Jul 26, 2010

ஆழ்மனம் குட்டிக்கதை - ஒரு அலசல்

சில நண்பர்கள் என்னுடைய முந்தைய பதிவான இந்த குட்டிகதை புரியவில்லை என்று சொன்னதால (சின்ன கதை தான்.. படிக்கவும்), கதையை பற்றி ஒரு சின்ன விளக்கம் (இலக்கியவாதிகள் பொதுவாக இதை செய்யக்கூடாது.. திட்டுவார்கள்.. நான் ’அது’வாக ஆவதற்கு இன்னும் காலம் இருப்பதால் சொல்கிறேன்). கதை படித்து விட்டீர்களா? சரி இப்போ விளக்கம். அவரவர் நம்பிக்கை அவரவற்கு என்றாலும், ஒரு மூட நம்பிக்கையினால் அதை நம்பாதவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவர் என்பதே கதையின் கரு. முதல் விவாதம் நடந்தது சில வருடங்கள்...
முழுதும் படிக்க..

Jul 23, 2010

ஆழ்மனம்

'உனக்கு நம்பிக்கை இல்லனா விட்ரு, எதுக்கு அடுத்தவங்க நம்பிக்கைல தலையிடற..?' 'சுதர்சன்.. இது மூட நம்பிக்கை. நம்பாதனு சொல்றேன்.. உன் நல்லதுக்கு தான சொல்றேன் ?''அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. உன் கிட்ட வந்து இத நம்பு, அத நம்பாதனு எதாச்சும் சொல்றோமா? உன் வழி உனக்கு, என் வழி எனக்கு.. நான் ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் நம்பறேன், அவ்வளவுதான்'அவன் சொல்வதும் சரியாகவே தோன்றியது.. 'ஹ்ம்ம் சரி.. எப்படியோ போ' - என்று சொல்லிவிட்டு ஒளியும் ஒலியும் பார்க்க கெளம்பினான்..பத்தாம் வகுப்பு,...
முழுதும் படிக்க..

Jul 21, 2010

நண்பர்களை குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..

மனைவியும் இல்லாமல் தோழியும் இல்லாமல் அல்லாடுபவர்கள்,  இரண்டும் இருக்கும் நண்பர்களை (அட தனித்தனியாதான்... ஐயோ வேற வேற... அட எப்படி சொன்னாலும் தப்பா வருதே?) ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்.. . சார்ஜ் இல்ல என்று சொல்லி, 'அஞ்சு நிமிஷம் உன் மொபைல் குடு மச்சி' என்று வாங்கி விட்டு, தொலை நோக்கோடு நாம் ஆறு மாதத்திற்கு போட்டு வைத்து இருந்த ரீசார்ஜ் தொகையை ஒரே நாளில் தீர்த்து விடுவானே, அப்போ.. கூட வாடா என்று போட்டு இருக்கும் கைலியோடு இழுத்துச்சென்று, ஒரு இடத்தில் நின்று கொண்டு...
முழுதும் படிக்க..

Jul 14, 2010

தமிங்கலம்..

ஒரு நடுத்தரமான ஹோட்டலில்.. அவர்: What would you like to have, sir? நான்: என்ன இருக்குங்க.. அவர் மெனுவை நீட்டுகிறார். நான்: ஒரு கொத்து பரோட்டாங்க.. அவர்: Sure.. Hot water or cold water, sir? நான்: ஏதோ ஒண்ணு.. கொண்டு வருகிறார்.. அவர்: Shall I serve for you..? நான்: ஐயோ அதெல்லாம் வேண்டாம்.. மொச்சக் மொச்சக் என்று தின்பதை சிறிது வெறுப்புடன் அடிக்கடி பார்க்கிறார்.. அவர்: Anything else? நான்: இல்ல போதும்.. அவர்: Here is your bill, cash or card.. நான்: பணமாவே...
முழுதும் படிக்க..

Jul 13, 2010

விழாக்களில் பெண்கள்

பொதுவாக, திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் பெண்களின் ஆளுமை பயமுறுத்துவதாக இருக்கும்.. நம்ம பயல்கள் டென்ஷனாக இங்கும் அங்கும் ஓடியபடி சத்தம் போட்டு திரும்பி வருவதற்குள் ஒரு தீர்வை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். . ஜீவநதி என்பது வேறு எதுவும் இல்லை. பெண்களின் பேச்சுதான். தெரிந்தவர்களோ, புதிதாக சந்திப்பவர்களோ.. அனாயசமாக அடுத்த ஆள் கிடைக்கும் வரை பேச்சு ஓடிக்கொண்டே இருக்கும் - 'உங்க ஒன்னு விட்ட சித்தபபா பையன் யூஸ்ல எந்த ஸ்டேட்டில் இருக்கான்?' என்ற அளவுக்கு நேர்த்தியாக. வரும் தகவல்கள் டேடாபேசில் பதிவாகி,...
முழுதும் படிக்க..

Jul 12, 2010

The Matrix படத்தை தமிழில் போடுகிறார்கள்

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.. வரும் வெள்ளிக்கிழமை, 7.30 PM இந்திய நேரத்திற்கு கலைஞர் தொலைகாட்சியில் மாட்ரிக்ஸ் (The Matrix) படத்தை தமிழில் போடுகிறார்கள். தவறாமல் பார்க்கவும். ஏற்கனவே பார்த்து விட்டீர்களா? பரவாயில்லை, இன்னொரு முறை பாருங்கள்.. ...
முழுதும் படிக்க..

Jul 6, 2010

முதல் நாள் கல்லூரி

நேற்று நடந்த சம்பவங்களே நினைவில் நிற்க மறுக்கும் போது, 7 வருடங்கள் முன் (அத்தனை காலம் தாண்டி விட்டதா?), முதல் நாள் கல்லூரி காட்சிகள் 'பச்சக்' என்று ஞாபகத்தில் எப்படி? முதல் நாள் விடுதி அறையினுள் நுழைய, எனக்கு முன்னமே அங்கு இரண்டு பேர். உன்னுடன் தான் குப்பை கொட்ட வேண்டுமா என்ற பார்வைகள் (பின்னர் அறை குப்பைகள் வெளியில் கொட்டப்படவே இல்லை என்பது வேறு விஷயம்).. கைக்குளுக்கல்கள்.. விசாரிப்புகள்.. ...
முழுதும் படிக்க..

Jul 2, 2010

தேவதை விருதுகள் அறிவிப்பு

சேர்ந்து விட்டார்கள் எனக்கு 50 பாலோவர்கள் (இப்போ 51).. என்னளவில் இது ஒரு பெரிய மைல்கல்.. ஏன் என்றால், ஆரம்பித்த சில நாட்களில், என்னடா இது, நம்ம பக்கம் யாரும் வர மாட்றாங்க என்று சில நேரம் வருத்தப்பட்டு  புலம்பியதும் உண்டு.. ஆனால், எழுத எழுததான், அடுத்தவர்களையும் படிக்க படிக்கத்தான் நம் எழுத்தோ, சொன்ன கருத்தோ (அப்படி வேற நெனச்சிட்டு இருக்கியா நீயி) இல்லை எதுவோ பிடித்து, கண்டிப்பாக நமக்கு என்று ஒரு நட்பு வட்டம் உருவாகும் (#அறிவுரை).. ...
முழுதும் படிக்க..

Jul 1, 2010

பதிவுலகம் பற்றி திரு. கமல்..

அனைவருக்கும் வணக்கம்! நான் நடிகர் கமல் பேசுகிறேன்.. பதிவுலகை பற்றி கமல் பேசுகிறானா? என்ன தகுதி இருக்கிறது இவனுக்கு என்று முந்திரிக்கொட்டை தனமாக கேள்வி கேட்பவர்களுக்கு.. மக்கள் மனதில் தேவையான கருத்துக்களை பதிப்பவன் என்ற முறையில்.. நானும் ஒரு பதிவர்தான் என்று என்னால் பெருமையாகவே சொல்லிக்கொள்ள முடியும். எனக்கு தமிழ் வலையுலகம் மிகப்பிடிக்கும். அதில் வரும் படைப்புகள், வாதங்கள் முதலியவற்றை பார்த்தாலே நாம் எந்த கொம்பனுக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது புலனாகும். ஆனால், எனக்கு பிடிக்காத ஒரு...
முழுதும் படிக்க..