Jan 7, 2014

ஸ்மார்ட்போன்

நண்பர் ஒருவர் (க்ளிஷே அலர்ட்) புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை கீழே போட்டுவிட்டார். கடையில் போய் கேட்டால் சரிசெய்ய ஒன்பதாயிரம் ஆகும் என்றிருக்கிறார்கள். மொபைல் விலையே பதிமூன்றாயிரம் தான். எனக்கு உடனே  'அந்த காலத்து' 1100 ஞாபகம் வந்துவிட்டது. பத்து வருடம் கழித்து இன்னமும் நல்லாவே வேலை செய்கிறது. அதில் டிங் டங் சத்தங்கள் கொண்ட ரிங்டோன்களை சொந்தமாக உருவாக்கியது எல்லாம் நினைவுக்கு வந்தது. இப்போது அதை யார் உபயோகிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? வீட்டு காயலாங்கடையான எங்க அப்பா தான்.

இப்படி ரொம்ப நாட்கள் வேலை செய்கிற மாதிரி பொருட்கள் இப்போதெல்லாம் யாரும் தயாரிப்பது இல்லை என்கிறார்கள். உண்மைதான். யோசித்துப்பார்த்தால் எல்லா பொருட்களையுமே FMCG அதாவது பேஸ்ட், சோப்பு மாதிரி வேகமாக தீரும்/விற்கும் பொருட்களாக மாற்றிவிட்டார்கள். வண்டி தயாரிப்பில் இருந்து பல துறைகளில் இந்த மாற்றத்தை காண முடிகிறது. சீப் சைனா செட் பற்றி அங்கலாய்க்கும் நாம் ஏனோ இவற்றை கண்டுகொள்வதில்லை.

சொல்ல வந்தது இந்த 'ஸ்மார்ட்'போன்கள் பற்றி. நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை விரல் நுனியில் செய்ய உதவினாலும், பொசுக்கென்று கோவப்பட்டுவிடுகிறது. ஈரப்பத மாற்றத்தால் கூட சிப்பு நனைந்து பாழாகி விடுமாம், சர்வீஸ் சென்டரில் சொல்கிறார்கள். நான் அங்கு போயிருந்த சமயம், தண்ணி தொட்டிக்குள் மொபைலை போட்ட ஒருவர், 'தண்ணி பட்டிருக்கா? சான்சே இல்லையே?' என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தார். மொபைல் நனைந்தால் கண்டுபிடிக்க அதிலேயே வெள்ளை பட்டைகள் உண்டு. தண்ணீர் பட்டதும் அது சிகப்பாக மாறி விடும். பேட்டரி உட்பட இரண்டு மூன்று இடங்களில் இது இருக்கிறது.

பேசாமல் ஒரு பேஸிக் மாடல் மொபைலை பேசுவதற்கு வைத்துக்கொண்டு, மற்ற சமாச்சாரங்களுக்கு (காசிருந்தால்) டேப்லட்டை வைத்துகொள்ள வேண்டியதுதான்.

7/365


1 comment:

Philosophy Prabhakaran said...

நானெல்லாம் ஏற்கனவே இந்தமுறையை தான் பயன்படுத்தி வருகிறேன்...

ஆனால் என்னுடைய போன் அவ்வளவு ஸ்மார்ட் கிடையாது... நோக்கியா E5... வாங்கி இரண்டரை வருடங்கள் ஆனாலும் ஒரு தொந்தரவும் தரவில்லை...