Jul 26, 2010

ஆழ்மனம் குட்டிக்கதை - ஒரு அலசல்

சில நண்பர்கள் என்னுடைய முந்தைய பதிவான இந்த குட்டிகதை புரியவில்லை என்று சொன்னதால (சின்ன கதை தான்.. படிக்கவும்), கதையை பற்றி ஒரு சின்ன விளக்கம் (இலக்கியவாதிகள் பொதுவாக இதை செய்யக்கூடாது.. திட்டுவார்கள்.. நான் ’அது’வாக ஆவதற்கு இன்னும் காலம் இருப்பதால் சொல்கிறேன்).
கதை படித்து விட்டீர்களா? சரி இப்போ விளக்கம்.


அவரவர் நம்பிக்கை அவரவற்கு என்றாலும், ஒரு மூட நம்பிக்கையினால் அதை நம்பாதவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவர் என்பதே கதையின் கரு.


முதல் விவாதம் நடந்தது சில வருடங்கள் முன், தூர்தர்ஷன் காலம் என்பதை விளக்க ஒலியும் ஒளியும்.. 
இரண்டாவது பத்தி - நிகழ்காலம் என்பதை காட்ட, சுரேஷுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையேயான அந்த வெளிப்படையான பேச்சு, 
மூன்றாவது பத்தியில் காலம் வெளிப்படையாக சொல்லப்படுகிறது.



சுரேஷ், தான் மணக்க விறும்பிய (இரண்டாவது பத்தியில் வரும்) பெண்ணை, எப்படி தனக்கு சம்பந்தம் இல்லாத நம்பிக்கையால் இழக்கிறான் என்பது இரண்டாவது பத்தியில் சொல்லப்படுகிறது.

சுரேஷ் சிறுவனாக இதைப்பற்றி சுதர்சனிடம் விவாதித்ததை மறந்து விட்டான். ஆனால் அவனுடைய ஆழ்மனம் மறக்கவில்லை.. 'பார் அதை நம்பாத நான் எப்படி பாதிக்கப்படுகிறேன்' என்பதை சுதர்சனிடம் சண்டை போட்டு (கனவில்) காட்ட முற்படுகிறது.. அவ்வளவுதான். விளக்கம் முடிந்து விட்டது. கதையில் இன்னும் சில விஷயங்களை மறைத்து வைத்துள்ளேன்.. திருப்பி படித்து கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: பதிவு போடுவதற்கு விஷயமே கிடைக்கவில்லை என்பதை இப்பதிவின் மூலம் சூசகமாக கூறியுள்ளேன்.. அதையும் கவனித்துக் கொள்ளவும்..
முழுதும் படிக்க..

Jul 23, 2010

ஆழ்மனம்



'உனக்கு நம்பிக்கை இல்லனா விட்ரு, எதுக்கு அடுத்தவங்க நம்பிக்கைல தலையிடற..?' 
'சுதர்சன்.. இது மூட நம்பிக்கை. நம்பாதனு சொல்றேன்.. உன் நல்லதுக்கு தான சொல்றேன் ?'
'அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. உன் கிட்ட வந்து இத நம்பு, அத நம்பாதனு எதாச்சும் சொல்றோமா? உன் வழி உனக்கு, என் வழி எனக்கு.. நான் ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் நம்பறேன், அவ்வளவுதான்'
அவன் சொல்வதும் சரியாகவே தோன்றியது.. 'ஹ்ம்ம் சரி.. எப்படியோ போ' - என்று சொல்லிவிட்டு ஒளியும் ஒலியும் பார்க்க கெளம்பினான்..பத்தாம் வகுப்பு, அது ஒன்றைத்தான் பார்க்க விடுவார்கள் விடுதியில்..
**
'உன்னை ரொம்ப பிடிக்கும், இல்லன்னு சொல்லல. ஆனா முடியாது சுரேஷ். வேற எதுனாலும் ஒத்துப்பாங்க. ஜாதகத்துல மட்டும் சமரசமே கிடையாது. அதுவும் செவ்வாய் தோஷம். ஒத்துக்க மாட்டாங்க'
'நீ நம்பறியா இதை?'
'நானும் நம்பறேன்'
'ஓகே.. Thanks for being so open, நாளைக்கு பாப்போம்'
'பாப்போம்.. சாரி..'
**
அடுத்த நாள் காலை..
எப்போதோ தன்னுடன் படித்த.. அவன் பேர் என்ன? ஆ சுதர்சன்.. அவனுடன் தெருவில் உருண்டு சண்டை போடுவது போல் சம்பந்தம் இல்லாமல் கனவு வந்தது குறித்து ஆச்சர்யப்பட்டான் சுரேஷ்..

முழுதும் படிக்க..

Jul 21, 2010

நண்பர்களை குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..

மனைவியும் இல்லாமல் தோழியும் இல்லாமல் அல்லாடுபவர்கள்,  இரண்டும் இருக்கும் நண்பர்களை (அட தனித்தனியாதான்... ஐயோ வேற வேற... அட எப்படி சொன்னாலும் தப்பா வருதே?) ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..
.
சார்ஜ் இல்ல என்று சொல்லி, 'அஞ்சு நிமிஷம் உன் மொபைல் குடு மச்சி' என்று வாங்கி விட்டு, தொலை நோக்கோடு நாம் ஆறு மாதத்திற்கு போட்டு வைத்து இருந்த ரீசார்ஜ் தொகையை ஒரே நாளில் தீர்த்து விடுவானே, அப்போ..


கூட வாடா என்று போட்டு இருக்கும் கைலியோடு இழுத்துச்சென்று, ஒரு இடத்தில் நின்று கொண்டு இருக்க.. திடீரென்று அவன் தோழி எங்கிருந்தோ வர.. ஓகே மச்சி பாப்போம் என்று மனசாட்சியே இல்லாமல், பேருந்துக்கு பணம் கூட கொடுக்காமல் நட்டாற்றில் விட்டு செல்லும்போது..


பசங்களோடு படத்திற்கு போக டிக்கெட் புக் பண்ணிக்கொண்டு இருக்க, அங்கு வந்து கிண்டலாக சிரிக்கும் போது.. 


'நீங்க எல்லாம் பட்டிகாட்டானுங்க மாதிரி இருக்கீங்களாம்' என்று தோழி சொன்னதாக கொலை வெறியுடன் சொல்லி ரணகளப்படுத்தும்போது..


ஒரு டீ கூட எங்களுக்கு வாங்கித்தராமல், அந்த பக்கம் புது துணி, செருப்பு எல்லாம் வாங்கி கொடுக்கும் போது..


திடீரென்று சம்பந்தம் இல்லாமல் நடந்து கொள்ளும்போது.. உதா. வெளியூர் டூர் ப்ளான் எல்லாம் போட்டு, கெளம்ப இருக்கும் சமயத்தில், அடிக்கும் வெயிலில் போர்வையை போர்த்திக்கொண்டு  'நான் வரல' என்று சொல்லும் போது.. 


டைப் பண்ணி வைத்திருக்கும் இந்த இடுகையை பார்த்து, மச்சி பொறாம தான? என்று சரியாக கணிக்கும்போது (லைட்டா)..

முழுதும் படிக்க..

Jul 14, 2010

தமிங்கலம்..

ஒரு நடுத்தரமான ஹோட்டலில்..

அவர்: What would you like to have, sir?
நான்: என்ன இருக்குங்க..
அவர் மெனுவை நீட்டுகிறார்.
நான்: ஒரு கொத்து பரோட்டாங்க..
அவர்: Sure.. Hot water or cold water, sir?
நான்: ஏதோ ஒண்ணு..

கொண்டு வருகிறார்..
அவர்: Shall I serve for you..?
நான்: ஐயோ அதெல்லாம் வேண்டாம்..

மொச்சக் மொச்சக் என்று தின்பதை சிறிது வெறுப்புடன் அடிக்கடி பார்க்கிறார்..

அவர்: Anything else?
நான்: இல்ல போதும்..
அவர்: Here is your bill, cash or card..
நான்: பணமாவே கொடுக்கறேன்,

போய் விட்டு மீதியை கொடுக்கும் போது,

நான்: ஏங்க பீடா, வாழைபழம்லாம் கெடையாதா?
அவர்: இல்ல, ஆய் போச்சு.. இன்னிக்கி சரக்கு வரல.. 
நான் (மனதிற்குள்): அப்படி வாங்க வழிக்கு.. வெற்றி வெற்றி.. ஹீ ஹீ
முழுதும் படிக்க..

Jul 13, 2010

விழாக்களில் பெண்கள்

பொதுவாக, திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் பெண்களின் ஆளுமை பயமுறுத்துவதாக இருக்கும்.. நம்ம பயல்கள் டென்ஷனாக இங்கும் அங்கும் ஓடியபடி சத்தம் போட்டு திரும்பி வருவதற்குள் ஒரு தீர்வை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.
.
ஜீவநதி என்பது வேறு எதுவும் இல்லை. பெண்களின் பேச்சுதான். தெரிந்தவர்களோ, புதிதாக சந்திப்பவர்களோ.. அனாயசமாக அடுத்த ஆள் கிடைக்கும் வரை பேச்சு ஓடிக்கொண்டே இருக்கும் - 'உங்க ஒன்னு விட்ட சித்தபபா பையன் யூஸ்ல எந்த ஸ்டேட்டில் இருக்கான்?' என்ற அளவுக்கு நேர்த்தியாக. வரும் தகவல்கள் டேடாபேசில் பதிவாகி, பின்னாளில் கணவன்'மார்களுக்கு' ஆப்படிக்கும் (நீங்க இருக்கும் போது தானே சொன்னாங்க.. புதுசா கேக்கறீங்க?)

முழுதும் படிக்க..

Jul 12, 2010

The Matrix படத்தை தமிழில் போடுகிறார்கள்

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்..
வரும் வெள்ளிக்கிழமை, 7.30 PM இந்திய நேரத்திற்கு கலைஞர் தொலைகாட்சியில் மாட்ரிக்ஸ் (The Matrix) படத்தை தமிழில் போடுகிறார்கள். தவறாமல் பார்க்கவும். ஏற்கனவே பார்த்து விட்டீர்களா? பரவாயில்லை, இன்னொரு முறை பாருங்கள்..



முழுதும் படிக்க..

Jul 6, 2010

முதல் நாள் கல்லூரி

நேற்று நடந்த சம்பவங்களே நினைவில் நிற்க மறுக்கும் போது, 7 வருடங்கள் முன் (அத்தனை காலம் தாண்டி விட்டதா?), முதல் நாள் கல்லூரி காட்சிகள் 'பச்சக்' என்று ஞாபகத்தில் எப்படி?


முதல் நாள் விடுதி அறையினுள் நுழைய, எனக்கு முன்னமே அங்கு இரண்டு பேர். உன்னுடன் தான் குப்பை கொட்ட வேண்டுமா என்ற பார்வைகள் (பின்னர் அறை குப்பைகள் வெளியில் கொட்டப்படவே இல்லை என்பது வேறு விஷயம்).. கைக்குளுக்கல்கள்.. விசாரிப்புகள்..



முழுதும் படிக்க..

Jul 2, 2010

தேவதை விருதுகள் அறிவிப்பு

சேர்ந்து விட்டார்கள் எனக்கு 50 பாலோவர்கள் (இப்போ 51).. என்னளவில் இது ஒரு பெரிய மைல்கல்.. ஏன் என்றால், ஆரம்பித்த சில நாட்களில், என்னடா இது, நம்ம பக்கம் யாரும் வர மாட்றாங்க என்று சில நேரம் வருத்தப்பட்டு  புலம்பியதும் உண்டு.. ஆனால், எழுத எழுததான், அடுத்தவர்களையும் படிக்க படிக்கத்தான் நம் எழுத்தோ, சொன்ன கருத்தோ (அப்படி வேற நெனச்சிட்டு இருக்கியா நீயி) இல்லை எதுவோ பிடித்து, கண்டிப்பாக நமக்கு என்று ஒரு நட்பு வட்டம் உருவாகும் (#அறிவுரை)..



முழுதும் படிக்க..

Jul 1, 2010

பதிவுலகம் பற்றி திரு. கமல்..

அனைவருக்கும் வணக்கம்! நான் நடிகர் கமல் பேசுகிறேன்.. பதிவுலகை பற்றி கமல் பேசுகிறானா? என்ன தகுதி இருக்கிறது இவனுக்கு என்று முந்திரிக்கொட்டை தனமாக கேள்வி கேட்பவர்களுக்கு.. மக்கள் மனதில் தேவையான கருத்துக்களை பதிப்பவன் என்ற முறையில்.. நானும் ஒரு பதிவர்தான் என்று என்னால் பெருமையாகவே சொல்லிக்கொள்ள முடியும்.

எனக்கு தமிழ் வலையுலகம் மிகப்பிடிக்கும். அதில் வரும் படைப்புகள், வாதங்கள் முதலியவற்றை பார்த்தாலே நாம் எந்த கொம்பனுக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது புலனாகும். ஆனால், எனக்கு பிடிக்காத ஒரு அம்சம்.. அடுத்தவர்கள் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் ஆசை.. அவ்வபோது தலை தூக்கிக்கொள்ளும் அந்த ஆசை...

நீ ஏன் இதைப்பற்றி எழுதவில்லை? நீ அதை ஆதரிக்கிறாயா..
நீ ஏன் இதைப்பற்றி எழுதுகிறாய்? நீ ஒரு சொம்பு தூக்கியா..
இவர்கள் இதை கண்டு கொள்ளவே இல்லையே? பின்னூட்டம் கூட போடவில்லை.. எனக்கு ரத்தம் கொதிக்கிறது..

என்பது போன்ற, அடுத்தவனின் பேனாவை பிடுங்கி தான் எழுதும் இந்த போக்கு, கண்டிக்கத்தக்கது.. 'யாரும் இப்படி சொல்லக்கூடாது என்று நீ சொல்கிறாயே, இது சர்வாதிகாரம் இல்லையா கமல்'? என்று கேட்பவர்களுக்கு.. மற்றவர்கள் என்ன எழுத வேண்டும் என்று ஆணையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்று சொல்லும் உரிமை எனக்குண்டு என்றே நம்புகிறேன்..

உன் சுதந்திரம் அடுத்தவனின் மூக்கு நுனிவரை தான் என்பதை புரிந்து கொண்டு, கருத்து சுதந்திரதிற்கு கை கொடுப்போம்.. அந்த சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்வோம். நன்றி.. வணக்கம்!


குறிப்பு: இது என் பக்கத்து தெரு மேடை நாடக நடிகர் திரு. கமல் சக்சேனா சொன்ன கருத்துக்கள் (பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் ஹீ ஹீ) ..
முழுதும் படிக்க..