பேரரசு இருக்காரே, அவர பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருக்கலாம். அவரு விஜய் மாதிரி யான ஆட்களுக்கு ஒரு மணி ரத்னம். பரத் மாதிரி ஆட்களுக்கு சத்யஜித் ரே. இப்படி ஒரு சிறந்த இயக்குனர் பத்தி எழுதலனா எபடிங் நா. இவரு எப்டி என்றால், இவரின் காவியங்களில் எல்லாம் சமுதாயத்துக்கு பல நல்ல கருத்துக்கள எடுத்து கூறுவார். உதாரணத்துக்கு கதாநாயகி கொஞ்சமா டிரஸ் போட்டுட்டு வர கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவார். அடுத்த கனவு பாட்டுல ரெட்டை அர்த்த வரிகள்ள பின்னி பிடல் எடுப்பார்.
இவர் ஹீரோக்கள் எல்லாம் உடம்பை நெளித்து கொண்டே இருப்பார்கள் (காமெடி காட்சிகளில்). செண்டிமெண்ட் பத்தி சொல்லவே வேணாம். நண்பன் இறந்துடுவான். இல்ல தங்கச்சி புருஷன் சாக பாப்பான். இல்ல தங்கச்சி குச்சி மிட்டாயில, மிட்டாய் இருக்கும் - குச்சி இருக்காது. இப்படி பல துன்பங்களை ஹீரோ சந்திப்பார். கடைசியில் வெற்றி பெறுவார். இப்படி இவருக்கு இணை யாரும் இல்லையா நு சினி உலகம் கலங்கினப்போ நீ எல்லாம் என்ன டா சின்ன பய நு ஒரு என்ட்ரி கொடுத்தார்கள் ரித்தீஷ், ஆர்.கே. , சாம் அன்டர்சன் (!) போன்றோர்.
சரி, இவர்களிடத்தில் கத்துக்க எதுவும் இல்லயா? இருக்கு. அவர்களின் தன்னம்பிக்கை!! யாரிடமும் கத்து கொள்ள விஷயம் உண்டு :-) நான் ப்ளாக் எழுத ஆரம்பிக்க இவர்கள் கொடுத்த நம்பிக்கையும் ஒரு காரணம் தான்..
4 comments:
ம்ம்ம்..எப்படியோ, ஜே.கே.ரித்திஷ், ஆர்.கே, பேரரசு லிஸ்டுல நீங்களும் வந்துட்டீங்க.
வாழ்த்துக்கள்!
ரொம்ம்ம்ப நன்றி Selvakumar! இந்த பெருமைய எப்படி தாங்கிக்க போறேன்?
இப்படிக்கு,
எவ்ளோ அசிங்கபட்டாலும் அதை பெருமையாகவே எடுத்து கொள்வோர் சங்கம் :)
தங்கச்சி குச்சி மிட்டாயில, மிட்டாய் இருக்கும் - குச்சி இருக்காது. இப்படி பல துன்பங்களை ஹீரோ சந்திப்பார். //
ஹாஹாஹா.
Nice Ending ;)
//Nice Ending//
ஊக்கத்திற்கு நன்றி விக்னேஷ்வரி :))
Post a Comment