படிக்கும் புத்தகங்களை பற்றி இனி பதிவு போடலாம் என்று ஒரு எண்ணம்.. என்னுடைய வாசிப்பு இலக்கு - தமிழ் பிதாமகர்களின் புத்தகங்கள். நடு நடுவே சமகால இலக்கியங்கள் (மானே தேனே பொன்மானே)
முதலில் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம். ஜெயகாந்தன் (மீனாட்சி புத்தக நிலையம்). புத்தகத்தில் எனக்கு பிடித்த அம்சங்கள்..
ஆனந்த விகடனில் தொடர்கதையாக எழுபதுகளில் வந்தது. ஆனால் அவரே முன்னுரையில் சொல்வது போல் காலங்களுக்குள் அடைக்க முடியாதுதான்..
மனித எண்ணங்களை அப்படியே குடைந்தெடுத்து, விலாவாரியாக காட்டுவது எனக்கு...