படிக்கும் புத்தகங்களை பற்றி இனி பதிவு போடலாம் என்று ஒரு எண்ணம்.. என்னுடைய வாசிப்பு இலக்கு - தமிழ் பிதாமகர்களின் புத்தகங்கள். நடு நடுவே சமகால இலக்கியங்கள் (மானே தேனே பொன்மானே)
முதலில் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம். ஜெயகாந்தன் (மீனாட்சி புத்தக நிலையம்). புத்தகத்தில் எனக்கு பிடித்த அம்சங்கள்..
ஆனந்த விகடனில் தொடர்கதையாக எழுபதுகளில் வந்தது. ஆனால் அவரே முன்னுரையில் சொல்வது போல் காலங்களுக்குள் அடைக்க முடியாதுதான்..
மனித எண்ணங்களை அப்படியே குடைந்தெடுத்து, விலாவாரியாக காட்டுவது எனக்கு பிடித்திருந்தது. பல இடங்களில் சிம்பிளாக ஒரு வரி வரும், அது எதற்கு அந்த இடத்தில் என்று யோசித்தால் நிறைய தரிசனங்கள் உண்டு..
கதையில் (வாழ்க்கையில்?) அனைவருக்கும் ஏதாவது 'கெட்ட பழக்கம்' இருந்தாலும், அனைவரும் நல்லவர்கள் அல்லது அப்படி பார்க்கப்பட வேண்டியவர்கள். Nothing is black or white (எதையுமே/யாரையுமே நல்லது-கெட்டது என்று வகைப்படுத்த முடியாது) என்று என் பெரியப்பா ஒரு முறை சொன்னார். அது எவ்வளவு பெரிய வார்த்தை என்பதும், அது அவர் அத்தனை வருட வாழ்வில் கண்டறிந்த உண்மை என்பதும் இந்த கதையின் மூலம் புரிகிறது..
எதிலுமே மிகுதியான பற்றற்று, அந்தந்த நொடிகளில் வாழ்வது என்பது ஒரு லட்சியவாதம்தான். கடினம்தான். ஆனால் அப்படி இருப்பதற்கு இந்த நூல் தூண்டுகிறது, நன்றாகத்தான் இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது. மேலும் அன்பு/மனிதாபனம் எல்லாம் ரொம்பவே contagious
என்று புரியவைக்கிறது.
இந்த புத்தகத்தை முடித்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சியும் மனித வாழ்க்கையின் மீது ஒரு பெரும் நம்பிக்கையும் இயல்பாக தோன்றுகிறது. சும்மாவா ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எல்லாருக்கும் பிடிக்கிறது?
6 comments:
கதை என்ன என்ற குறிப்பாவது கொடுத்திருக்கலாம்.குறைந்தபட்சம் கதாபாத்திரங்களின் பெயர்கள். புதிதாக படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்
கோகுல், முன்கதை கேட்காதீர்கள். படியுங்கள் கட்டாயம் உங்களுக்கு இக்கதை பிடிக்கும்.
ஜெகாவின் மாஸ்டர் பீஸ் என்பேன். 70 களில் கலக்கியடித்தது.
ஆம் கோகுல், வேண்டுமென்றேதான் கதையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.. கண்டிப்பாக வாசியுங்கள் நிச்சயம் பிடிக்கும்..
நன்றி யோகன்!
இந்த புத்தகத்தை முடித்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சியும் மனித வாழ்க்கையின் மீது ஒரு பெரும் நம்பிக்கையும் இயல்பாக தோன்றுகிறது. சும்மாவா ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எல்லாருக்கும் பிடிக்கிறது?
...... nicely written. :-)
புத்தகங்கள் பற்றி எழுத வேண்டும் என்று நீர் முடிவு செய்தது நல்ல விஷயம். இங்கே புத்தகங்கள் பற்றி எழுதுபவர்கள் மிகக் குறைவு. கொஞ்சம் நீளமாக எழுதினால் நலம்.
நன்றி Chitra :)
@Illuminati,
ஆமா உங்கள மாதிரி தினம் ஒரு புக்கு படிச்சா பரவால்ல. நானே வருடத்துக்கு ரெண்டு மூணு அதான் :)
And, நீளமாக எழுதத்தான் வேண்டும். கொஞ்ச நாள் ஆனால் மறந்து விடுகிறது :)
Post a Comment