Jan 31, 2014

கற்றதும் பெற்றதும்

இந்த தொடர் இன்றுடன் நிறைவடைகிறது (நிம்மதி பெருமூச்சை கொஞ்சம் அமைதியாக விடலாமே?).  எழுதிய முப்பத்தியோரு நாட்களில், இருபது நாட்கள் நிறுத்திவிடலாமா என்று யோசித்துக்கொண்டே போட்டதுதான். இருந்தாலும் ஒரு மாதத்துக்கு மேல் தாண்டுகிறதா, பார்ப்போம் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக எப்படியாவது ஒரு மாதமாவது பதிவிட வேண்டும் என்று தொடர்ந்து இதுவரை வந்தாகிவிட்டது.

இது புதுவித அனுபவம். எத்தகைய பதிவுகள் அதிகம் ரசிக்கப்படுகின்றன என்பது முதற்கொண்டு இதில் கற்றதும் பெற்றதும் நிறைய. ஆனால் நிறுத்த முக்கிய காரணம் நேரமின்மை. மறு வாசிப்பு, எடிட்டிங் கூட செய்யாமல் பதிவிட்ட இந்த பதிவுகளை தட்டச்சு செய்ய கால் மணிநேரம். தலைப்பு சம்பந்தமான தரவுகளை தேட, சரி பார்க்க முக்கால் மணி நேரம் (சுமாராக). இப்படி ஒரு மாதத்திற்கு முப்பது மணி நேரம். இந்த நேரத்தில் உருப்படியாக ஒரு கட்டுரையையோ, கதையையோ எழுதலாம்.. இது... படிக்கலாம் அல்லவா? எனவே நிறுத்தி விட்டேன்.

எனக்கு பெர்சனலாக மிகவும் திருப்தி தந்த ஒரு செயல்பாடு இது. பதிவுகளின் தரத்தில் அல்ல. அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் என்னால் ஒரு செயலை செய்ய முடியும் என்று புரிய வைத்ததற்காக (I am an Introvert). அதை விட பெரிய நன்மை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பைத்தியம் பெரிதும் தெளிந்தது (இத்தனைக்கும் அங்கு வேடிக்கைதான் பார்க்கிறேன்).

இது வரை வருகை தந்த ஆறாயிரத்து சொச்சம் பார்வையாளர்களுக்கும் நன்றிகளை கூறிக்கொண்டு, தரமான ஒரு கட்டுரையையோ, கதையையோ படை(டி)க்க கிளம்புகிறேன். வாழ்த்துங்கள் :)

31/365


2 comments:

Philosophy Prabhakaran said...

நீங்கள் சென்ற வேகத்தில் 365 நாட்கள் எழுதிவிடுவீர்கள் போல என்றுதான் நினைத்தேன்...

Anyway, வாழ்த்துகள் :)

Prasanna said...

ஹாஹா நான் ஆரம்பித்தபோதே தெரிந்துவிட்டது ஒரு மாதம் தாண்டாது என்று :) குறிப்பாக இந்த தொடருக்கு பிறகு, உங்கள் உழைப்பு புரிந்து பிரமிக்க வைக்கிறது!

நன்றி பிரபா..