Nov 25, 2010

பட்டாம்பூச்சி அதிர்வு

ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார் இன்று மதியம்.

நேற்று, தனது வீட்டில் வந்து ஒன்றுக்கு இருந்த ஒரு கொழுத்த நாயை ஒரு கொழுத்த கனவான் கொழுத்த கல்லால் அடிக்க, அது வலி மிகுந்து கத்திக்கொண்டு அதன் முதலாளி சிறுவனிடம் ஓட, அவன் 'அப்சட்' ஆகி வீட்டு (விலை உயர்ந்த) பொருள் ஒன்றை உடைத்தான்.

பதிலுக்கு 'அப்சட்' ஆன சிறுவனின் அம்மா, கரண்டி வளையும் அளவுக்கு அவனை அடித்து விட்டு, அவன் சேட்டையை அடக்க வழி தெரியாமல் உட்கார்ந்து அழுதாள். அந்த நேரம் பார்த்து, வெளியில் போயிட்டு வந்த அவள் கணவன் வழக்கம் போல 'என்னடி இன்னும் டீ போடலியா?' என்று கத்த, ஒரே களேபரமாகி இரவு முழுதும் யாரும் தூங்கவில்லை..

அடுத்த நாள், அதாவது இன்று காலை, அந்த வங்கி மேலாளர் கணவன் சாப்பிடாமல் கொள்ளாமல் கோபமாக தன் வேலைக்கு கிளம்பினார். விவசாயக்கடன் ரத்து/புதுக்கடன் வழங்குதல் என்று பரிசீலனைக்கு வந்த அத்தனை கோப்புகளையும் வேகுவேகென்று நிராகரித்தார்.

ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார் இன்று மதியம்.




இதை ஆங்கிலத்தில் படிக்க...

11 comments:

Prasanna said...

Inspiration:
http://www.merinews.com/article/loan-waiver-yet-to-benefit-vidarbha-farmers/135046.shtml

http://www.thehindu.com/news/states/other-states/article881945.ece

Anonymous said...

சிம்ப்ளி சூப்பர்ப் :)

பாலா said...

நன்றாக இருக்கிறது...

:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாழ்க்கை சுழற்சி..?. கதையா இருந்தாலும்.. இது நடப்பதுதானே பாஸ்...

Gayathri said...

ella seyalukkum oru reaction irukku azhaga konjam sogamavum solteenga..

correct panravanga mood vachuthan 10th vathu podhu thervu marknu en teacher solvanga

Prasanna said...

Balaji saravana & பாலா,
நன்றி நண்பர்களே :)

பட்டாபட்டி,
ஆமாம் பட்டா சார்., அத்தனை பேர் ஆயிரக்கணக்கில் சாவது தடுக்கக்கூடிய ஒன்று தான்.. நன்றி

Gayathri,
மிகச்சரி.. அவருக்கு அது ஒரு கையெழுத்து.. அந்த விவசாயிக்கு அதுதான் வாழ்க்கை, நன்றி !

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிம்ப்ளி சூப்பர்ப் :)

அன்பரசன் said...

கதை நச் நண்பரே

Chitra said...

எதார்த்தம்.

சி.பி.செந்தில்குமார் said...

ada...

Custom Sheds Bloomington said...

Greaat post