Jul 13, 2010

விழாக்களில் பெண்கள்

பொதுவாக, திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் பெண்களின் ஆளுமை பயமுறுத்துவதாக இருக்கும்.. நம்ம பயல்கள் டென்ஷனாக இங்கும் அங்கும் ஓடியபடி சத்தம் போட்டு திரும்பி வருவதற்குள் ஒரு தீர்வை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.
.
ஜீவநதி என்பது வேறு எதுவும் இல்லை. பெண்களின் பேச்சுதான். தெரிந்தவர்களோ, புதிதாக சந்திப்பவர்களோ.. அனாயசமாக அடுத்த ஆள் கிடைக்கும் வரை பேச்சு ஓடிக்கொண்டே இருக்கும் - 'உங்க ஒன்னு விட்ட சித்தபபா பையன் யூஸ்ல எந்த ஸ்டேட்டில் இருக்கான்?' என்ற அளவுக்கு நேர்த்தியாக. வரும் தகவல்கள் டேடாபேசில் பதிவாகி, பின்னாளில் கணவன்'மார்களுக்கு' ஆப்படிக்கும் (நீங்க இருக்கும் போது தானே சொன்னாங்க.. புதுசா கேக்கறீங்க?)

இதே ஆடவர்கள் பேசுவது இந்த ரீதியில் போகும் -
'அடடே நல்லா இருக்கீங்களா.. நடேசன்?'
'நான் கணேசன்'
'ஏதோ ஒரு சன் (இது மனதில்).. ஓ ஹெ ஹெ வேலை எல்லாம் எப்படி போகுது, இப்போ எங்கே இருக்கீங்க'
அவரும் அதே செட் ஆஃப் கேள்விகள்.. அவ்வளவுதான்.. முடிந்து விடும்.. அதற்கு மேல் என்ன பேசுவது? தலையை சொரிய ஆரம்பித்து. சிறிது நேரம் கழித்து சேத்தன் பகத் நாவலில் வருவது போல் நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பித்து, ஜிம்பாப்வே அதிபரை பற்றி பேச்சு திசை திரும்பி, அடுத்து எந்த நாட்டு பிரச்சினையை அலசலாம் என்று விழித்துக்கொண்டு இருக்கும்.
.
எதிராளி பேசுவதற்கு உள்ளர்த்தம் என்ன என்று மிக எளிதாக கண்டுபிடிப்பது பெண்களின் மற்றொரு அசாத்திய திறமை (Experts in reading between the lines). கொஞ்சம் வாய்க்கா தகராறு இருக்கும் பெண்கள் வெளிப்படையாக திட்டிக்கொள்ள மாட்டார்கள்.. ஆனால் பேசிக்கொள்வது வாள் வீச்சை போல் ஷார்ப்பாக இருக்கும்..  இந்த மாதிரி திறமைகளை எல்லாம் சிறு வயதிலேயே வளர்த்துக்கொண்டு விடுவார்கள் (நம்ம பயலுவ இங்க ஓடிப்பிடிச்சு விளையாடிக்கொண்டு இருக்கும் நேரத்தில்).. இது பற்றியெல்லாம் ஆண்களுக்கு விவரம் பத்தாது. சண்டனா சண்ட.. இல்லனா சாம்பார் சாதம் ச்சே.. சமாதானம்.
.
ரொம்ப கடுப்பான ஒரு விஷயம், பெண்கள் அடுத்த பெண்களை (மட்டும்/அதிகமாக) நோட்டம் விடுவது. இந்த விஷயத்தில், ஆண்களுக்கு போட்டி ஆண் அல்ல, மற்றொரு பெண்தான். அடுத்தவர்கள் போட்டுக்கொண்டிருக்கும் நகை முதல் சிகை வரை, முடி முதல் அடி வரை, பேசியபடியே நிற்காமல் ஸ்கேன் ஓடிக்கொண்டிருக்கும். அழகாக (!) மேக் அப் (!!) எல்லாம் போட்டுக்கொண்டு போனாலும் நம்ம பயல்களை ஒருத்தர் கூட பாக்க மாட்டார்கள், சும்மா நிக்க வேண்டியதுதான். 
(புதிர்: ஒரு பெண் மற்றும் ஆண் நிற்கும் இடத்தில், வேறு ஒரு பெண் வருகிறார்.. அவர் முதலில் யாரை நோட்டம் விடுவார்?)


ஆனால் அது அப்படி இல்லையாம்.. புதுப்பேட்டையில் தனுஷுக்கு கொலை செய்ய சொல்லி கொடுக்கும்போது அவர் குரு ஒரு சில நொடிகளில் அந்த தெருவை முழுதும் ஸ்கேன் செய்வதை போல், ஆண்களை ஸ்கேன் செய்துவிட்டு.. மறுபடியும் வேறு பெண்களை பார்க்க போய் விடுவார்கள்.


இதே நம்ம பயலுவ? சொல்லித்தான் தெரியனுமா.. பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாக்கற மாதிரி பார்த்து மாட்டிக்கொண்டு விடுவார்கள்..


Disclaimer: இவை என் சொந்த கருத்துக்கள் அல்ல.. என் நண்பர்கள் மற்றும் அடுத்தவர்களின் கருத்துக்களும் உள்ளடக்கியவை 
Disclaimer அர்த்தம்: என்னைய கும்மிறாதீங்க..)
Disclaimer மற்றொரு அர்த்தம்: இந்த ஆய்வு மற்ற விஷயங்களிலும் தொடரும் (சித்ரா அக்கா எதையாச்சும் மிச்சம் வைத்தால்).

24 comments:

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு ..........வாழ்த்துகள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு ..........

Karthick Chidambaram said...

நல்ல பதிவுங்க .... நான் உங்கள கும்ம வரல .... உங்க நண்பர்களுக்கு நன்றி சொல்லுங்க நல்ல ஆய்வு.

சௌந்தர் said...

இவை என் சொந்த கருத்துக்கள் அல்ல.. என் நண்பர்கள் மற்றும் அடுத்தவர்களின் கருத்துக்களும் உள்ளடக்கியவை//

என் கருத்தும் தல....

Jey said...

இதை தொடராக எழுதுங்க தல.

அண்ணாமலை..!! said...

உக்காந்து நோட் பண்ணியிருக்காங்கப்பா!
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

சிநேகிதன் அக்பர் said...

இதெல்லாமா கவனிப்பாங்க :)

நல்லாயிருக்குங்க.

ஹேமா said...

ரொம்பத்தான் !யார்கிட்டயும் அகப்படாமலா போகப்போறீங்க பிரசன்னா !

Prasanna said...

@ rk guru & @ வெறும்பய,
நீங்க சொல்றது கிண்டல் பண்ற மாதிரியே இருக்கு.. இருக்கட்டும் இருக்கட்டும் :)


@ Karthick Chidambaram,
நல்ல ஆய்வா.. ஓகே அப்போ யாரங்கே, ஆரம்பியுங்கள் ஆராய்ச்சிகளை :)


@ சௌந்தர்,
உங்களுதுமா.. நல்லது நல்லது :)

Prasanna said...

@ Jey,
ஹி ஹி இன்னும் அந்த அளவுக்கு வளரல.. இருந்தாலும் எழுதிட வேண்டியதான் :)


@ அண்ணாமலை,
ஆமா சார் பாருங்க எப்படி இருக்காங்கன்னு (ஹீ ஹீ)


@ T.V.ராதாகிருஷ்ணன்,
வாங்க வாங்க.. ரெண்டு தடவ சிரிச்சி இருக்கீங்க :)

Prasanna said...

@ அக்பர்,
ஆமா பாருங்க எத எல்லாம் கவனிச்சிருக்காங்கன்னு :)


@ ஹேமா,
நோ நோ இப்படி சாபம் எல்லாம் விட கூடாது :)
இதெல்லாம் கரெக்டான்னு சொல்லவே இல்லையே..

தக்குடு said...

LOL post...:)

தக்குடு said...

last disc 100% true....:) (chitra akka adi pinna pooraanga)

பத்மா said...

நகைச்சுவை என இருந்தாலும் எல்லாம் உண்மை தான்

Gayathri said...

இதுக்கு கூடிய சீகிரம் ஒரு எதிர் பதிவு போட வேண்டும் பெண்கள் சார்பில்..காமெடியாத்தான் இருக்கு ஆனாலும் விடப்டாதுல ROFL...

மகேஷ் : ரசிகன் said...

:)

Good research

Prasanna said...

@ தக்குடுபாண்டி,
பொது வாழ்கைன்னு வந்துட்டா அடிகளை தாங்கத்தானே வேணும் :)


@ பத்மா,
அப்பாடி.. அப்ரூவல் கெடச்சாச்சு :)


@ Gayathri,
உங்களுக்கு அந்த கஷ்டத்த வெக்க கூடாதுன்னு தான் நானே பயபுள்ளைக பத்தியும் சொல்லிட்டேன் :)


@ மகேஷ் : ரசிகன்,
கல்லூரி காண்டீனில் நீங்க பண்ணாத ரிசர்ச்சா #திரி கிள்ளி போடுதல் :)

மகேஷ் : ரசிகன் said...

நல்லவனே நீ எப்படா பார்த்த?

(?)

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரசன்னா says:
July 13, 2010 4:38 PM

@ rk guru & @ வெறும்பய,
நீங்க சொல்றது கிண்டல் பண்ற மாதிரியே இருக்கு.. இருக்கட்டும் இருக்கட்டும் :)

///


நல்ல பதிவுன்னு சொன்னா கூட கிண்டலா...சரிங்க

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பதிவு...

இப்போ என்ன சொல்வீங்க...

Prasanna said...

@ மகேஷ் : ரசிகன்,
இதுக்கு பேரு தான் போட்டு வாங்கறது :)


@ வெறும்பய,
இதுக்கு முன்னாடியே பரவாயில்ல.. நல்லா இருக்குன்னே சொல்லுங்க :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... பிரசன்னா, அனுபவம் பேசுது போல... டிஸ்கி எல்லாம் சும்மானு எல்லாருக்கும் தெரியும் பாஸ்... ஒகே ஒகே...

ப்ரியமுடன் வசந்த் said...

டிஸ்கில என்ன மழுப்புனாலும் ஏமாத்த முடியாதுடியோவ்...

//சண்டனா சண்ட.. இல்லனா சாம்பார் சாதம் ச்சே.. சமாதானம்.//

ஹெ ஹெ ஹே....

தனி காட்டு ராஜா said...

//இது பற்றியெல்லாம் ஆண்களுக்கு விவரம் பத்தாது. சண்டனா சண்ட.. இல்லனா சாம்பார் சாதம் ச்சே.. சமாதானம்.//

:-))))))))