1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
Prasanna (பிரசன்னா)
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உண்மை பெயர்தான். என் பெயரில் ரொம்ப பேர் எழுதவில்லை என்று நினைக்கிறேன். அதனால்..
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
நான் 2008 இல் ஆங்கில வலைப்பூவை தொடங்கினேன் (கொத்து பரோட்டா மாதிரி இல்லை, அதில் நான் பெரிய ஆளாக்கும். போய் பாருங்கள் தெரியும்). அப்போ தமிழில் வலைப்பூக்கள் இருப்பது தெரியாது. எப்படியோ ஏதோ ஒரு லிங்க் கிடைக்க, அதன் மூலம் வினவு பக்கம் வந்து சேர்ந்தேன். அந்த நடை அட்டகாசமாக இருந்தது. அப்புறம் பாலோயர்ஸ் மூலமாக மற்ற வலைப்பூக்களையும் பார்க்க முடிந்து, சென்ற ஆண்டு இறுதியில் (அடடே ஒரு ஆண்டு முடிந்து விட்டது) கொத்து பரோட்டா ஆரம்பித்தேன். ஏன் இப்படி ஒரு பெயர் என்று தனி பதிவு போடுகிறேன் :)
4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
கொஞ்சம் படித்தேன். நிறைய ஓட்டும், பின்னூட்டமும் போட்டேன். திரட்டிகளில் இணைத்தேன். வந்த புதிதில் யாரும் வரமாற்றாங்களே என்று நிறைய புலம்பினதுண்டு
5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
அவ்வபோது பகிர்வதுண்டு. நான் அவமானப்பட்டதை 'நண்பன்' பட்டதாகவும், நண்பன் 'காமெடி' பண்ணியதை நான் பண்ணியதாகவும் மாற்றி எழுதிக்கொள்வேன் (அத்தகைய படைப்பு சுதந்திரம் எனக்கு உண்டு ஹீ ஹீ).
6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
போழுபோக்குக்காக எழுத ஆரம்பித்து, இப்போ என் பொழுதெல்லாம் போகிறது. ஆமா இதுல துட்டு வருமா ;)
7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இரண்டு. ஒண்ணு இது, இன்னொன்னு ஆங்கில வலைப்பூ. என் தமிழ் பதிவுகளை (!)மொழிமாற்றம் (!!) செய்து வெளியிட ஆசை. மொழிபெயர்ப்பு எவ்வளவு கடினம் என்பதை இதில் தெரிந்து கொண்டேன். அது வெறுமனே வரிக்கு வரி மாற்றுவதல்ல. திரும்பி முழு கான்செப்டையும் யோசித்து எழுத வேண்டும்!
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
நான் கொஞ்சம் சாப்ட்டான ஆளா? அதனால அடுத்தவங்கள போட்டு மோசமா திட்றவங்க, சண்டை போடறவங்க எல்லாரையும் பாத்தா கோபம் வரும். ஆனா அது நண்பர்கள் மீது கோபம் வருவது போன்றது தான். என் எதிரி கூட நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன் (கேக்குது, உச்சு கொட்றது. பேசிட்டு இருக்கேன்ல? சைலன்ஸ்). பொறாமை, நல்ல எழுத்துக்களை பார்க்கும்போதெல்லாம்..
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
முதல் பின்னூட்டம் கடைத்தெரு அவர்கள் போட்டது எனது மூன்றாவது பதிவில். பயங்கர ஹாப்பி பார்த்துவிட்டு. முதலில் தொடர்பு கொண்டு பேசியது என்றால் அண்ணன் ரசிகன் மகேஷ்தான் (அவருக்குதான் என் நம்பர் தெரியும், அதுனால.. இல்லனா நெறைய பேரு போன் பண்ணி இருப்பாங்க). உலகின் கடைசி மனிதன் என்ற என் அறி-புனை கதையை படித்துவிட்டு ரொம்ப சிறப்பாக இருப்பதாகவும், மேலும் நிறைய எழுத வேண்டும் என்றும் சொன்னார். நம்பவே முடியவில்லை :)
10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
பன்னிரெண்டாம் வகுப்பில் நாந்தான் ஸ்கூல் பர்ஸ்ட் (சரியான பெருமை பீத்தகளையங்கள் என்று திட்டக்கூடாது. என் வாழ்க்கைல பெருமையா சொல்லிக்கற மாதிரி யோசிச்சு யோசிச்சு இது ஒண்ணு தான் தேறுச்சு ஹீ ஹீ)
32 comments:
வாழ்த்துக்கள் தல! ஐம்பதாவது பதிவுக்கும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மாணவனாய் வந்ததற்கும்..
எப்பூடி ;)
@ Balaji saravana,
அட! இவ்வளவு வேகமா பின்னூட்டமா :) ஹிஹி வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி!
வாழ்த்துக்கள்...50 போட்டுடீங்க..தொடருங்கள்...
Balaji saravana December 4, 2010 7:53 PM
வாழ்த்துக்கள் தல! ஐம்பதாவது பதிவுக்கும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மாணவனாய் வந்ததற்கும்..
எப்பூடி ;)
........ Prasanna, CONGRATULATIONS!!!! CONGRATULATIONS!!!! :-)
அம்பது நூறாக வாழ்த்துகிறேன்
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் பிரசன்னா!
வாழ்த்துக்கள்
ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தாங்கள் இன்னும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெற வாழ்த்துக்கள்!
உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
//பன்னிரெண்டாம் வகுப்பில் நாந்தான் ஸ்கூல் பர்ஸ்ட்//
சாரிப்பா, புத்திசாலி புள்ளையா நீ. தெரியாம இந்தபக்கம் வந்துட்டேன்.
:)
வாழ்த்துகள் பிரசன்னா.
இந்தத் தொடர் வந்து எவ்ளோ.....காலமாச்சு !
// நான் அவமானப்பட்டதை 'நண்பன்' பட்டதாகவும், நண்பன் 'காமெடி' பண்ணியதை நான் பண்ணியதாகவும் மாற்றி எழுதிக்கொள்வேன் //
நல்ல ஐடியா...?
// போழுபோக்குக்காக எழுத ஆரம்பித்து, இப்போ என் பொழுதெல்லாம் போகிறது. ஆமா இதுல துட்டு வருமா ;) //
கண்டிப்பா வரும்...
வாழ்த்துக்கள் ஆனாலும் நீங்க ரொம்ப லேட்...
வாழ்த்துக்கள்......50 வது பதிவெல்லாம் கொண்ட்டாடுறீங்க......
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.. இந்த தொடர் பதிவு எழுத எத்தனை மாதங்கள் முன்னால் உங்களை அழைத்தார்கள்...
வாழ்த்துக்கள்
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....
கேபிள் சங்கரின் போஸ்டர்
போஸ்டர் - திரைவிமர்சனம்
Congrats buddy. :P
வாழ்த்துகள் நண்பரே.
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..
ஹரிஸ்,
Chitra,
ரஹீம் கஸாலி,
T.V.ராதாகிருஷ்ணன்,
ப்ரியமுடன் வசந்த்,
பார்வையாளன்,
எஸ்.கே,
சிநேகிதன் அக்பர்,
கலாநேசன்,
வழிப்போக்கன் - யோகேஷ்,
ILLUMINATI,
செ.சரவணக்குமார்,
kalpanarajendran,
உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி :)
@ வார்த்தை,
நோ நோ அதெல்லாம் இல்ல.. தப்பா திருத்திட்டாங்க :) தொடர்ந்து வரணும் ஆமா..
@ ஹேமா, வெறும்பய,
பயபுள்ளைங்க கரெக்டா கண்டு புடிச்சிடறாங்க :) ஒரு வருஷத்தில் வெறும் ஐம்பது பதிவு எழுதும்போதே தெரியலையா எவ்ளோ பெரிய சோம்பேறின்னு :) சோ கொஞ்சம் மெதுவா எழுதிட்டேன்.. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)
@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து,
நான் திராவிட் மாதிரி.. ஐம்பது போடவே 365 பந்துகள் எடுத்துகிட்டேன்.. அதான் இப்போவே கொண்டாடிலாம்னு ஹீ ஹீ
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)
@ philosophy prabhakaran,
//கண்டிப்பா வரும்//
அது உங்கள மாதிரி நல்லா எழுதறவங்களுக்கு :)
//ஆனாலும் நீங்க ரொம்ப லேட்//
இனிமே பாருங்க வேக வேகமா ஆடறேன் (இப்படித்தான் ஆரம்பதுலேயும் முடிவு பண்ணேன்) ஹி ஹி..
வாழ்த்துக்கள்.....
//பன்னிரெண்டாம் வகுப்பில் நாந்தான் ஸ்கூல் பர்ஸ்ட்//
ச்சே..ஜஸ்ட் missed .. நான் ஸ்கூல் செகண்ட்... (அட நெசமாத்தாங்க...)
சூப்பர் போஸ்ட்...(அட நெசமாத்தாங்க... ஹா ஹா)
ஓ...சொல்ல மறந்துட்டேன்... ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
appaadaa neengalum ivlo siikiram pathivu pottutingala athaan naanum seekirame pathil ezutharen. athenna ennai maathiri lkg pullaingalai akkaanu koopidareenga. vaanaam....azuthuduven :))
//அவ்வபோது பகிர்வதுண்டு. நான் அவமானப்பட்டதை 'நண்பன்' பட்டதாகவும், நண்பன் 'காமெடி' பண்ணியதை நான் பண்ணியதாகவும் மாற்றி எழுதிக்கொள்வேன் (அத்தகைய படைப்பு சுதந்திரம் எனக்கு உண்டு ஹீ ஹீ).//
inimethan naama gavanamavaasikkanum. BE CAREFUL. naan ennai sollalai,ungalaiththaan sonnen. 51 postukku vaazhthukkal.hi hi
congrats for ur 50'th post prasanna!!..:)
50 க்கு வாழ்த்துக்கள் ,, விரைவில் ஆஃப், ஃபுல் அடிக்க வாழ்த்துக்கள்.. அதாங்க 500 வது பதிவு.. 1000 வது பதிவு க்கு வாழ்த்து
@ சி.பி.,
ஓஹோ அந்த புல் ஆ.. அப்படினா அடிக்கிறேன்.. :)
Post a Comment