ரொம்ப நாள் கழித்து, கிழக்கு சீமையிலே படத்தில் கத்தாழங்காட்டு வழி பாடலை பார்த்தேன்.. ஒரு பெண் மணம் முடித்து புகுந்த வீடு போகும் போது, அண்ணனும் தங்கையுமாக தங்கள் மனதில் உள்ள வலியை (பிரிவு என்றாலே வலிதானே?) பாடுவதாக இருக்கும். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, இருவர் உள்ளம் மட்டும் பழைய நினைவுகளை நினைத்து அழும்..
இனி, நான் என் வீட்டில் இருக்க போவதில்லை என்ற உண்மை அவளை தாக்கும்...
Apr 26, 2010
Apr 19, 2010
பிடித்த படம் - Shawshank Redemption (ஷாஷன்க் ரிடம்ப்ஷன்)

'சிறைக்குள் இருக்கும் எல்லாரும் கெட்டவங்க இல்லை. வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியன்கள் இல்லை' என்பது படத்தின் உட்கரு. ஆனால் எனக்கு படத்தில் பிடித்தது- ஒரு மனிதன் வாழ்க்கையில் எதை இழந்தாலும், 'நம்பிக்கை' இழக்காமல் இருந்தால் போதும் என்பதே. மற்றும் ஞயாயம் இறுதியில் வென்றே தீரும் என்ற இயற்க்கையின் தீர்ப்பு. மற்றும் விடா முயற்சி.. தன்னம்பிக்கையின் சக்தி.. இன்னும் பல 'மற்றும்'கள்.. இத்தனை விஷயங்களையும்...
Apr 17, 2010
தனிமை

ரயில் பயணத்தில், வெளியில் தெரியும் இருட்டில், திடீரென்று ஒரு வீடு தெரிகிறது. அதில் ஒற்றை மஞ்சள் பல்பு. வெளியில் ஒரு குழந்தை வேறு உட்கார்ந்திருக்கிறதே? சட்டென்று பார்வையில் இருந்து அக்காட்சியை மறைத்து விடும் ரயிலின் வேகம். இப்படி தனிமையை அப்பட்டமாக பார்த்ததில் ஒரு பிரமிப்பு கலந்த பரிதாபம். அந்த வீட்டை சுற்றி பல கிலோ மீட்டருக்கு ஒன்றும் கிடையாது. அப்படி ஒரு வீட்டை பார்த்தவுடன் பல கேள்விகள்...
Apr 9, 2010
இன்பர்மேஷன் கலெக்டரா நீங்கள்?

அவருக்கு தெரியாமல் அவர் சுற்று வட்டாரத்தில் ஒரு அணுவும் அசையாது (பாய்ஸ் செந்தில் மாதிரி), என்பது போல் ஒரு காரெக்டர் எல்லா க்ரூப்பிலும் நிச்சயம் இருக்கும். உதாரணத்திற்கு, என் அலுவலகதில் இருக்கும் இப்படி ஒரு 'கலெக்டர்'ஐ பற்றி சொல்கிறேன். யார் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் பூர்விகம்/ஜாதி மதம், சொத்து போன்ற எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பான். இவனுடைய தகவல் திரட்டும்...
Apr 5, 2010
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது..?

ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது என்று தோன்ற வைக்கும் சம்பவம் எல்லாருக்குமே நடந்திருக்கும். எப்போது நினைத்தாலும் கடுப்பை ஏற்றும், அப்படிப்பட்ட, எனக்கு நடந்த (அடிக்கடி), இப்போது நினைவில் இருப்பவை சில (பல நடக்கும்..இங்கு சில மட்டும்)
.
.
பேருந்தில் எனக்கு அருகில் இருக்கும் சீட்டில் இருப்பவரை தவிர, மத்த அனைவரும் இறங்குவது.. என் அருகில் இருப்பவர் இறங்கும் போது, பேருந்தே காலியாகி விடுவது..
'முக்கியமான'...
Subscribe to:
Posts (Atom)