Nov 29, 2009

பிடித்தவர், பிடிக்காதவர் - தொடர் பதிவு

மணிகண்டன் அவர்கள், 'புதிதாக தமிழ்ப்பதிவு எழுத நினைக்கும் மூன்று வாசகர்களை' இந்த தொடர் பதிவு போட அழைத்திருந்தார்.. நாமளும் புதுசு தானா.. அதனால இதையே எனக்கான அழைப்பாக ஏற்று (இதுக்கெல்லாம் கூச்சமே பட்றது கிடையாது), இதோ.. கொஞ்சம் வித்தியாசமாக..

மணிகண்டன் அவர்களுக்கு முதலில் நன்றி...


இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.




பிடித்த கவிஞர்
பிடித்த கதாசிரியர்
பிடித்த நகைச்சுவை நடிகர்
பிடித்த பாடலாசிரியர்
பிடித்த வசனகர்த்தா
பிடித்த இயக்குனர்
பிடித்த நடிகர்

                                         கமல்ஹாசன்

பிடிக்காத கவிஞர்
பிடிக்காத கதாசிரியர்
பிடிக்காத நகைச்சுவை நடிகர் (!)
பிடிக்காத பாடலாசிரியர்
பிடிக்காத வசனகர்த்தா
பிடிக்காத இயக்குனர்
பிடிக்காத நடிகர்

                                         பேரரசு




வித்தியாசமாக போட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுத பட்டது.. சோ(நடிகர் அல்ல), மன்னித்து விட்டு விடுங்கள்..
ஒரு நிமிஷம்.. வித்தியாசம் தானா..? இல்லை இந்த மாதிரியும் யாராச்சும் போட்டுட்டாங்களா (அட போங்கப்பா..)

தொடர நான் அழைப்பது, என்னை மாதிரியே இதை விளையாட ஆர்வமுள்ள 5 பேரை..
முழுதும் படிக்க..

Nov 28, 2009

ஒரே வார்த்தையில் தமிழ் இயக்குனர்கள்..

இந்த இயக்குனர்களின் படங்களை ஒரே வார்த்தையில் ரசிகர்கள் விவரித்தால்..?

மணிரத்னம்: இருட்டு
ஜெயம் ராஜா: ரிப்பீட்டு

சேரன்: பாசம்
பி. வாசு: மோசம்

அகத்தியன்: காதல்
ஹரி: மோதல்

பாலா: பிணம்
ஷங்கர்: பணம்

செல்வராகவன்: சாதனை
தரணி: ரோதனை

கமல்: புரியல
பேரரசு: முடியல

அமீர்: பக்கா
டி.ஆர். : நக்கா.. டண்டணக்கா..
முழுதும் படிக்க..

Nov 15, 2009

ஹைக்கூ கதைகள்..!

1. ஆதி மனிதன்
அந்த கூட்டத்தில்
அதிகாரம் உள்ளவர்களும்
சோம்பேறிகளுமான அவர்கள்
ஒன்று சேர்ந்தார்கள்.
சாதிகள் பிறந்தது!

2. விடுதலை
பருப்பு டப்பாவில்
குழந்தையின் வைத்தியத்திற்கென,
செல்லம்மா சம்பாதித்திருந்த
பணத்தை எடுத்துக்கொண்டு
போய்.. குடித்து விட்டு..
ரோட்டை கடக்கையில்..
அடிப்பட்டு செத்துப்போனான்
சின்னப்பா..

3. அரசியல்வாதி
'கோடா'னு கோடி ரூபாய
வச்சிக்கிட்டு என்ன பண்ணுவீங்க?
என்றார் அவர்.
'எனக்கு முன்னாடி இருந்தவங்க
என்ன பண்ணாங்களோ
அதயே தான்'
என்று மடக்கினார் இவர்.

4. நிலா
'காசு எங்க இருக்கு புள்ள?
போறதுக்கே நெறையா பணம் வேணும்.
அங்க அவ்ளோ தண்ணி இருக்காம்!
முக்காவாசி பேர் போய்ட்டாங்க தான்.
இருந்தாலும்,
இங்கனயே கெடந்து உங்கள சாக உட்ருவனா?
எப்படியாச்சும் கூட்டி போய்டுறேன்'
என்றான் 2042-இல்
ஒரு பூமி ஏழை!

5. உலகின் கடைசி மனிதன்
தனியான 50ஆவது நாள்.
குதூகலித்தான்..
பொன் விழாவுக்காக அல்ல.
30 நாட்களாக தேடிக்கொண்டிருந்த..
துப்பாக்கி அன்று கிடைத்தது!
முழுதும் படிக்க..

Nov 10, 2009

அரண்டவன் அந்தாதி

அன்புள்ள அனானி
அவசரப்பட்டு
அனுப்பி விடாதே
ஆட்டோ

ஆட்டோ அனுப்பும் அளவுக்கு
அடியேன் ஆள் அல்ல..
அசட்டு அட்டிவன்!

அட்டானவன் ஆனாலும்
அன்பானவன்
அடக்கமானவன்

அடக்க ஆளில்லாமல்
அஃதொருமுறை
ஆணவத்தில் ஆடினேன்

ஆடிக்காற்று
ஆலையே அழிக்கலாம்.. ஆனால்
அபலைபால் அர்ச்சுனன்
அம்பெய்தலாமோ?

அம்போவென
அடிப்பட்டு அழ
ஆவல் அற்றவன்
அத்தகையவனிடம் அக்கறையோடு
அருள் அளிக்கலாமே..?

அளித்து அழிக்கும்
ஆண்டவனே..
அணுவே.. ஆழியே..

ஆகவே,
ஆட்டோ
அனுப்பி விடாதே
அவசரப்பட்டு
அன்புள்ள அனானி


பின் குறிப்பு:
அ, ஆ - விலேயே, அந்தாதி முறையில், அன்பிற்க்கினிய அனானியை பாட்டுடை தலைவனாகக் கொண்டு, தனது முதல் கவிதை(!)யை ஒருவன் எழுதி இருக்கிறான் என்றால்..
அவனுக்கு வந்த மிரட்டலின் பரிமாணத்தை புரிந்து கொண்டு, அவனுக்கு கை கொடுப்போமாக!! அவ்வ்வ்வ்வ்வ்.........
முழுதும் படிக்க..

Nov 3, 2009

அந்த 15 ரொபாட்கள்..!

மிகவும் ரகசியமான அந்த ப்ராஜக்ட் வெர்ல்ட் ரூலைப்பற்றி (World Rule) தெரிந்தவர்கள் மொத்தம் 8 பேர் தான். US ப்ரசிடன்டிற்கு கூடத்தெரியாது. இந்த ப்ரொக்ராமின் ப்ரம்மாக்களான மார்க் மற்றும் டாம் அன்று இறுதி கட்ட செக்கப்கள் முற்றிலும் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். படபடப்புடந்தான்.



"இது எந்த அளவு வெற்றி பெரும் என்று நினைக்கிறாய் டாம்?", என்றார் மார்க்.
"முழு வெற்றி தான். கூடிய சீக்கிரம் இந்த உலகமே நம் சொல் படி ஆட போகிறது!"

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்ட 15 ரொபாட்களும் 15 சக்தி வாய்ந்த நாடுகளில் விடப்படும். 5 வருடங்கள் கழித்து, அந்தந்த நாடுகளின் சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு, அந்த நாட்டையே ஆட்டி படைக்கக் கூடியவர்களில் ஒருவராக ஆக வேண்டும். இதுவே அந்த 15 'பேரின்' உள்ளே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ப்ரொக்ராமின் சாராம்சம்.

"5 வருடங்களில் இவை அத்தகைய உயர்வை எட்ட வாய்ப்பு இருக்கு என்றா நினைக்கிறாய்?", சந்தேகத்துடன் கேட்டவர் டாம்.
"மனிதனின் சுய சிந்தனையும், மிஷினின் உண்டு - இல்லை என்கிற துல்லியமும் ஒரு சேர வாய்ந்தவை இவை. இதன் சக்தி அளவிட முடியாதது டாம். அதுவும் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று இவைகளை யாராலும் சொல்ல முடியுமா? இதோ இதுக்கு இருக்கும் மீசையைப்பார்" ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் ரொபாட்டின் மீசையை த்டவிக்கொண்டே சொன்னவர் மார்க். டாமிற்கு இது எல்லாம் தெரிந்தாலும் கடைசி நேர பட படப்பை அடக்க முடியாது அல்லவா?

ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. அந்தந்த நாடுகளில் கொண்டு போய் விடப்பட்டனர் அந்த 15 பேரும், அந்தந்த நாடுகளின் குடிமகன் களாக.

....

இதோ ஓடிவிட்டதே 5 வருடங்கள்.. அவர்களின் கண்டுபிடிப்புகள் எந்த பதவியில் இருந்து கொண்டு அந்த நாடுகளை ஆட்டிக்கொண்டு இருக்கிறது என்று அனலைஸ் செய்து, அடுத்த கட்டத்திற்கு தயாராக கிளம்பினர் மார்க்கும் டாமும்.

"அவைகளின் நியூரல் நெட்வொர்க்கும் மனித மூலையை ஒத்து இருப்பதால், எல்லாம் ஒரே அளவு அறிவுடன் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த 15-இல் எது மிக அறிவானது, எது சக்தி வாய்ந்தது என்பதயும் பார்க்க வேண்டும்" பிளைட்டில் பாதி தூக்கத்தில் முனகிக்கொண்டார் டாம்.



முதலில் அவர்கள் இறங்கிய இடம் அவர்களின் தலை நகரான வாஷிங்க்டன். இவர்களின் 'அது' அந்த நாட்டின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக இருந்தது.
"ஆகா. என்ன சக்தி வாய்ந்த பதவி? நாம் நினைத்ததை விட இந்த ப்ராஜக்ட் பெரும் வெற்றி தான்" என்று ஆனந்த் குக்கூரலிட்டார்  மார்க்.

அடுத்து ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா என்று பயணப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், ராணுவ தளபதி (பாகிஸ்தான்) என்று விதவிதமான, சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்தார்கள் இவர்களின் கண்டுபிடிப்புகள்.

எல்லா நாட்டையும் முடித்து கொண்டு, கடைசியாக இந்தியா வந்து, அந்த 15வது ரொபாட் வீட்டின் முன் இறங்கியதுமே... இருவரும் சிறிது அதிர்ச்சி அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னே? மத்த 14 நாடுகளில் பார்க்காத காட்சியை அல்லவா இங்கு கண்டனர்? வீட்டின் (அரண்மனையின்) வெளியே ஒரே மக்கள் கூட்டம். எக்கச்சக்க கார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டவை 'நானும் வி ஐ பி தான்' என்று சொல்லிக்கொள்ளும் சிகப்பு விளக்கு பொருத்த பட்டவை.

"ஆ.. இவர்தான் 15 பேரில் மிகுந்த சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும். என்ன கூட்டம்? அதோ, அங்கு நிற்பவர் இவர்களின் பிரதமர் போல் அல்லவா இருக்கிறார்? அவரே வெளியில் காத்து கொண்டு இருக்கிராரே?" வாயை பிளந்தார் டாம்.

"ஆம். உண்மைதான். ஆனால், பிரதமரை விட உயர்ந்தவராக இருந்தாலும், இவர் எந்த பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லையே?" என்றபடியே அங்கு இருந்த 'காரிய தரிசி'யிடம் உள்ளே சொல்லி அனுப்பினார் மார்க்.

அவர்கள் உடனே உள்ளே விடப்பட்டு, 'அவர்' எதிரில் நிற்க வைக்கப்பட்டனர்.

தன் ஒளி பொருந்திய கண்களை திறந்து, இவர்களை நோக்கி புன்முறுவல் பூத்தார் ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த ஸ்வாமிகள்.
முழுதும் படிக்க..