ஆறாவது படிக்கும் போது (ஆறாவதுமூதன்), மாரல் பீரியடில் (இது இப்போது இல்லையாமே?) அப்போது வெளியாகி இருந்த இந்தியனில் 'பச்சை கிளிகள் தோளோடு' பாடலை வரி பிசகாமல் பாடினேன் (சரி படித்தேன்). முடிக்கும் வரை அமைதியாக இருந்த வகுப்பு, முடித்ததும் ஒரே கை தட்டு (பளார் பளார் அல்ல). அந்த பாடலை கேட்டால், அந்த வகுப்பு, பாடும்போது மேற்கிலிருந்து ஜன்னல் வழி வந்து கொண்டிருந்த சூரிய வெளிச்சம், அருகில் நின்று கேட்டு கொண்டிருந்த அனுஷா மேடம் என்று அத்தனையும் துல்லியமாக ஞாபகம் வருகிறது! பதில் பாட்டாக 'மாயா மச்சிந்திரா' (நன்றாகவே) பாடிய நிஷா இப்போது எங்கு இருக்கிறாளோ?
ஏன், 'ஊரை தெரிஞ்சிகிட்டேன்' பாடலை ஒரு சண்டைக்கு பிறகு கேட்டுவிட்டு கண்ணில் நீரே வந்துவிட்டது (அப்புறம் சிரித்தேன் அது வேற விஷயம்). அதே போல, அடுத்த நாள் பரீட்ச்சையை வைத்துக்கொண்டு கேட்கும் பாடல்களை பின்னாளில் கேட்கையிலும் ஒரு பயம் வரும்! அந்த கேள்விக்கு அடுத்தநாள் விடை எழுதும் போது அதே பாடல் ஒலிக்கும்! இசையால் பொழுதுகளை 'அட்வான்டேஜ்' எடுத்துக்கொள்ள தெரிந்ததை போல் வேறு எந்த வஸ்துவுக்கும் தெரியவில்லை. அற்புதமான இசைகளை படைப்பவர்களின் ஊரில் பிறந்தது அதிர்ஷ்டம்தான்.
ஒரு இரவு நேர ரயில் பயணத்தில், Fanaa பாடல்களை கேட்டு அதிர்ந்தே போய்விட்டேன்! அப்படி ஒரு மனநிலை மாற்றத்தை கொண்டு வந்தது அந்த அற்புத பாடல்கள் (முன்னே எல்லாம் ஹிந்தியில் ரஹ்மான் பாடல்கள் மட்டும் உடனே கேட்டுவிடுவேன்). தூங்காமல் மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டே. பாவம் விலங்குகள். இதெல்லாம் தெரியாமலேயே சாகின்றன.
ஷாஷன்க் திரைப்படத்தில் இசை ஒளிபரப்பும் காட்சி எனக்கு மிக பிடித்தமானது. இசையே மனிதனை மனிதனாக இருக்க உதவுகிறது. ஆனால், சிறப்பான பாடல்கள் சில பிடிக்காமல் போவதன் காரணம், அதை முதலில் கேட்டபோது இருந்த சூழலின் கைங்கர்யம் என்றே தோன்றுகிறது. யப்பா நோலனேச்வரா, இந்த மூளைய புரிஞ்சிக்கவே முடியலையே?
23 comments:
பாவம் விலங்குகள். இதெல்லாம் தெரியாமலேயே சாகின்றன.
.......ரசனை - மனிதனை மனிதனாக வைத்து இருக்கும் விஷயங்களில் ஒன்று.
//ஏன், 'ஊரை தெரிஞ்சிகிட்டேன்' பாடலை ஒரு சண்டைக்கு பிறகு கேட்டுவிட்டு கண்ணில் நீரே வந்துவிட்டது (அப்புறம் சிரித்தேன் அது வேற விஷயம்). அதே போல, அடுத்த நாள் பரீட்ச்சையை வைத்துக்கொண்டு கேட்கும் பாடல்களை பின்னாளில் கேட்கையிலும் ஒரு பயம் வரும்! அந்த கேள்விக்கு அடுத்தநாள் விடை எழுதும் போது அதே பாடல் ஒலிக்கும்! இசையால் பொழுதுகளை 'அட்வான்டேஜ்' எடுத்துக்கொள்ள தெரிந்ததை போல் வேறு எந்த வஸ்துவுக்கும் தெரியவில்லை. அற்புதமான இசைகளை படைப்பவர்களின் ஊரில் பிறந்தது அதிர்ஷ்டம்தான்.
அசத்தல் பதிவு..
ஒரு குறிப்பிட்ட காதல் பாடலை இப்போது கேட்டால், எனக்கு ரொமாண்டிக் மூட் வருவதற்கு பதில் சோகம் ஏற்படும்..
உணர்வுபூர்வமான பதிவு
ம்.. ரசனையான பதிவு மச்சி..
அப்படியே நீ சில பாட்டு கேக்கும் போது மனத் திரையில் வந்துட்டுப் போகும் பொண்ணுங்களப் பத்தியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் ;)
நல்ல பதிவுங்க..
//பாவம் விலங்குகள். இதெல்லாம் தெரியாமலேயே சாகின்றன//
எப்டி பிரசன்னா......
:)
அசத்தல்
@ Chitra, முற்றிலும் உண்மை!
@ பிரியமுடன் ரமேஷ்,
@ பார்வையாளன்,
@ பதிவுலகில் பாபு,
ஊக்கத்திற்கு நன்றி :)
@ Balaji saravana,
ஹீ ஹீ, நான் என்ன ஆடோகிராப் சேரனா. அப்படி இருந்தா நல்லாத்தான் இருக்கும் :)
@ வார்த்தை,
இங்க பாருங்க இப்படியே கிண்டல் பண்ணிட்டு இருந்தீங்கன்னா டெய்லி ஒரு பதிவு போடுவேன் ஜாக்கிரதை :)
@ கல்பனா,
ஊக்கத்திற்கு நன்றி :)
"Fanaa" Music Director is Jatin-Lalit.
இசையை எந்த நேரத்திலும் ரசிக்கலாம்.மனம் இலேசாகி எல்லாமே மறந்து பறப்பதுபோல ஒரு உணர்வு தோன்றும் சில பாடல்களைக் கேட்கும்போது.உணர்வை எழுச்சியைக் கூட எங்களுடனே வைத்திருக்கும் சக்தி இசைக்கு உண்டு !
ரசனை..எனக்கு சில பாடல்களை கேட்க்கும் போது அந்த பாடலை முதலில் கேட்க்கும் போது நான் இருந்த சூழ்நிலைகள் நினைவிற்க்கு வரும்...
பதிவு நன்றாக இருந்தது...தாமதமாக பின்னூட்டமிட்டதற்கு மன்னிக்கவும்...
நல்ல ரசிகன் நீங்க.
அடடே பயபுள்ள என்னமா ரசிச்சி எழுதிருக்கு :)
நடத்து நடத்து :)
எனக்கும் பல பழய சம்பவங்களை நினைத்தால் இப்போதும் பதறும் ........
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_12.html
நன்றி!
நல்ல பதிவு.
//பதில் பாட்டாக 'மாயா மச்சிந்திரா' (நன்றாகவே) பாடிய நிஷா இப்போது எங்கு இருக்கிறாளோ//
ஹா ஹா ஹா... இப்படி போஸ்ட் போட்டு பப்ளிக்கா மெசேஜ் அனுப்பறது தானே இந்த போஸ்ட்ன் முக்கிய நோக்கம்... உண்மைய சொல்லுங்க... ஹா ஹா
எது எப்படி இருந்தாலும், போஸ்ட்ல சொன்ன matter சூப்பர்... human mind is complex than anything ever human invented... it can interpret things (songs etc) and create links to actions/happenings/reactions in a way we can't even imagine... you said that very right... good post...
ஏன் தொடர்ந்து எழுதலை?? எழுதவாங்க பாஸ்!!
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
தங்கள் கதையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_16.html
ஞாபகம் வைத்திருந்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி எஸ்.கே :) உங்கள் உழைப்பு அபாரம்!
Post a Comment