அருமையான comedy ஐ எதிர்பார்க்கும் எவரையும் இத்தொடர் கவராமல் போகாது. இது 6 நண்பர்களை பற்றிய கதை. 10 வருடங்கள் அவர்கள் வாழ்கையில் நடக்கும் சம்பவங்களை மிகவும் கலகலப்பாக நமக்கு எடுத்து காட்டுகிறது. DVD-இல் ஒரு எபிசொட் பார்க்க ஆரம்பித்தால், எழுந்து போக மனசு வராது. மொத்தம் 10 சீசன், 236 எபிசொட்கள்.
6 நண்பர்களில் மூவர் ஆண்கள், மூவர் பெண்கள். அவர்களை பற்றிய சிறிய அறிமுகம்.
1. மோனிகா (Monica): திரு திரு பட ஹீரோயினி போல எல்லாத்தயும் ஒழுங்கு படுத்திகொண்டே அலையும் ஒரு காரக்டர். 6 பேரில் மிக பொருப்பானவர். Perfectionist. சமையல் செய்வது மிக பிடித்த ஒன்று (Hotel Chef ஆக பின்னாளில் வேலை).
2. ராஸ் (Ross): மோனிகா வின் தம்பி. Paleontology (related to fossils), அதாவது தொல்லியல் எச்ச துறையில் (!) இருப்பவர். Chandler-இற்கு அடுத்து அதிக பல்ப் வாங்குபவர். 3 முறை திருமனம் செய்தும் (ஒரு தடவை தெரியாமல் நடந்தது) தனியே வாழ்பவர். அறிவியல் விஷயங்களில் ஈடுபாடு அதிகம் (மற்றவர்களுக்கு இது பிடிக்காது).
3. சாண்ட்லர் (Chandler): அதிக பல்ப் வாங்குபவர். புள்ளியியல் துறையில் வேலை செய்பவர். இவரின் கிண்டல்கள் மிக பிரசித்தி (அடுத்தவர்களை திட்டாமல், உதைக்காமல், அடி வாங்காமல் இவர் செய்யும் கிண்டல்கள் மிக மிக ரசிக்க வைக்க கூடியது). மோனிகா வின் எதிர் வீட்டில் வசிப்பவர். பின்னாளில் மோனிகா வை மணப்பார். ராஸின் கல்லூரி தோழனும் கூட.
4. ஜோயி (Joey): சாண்ட்லரின் ரூம் மேட். நடிப்பு சான்ஸ் தேடி அலைபவர். அழகானவர், பெண்களை எளிதில் வசப்படுத்தி விடுவார். நடிப்பு சான்ஸ் தேடி அலைவதால் பெரும்பாலும் சாண்ட்லர் ஐயே பணத்துக்காக நம்பி இருப்பவர். இவர் தான் பல்ப் வாங்குபவதில் No. 1. ஆனால் தான் பல்ப் வாங்கிகிறோம் என்றே அரியாத வெள்ளை மனசுக்காரர். அதனால் சாண்ட்லர் No. 1
5. பீபி (Phoebe): அலாதியான character. சிறு வயது முதல் பல கஷ்டங்களை அனுபவிததால், நடவடிக்கைகள் சிறிது வித்தியாசமாக இருக்கும் (நமது வாழ்விழும் இப்படிப் பட்டவர்களை பார்க்க முடியும் அல்லவா?). இன்னொரு வெள்ளை மனசுக்காரர். அதனாலோ என்னமோ தனக்கு சில அமானுஷ்ய சக்தி இருப்பதாக நம்புவார் (அது உண்மையும் கூட). மச்சாஜ் செய்வது வேலை.
6. ரேச்சல் (Rachel): அழகானவர் (6 பேரில் மிகவும் ப்ரபலமானவரும் கூட). மோனிகா வின் பள்ளி கால தோழி. ஒரு கட்டத்தில் ராஸை காதலித்து பின் பிரிபவர். ஆர்வம் ஃபேஷனில். முதலில் மோனிகா வின் ரூம் மேட் ஆக இருந்து பின் ஜோயி ரூம் மேட் ஆவார் (சாண்ட்லர் - மோனிகா திருமணம் போது).
ஆறு பேரும் ஆறு தினுசில் இருந்தாலும், இவர்களின் நட்பு நம்மை பொறாமை கொள்ள செய்ய கூடியது. இவர்களை இணைக்கும் ஒரே விஷயம், இவர்கள் அனைவருமே நல்லவர்கள். இதன் கடைசி எபிசொட் 52.5 மில்லியன் மக்களால் கண்ணீருடன் (சிரிப்பு தொடர் என்றாலும் கூட) பார்க்கபட்டது.
9 comments:
/இதன் கடைசி எபிசொட் 52.5 மில்லியன் மக்களால் கண்ணீருடன் (சிரிப்பு தொடர் என்றாலும் கூட) பார்க்கபட்டது/
நல்ல தொடராய் இருக்கவேண்டும்!
தகவலுக்கு நன்றி!
வணக்கம் வேல்ஜி. நிச்சயம் நல்ல தொடர் தான். உரையாடல்கலிலேயே சிரிக்க வைப்பது சிறந்த விஷயம் அல்லவா. பின்னூட்டத்திற்கு நன்றி!
நல்லா இருக்கு...தொடருங்கள்.......
அருமை தோழா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
//துரையில்// துறை !
எனக்கும் மிகவும் பிடித்த தொடர்களில் இதுவும் ஒன்று !
பீஃபே தான் எனக்குப் பிடித்தவர் !
ஊக்கத்திற்கு மிக்க நன்றி புலிகேசி! தொடருகிறேன் :)
உலவு, ரொம்ப நன்றி! தொடருகிறேன். இப்போதைக்கு விடுவதாய் இல்லை :)
@ TBCD
ஹி ஹி! கவனிக்காமல் விட்டு விட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி!
எனக்கு 6 பேருமே பிடித்தாலும் (உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்), கொஞ்சூண்டு அதிகம் பிடித்தவர் சாண்ட்லர்.
பின்னூட்டத்திற்கு நன்றி!
Did you watch Seinfeld? You will enjoy that too.....
@Chitra,
இதையே எப்ப பாத்தாலும் பாத்துட்டு இருக்கனு ஏற்கனவே வீட்டில் திட்டு.. அதுக்கு எல்லாம் பார்த்தா ஆகுமா..
அடுத்து Seinfeld பாக்க ஆரம்பிக்க வேண்டிதான்..
Thank you for the suggestion :)
Post a Comment