Mar 11, 2012

அண்ணா நூற்றாண்டு நூலகம் - திடீர் விசிட்


IT கம்பெனி வளாகத்தை விட சுத்தமாக, துல்லியமாக பராமரிக்கிறார்கள். பார்க்கிங்கில் ஆரம்பித்து எதற்குமே ஒரு பைசா கூட செலவில்லை

உறுப்பினர் எல்லாம் ஆக வேண்டியதில்லை. ஆனால் புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு வரமுடியாது (திருட்டுத்தனம் செய்தால் RFID அலறிவிடும்)

கட்டிட வடிவமைப்பு அபாரம். எஸ்கலேட்டர், லிப்ட் என்று நல்ல வசதி

குளிர்சாதனங்கள், உட்கார்ந்து படிக்க சோபாக்கள், அமைதியான சூழல், புத்தகங்கள் தேட கம்ப்யூட்டர் என்று நிறைய சொகுசு

கிட்டத்தட்ட அத்தனை தலைப்புகளிலும் அத்தனை புத்தகங்களும் கிடைக்கிறது. எனக்கு ஓர் அளவிற்கு அறிமுகமான தமிழ் எழுத்தாளர்கள் பிரிவை வைத்து சொல்கிறேன். 

ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு வகையான பிரிவு (குழந்தைகள் பிரிவின் வடிவ நேர்த்தி ஏற்கனவே நிறைய சிலாகிக்கப்பட்டு விட்டது). பிரபஞ்சத்தையும் அதை தாண்டியதையும் இந்த 9 மாடியில் அடக்கி விட்டனர்

என்னமோ நகைக்கடைக்கு போனவர் மாதிரி இதை படிக்கலாமா அதை படிக்கலாமா ஐயோ இன்னும் 4 மாடி இருக்கு என்று ஒரே பரபரப்பு

இப்படி ஒரு நூலகத்தை இடிக்க ஆலோசனை தந்தவருக்கு பகை, எதிர்ப்பை தாண்டி கடும் வன்மம் 'எதன்மீதோ' இருக்கவேண்டும்

நிறைய மாணவர்களை நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர் (இடம் தேர்வு அருமை. சுற்றிலும் கல்லூரிகள்). பேனாவை வைத்து பேப்பரில் எழுத வேண்டும் என்று ஆசையாக இருந்தது

எனக்கு ரொம்ப பிடித்த அம்சம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள், அத்தனை அன்புடன், மிரட்டல்கள் இல்லாமல் பாசமாக நடந்து கொண்டார்கள். புதுசாக, சோகமாக இருந்தது

3 comments:

Prabu M said...

இந்த நூலகம் நிச்சியம் ஓர் அழகான விஷயம்... இதை எப்படிங்க இடிக்க சொல்றாங்க! :-(
நான் இன்னும் நூலகத்தைப் பார்த்ததில்லை..... சுற்றிக்காட்டியதற்கு நன்றி நண்பா!

Prabu M said...

//எனக்கு ரொம்ப பிடித்த அம்சம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள், அத்தனை அன்புடன், மிரட்டல்கள் இல்லாமல் பாசமாக நடந்து கொண்டார்கள். புதுசாக, சோகமாக இருந்தது//


இது ரொம்ப நல்ல விஷயம்! நெக்ஸ்ட் டைம் சென்னை வரும்போது நிச்சியம் விசிட் அடித்து நானும் ஒரு பதிவுபோட முயற்சிக்கிறேன்... :)

பாலா said...

இதன் பின்னனியில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை