால்? என்று சந்தேகம் நாத்திகனுக்கு.. ஒரு வேளை வேற்று மதக்கடவுள் இருந்தால்? என்று சந்தேகம் ஆத்திகனுக்கு."//
ஹ ஹ ஹா
நல்லா ட்விட்டுவீங்கபோல...
வாழ்த்துகள் பிரசன்னா!
நல்ல சிந்தனை, அதற்கு வாழ்த்துக்கள்.
ஆ.வி.யில் அது இடம் பெற்றதற்கு மீண்டும் வாழ்த்துக்கள் பிரசன்னா....
அட நல்லாயிருக்குங்க....
I liked that tweet when you tweeted it.Congrats.. :)
சூப்பர் டிவிட் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பாஸ்!
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் :)
//prasannag6@twitter.co (m விட்டு போய் இருந்தது. 'எம்', 'என்' என்று சுயநலத்தை கை விட்டால் நீதான் ராஜா (கோ) என்று சொல்கிறார்களோ?)//
கோட்டை இல்லை...கொடியும் இல்லை ...எப்பவும் நான் (நீ) ராஜா...!! :-))))
சரியான பெருமை பீத்தகளையங்கப்பா :))
இத தேர்ந்தெடுத்தவர் கார்த்தி என நினைக்கிறேன்..
Post a Comment