நிலவற்ற தனி இரவில்,
நெடுந்தெருவில்
தயங்கி நடக்க
திடீரென்று எங்கிருந்தோ தோன்றி,
பயங்கர சத்தத்துடன்,
எதையோ
விளையாடும் குழந்தைகள்..
*******************
அரட்டை
சிரிப்பு
குழந்தை அழுகை
கும்மாளம்
நிசப்தம்-அலறல்
விபத்து
(விபத்தை போன்ற திடுக் காட்சி மாற்றம் மனிதனுக்கு வேறு இல்லை)
*******************
நூறு
ஆயிரம்
லட்சம்
வைரஸ்
*******************
நொடி தாமதித்தாலும்
சளார் சளார் ஹாரன்கள்
வசைகள்
இன்று அதே தெருவில்
கிரிக்கெட்
பந்த்
*******************
வியர்வை
கொடுத்த
சாவுக் கனவு
16 comments:
அந்த பந்த் மேட்டர் எனக்கு ரொம்ப Familiar ஆக தெரிகிறது. எங்காவது படித்ததை ஆழ்மனத்தில் தேக்கி, இப்போது எழுதி விட்டேனா?
திடுக் திக் திக் னு இருக்கு பாஸ்!
முதலாவது விவரிப்பு சூப்பர் :)
கனவு திக்கோ திக்.
உங்கள் தளத்தில், மேலும் படிக்க கிளிக் செய்த பின் பக்கம் செல்ல அதிக நேரம் ஆகிறது பிரசன்னா, கவனியுங்கள். நன்றி
என்னயா ஒனக்கு இதுக்கெல்லாம் நேரமில்லங்கிறதுக்காக கதையையும் இப்டி சொல்ல ஆரம்பிச்சிட்ட :)
நல்லாயிருக்குயா :)
எல்லாக் கவிதைகளும் அருமை... இரண்டாவது கவிதை மட்டும் எனது மரமண்டைக்கு சரியாக உரைக்கவில்லை...
@ Balaji saravana,
எனக்கும் அது தான் பிடித்தது :) மிக்க நன்றி
@ சைவகொத்துப்பரோட்டா,
சில மாறுதல்கள் செய்திருக்கிறேன், கொஞ்சம் வேகமாக தெரிகிறது. இல்லை என்றால் டெம்ப்ளேட் மாற்ற வேண்டிதான்.. மிக மிக நன்றி :)
@ ஜில்தண்ணி - யோகேஷ்,
ஹீ ஹீ.. ஆமா நீ மட்டும் என்னவாம் மறுபடி ஸ்டூடன்ட் ஆனாலும் ஆன பதிவே எழுத மாட்ற :)
@ philosophy prabhakaran,
இந்த பத்திகளின் நோக்கம் காட்சி மாறுதல்களை சொல்வது..(இதுகளை கதைணும் சொல்ல முடியாது கவிதைனும் சொல்ல முடியாது),
அது நொடிப்பொழுதில் மிக வேகமாகவோ, அல்லது மெதுவானதாகவோ இருக்கலாம்..
அந்த விபத்து - உங்களை ஒரு கல்யாண கோஷ்டி செல்லும் வாகனத்தில் போவது போல கற்பனை செய்து கொண்டு படியுங்கள்.. திடீரென்று நீங்கள் போகும் வேன் விபத்துக்கு உள்ளாகிறது.. அவ்வளவுதான்.
சரி வெறுமனே காட்சி மாறுதல்களை சொல்லி என்ன?
நான் சொல்ல வந்தது, எதுவுமே நிலையானது இல்லை. ஒரு நிமிடம் நல்லதாக தெரிவது, அடுத்த நொடியில் மாறலாம்.. இது தான்..
நெடுஞ்சாலையில் நீளும்
அவசரப் பயணத்தில்
தொலைபேசி அழைப்பு
எமனிடமிருந்து....
நல்லாயிருக்கு வாத்தியாரே..
@ கலாநேசன்,
அருமை :) இப்படி அழகா ட்ரை பண்ண போய்தான் மேல இருக்குற மாதிரி வந்துருக்கு.. அது சரி, சட்டி.... அகப்பை.....
@ வெறும்பய,
மிக்க நன்றி தல :)
கவிதைமாதிரியும் கதைமாதிரியும் இருக்கு.காட்சிகள் தெரியுது.நல்ல முயற்சிதான்.ஆனாலும் சிரமம் பிரசன்னா.பாராட்டுக்கள் !
திக்குன்னு இருக்கு.. பாராட்டுக்கள்..
//வியர்வை
கொடுத்த
சாவுக் கனவு //
எக்சுஸ்மி ........இந்த கவிதைக்கு விளக்கம் ப்ளீஸ் :)
நிகழ்வுகள் பதிவு அருமை :)
வியர்வை
கொடுத்த
சாவுக் கனவு///
என்ன.. பயங்கர கனவா....
முதல் திடுக் அருமை. என்னதான் சமாதானம் செய்து நாம் தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் ரெண்டுங்கெட்டான் சிரிப்பு ஒன்றையே வெளியிடக்கூடிய தருணம்!!
:)
ரொம்ப நல்லாயிருக்குங்க..
Post a Comment