Apr 5, 2010

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது..?

ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது என்று தோன்ற வைக்கும் சம்பவம் எல்லாருக்குமே நடந்திருக்கும். எப்போது நினைத்தாலும் கடுப்பை ஏற்றும், அப்படிப்பட்ட, எனக்கு நடந்த (அடிக்கடி), இப்போது நினைவில் இருப்பவை சில (பல நடக்கும்..இங்கு சில மட்டும்)
.
.

பேருந்தில் எனக்கு அருகில் இருக்கும் சீட்டில் இருப்பவரை தவிர, மத்த அனைவரும் இறங்குவது.. என் அருகில் இருப்பவர் இறங்கும் போது, பேருந்தே காலியாகி விடுவது..


'முக்கியமான' வேலை ஏதாச்சும் செய்ய வேண்டி இருக்கும் போது (பிளாக் அல்ல)/வேர்த்து விறுவிறுத்து வெளிய போயிட்டு வரும்போது பவர் கட் ஆவது..

கக்கூஸில் இருக்கும் போது, அனைவரும் கங்கனம் கட்டிக் கொண்டு கால் பண்ணுவது.. (இவ்ளோ நேரம் சும்மா தான இருந்தேன்.. அப்போ பண்ண வேண்டீதான?). அப்புறம், ஏண்டா எப்போ ஃபோன் பன்னாலும் எடுக்க மாட்டிங்கற? என்று திட்டுவது..

24/7 இயங்கி வரும் ஒரு கடை, நான் அவசரமாக ஏதாவது வாங்க போகும் போது மூடி இருப்பது.. அன்றைக்கு என்று சுற்று வட்டாரத்தில் அனைத்து கடைகளுமே சாத்தி இருப்பது (பந்த்)

எங்கு சென்றாலும், நான் இருக்கும் இடத்திற்கு, 1 கி.மீ சுற்றளவில், பெண்களின் சுவடே இல்லாமல் இருப்பது (நீ ஒரு ராசி கெட்டவன், எங்க கூட வராத என்று திட்ட துவங்கி விட்டார்கள் சக சிடிசன்ஸ். லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ஸில் டிரைவராக போய் விடாதே.. கலெக்ஷனே ஆகாது என்று கிண்டல் வேறு)


கழுத்தில் கத்தி இருக்கும் போது முதுகில் பயங்கரமாக அரிப்பது (ரவுடி எல்லாம் இல்ல.. சலூன் கடையில சொன்னேன்)

மிகவும் எதிர் பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் தொடர். ஆவலோடு அந்த நேரத்திற்கு போட்டால், தூர்தர்ஷனில் ஒரு சேட்டு ஷெனாய் வாசித்து கொண்டு இருப்பார் (இது சின்ன வயசில்.. அடிக்கடி நடக்கும்)

.
.

இத்தோட நிறுத்திக்கிறேன்..

9 comments:

பிரசன்னா said...

அப்படியே உங்களுக்கு நடந்ததையும் சொல்லிட்டு போலாம்.. ஒன்னும் தப்பில்ல :)

பட்டாபட்டி.. said...
This comment has been removed by the author.
பட்டாபட்டி.. said...

சார்.. இப்படி எல்லோர்கும் நடக்காது..

அனேகமா , உங்களுக்கு ஏதோ சக்தி இருக்குனு நினைக்கிறேன்..

நீங்க ,ஏன் ஆசிரமம் ஆரம்பிக்ககூடாது..
( கண்டிப்பா, எனக்கு ஒரு போஸ்ட் வேணும்.. சொல்லிட்டேன்...)

பிரசன்னா said...

@பட்டாபட்டி,

நானும் அப்டி தான் நினைக்கிறேன் (அப்போ வரணும்ன்ற எண்ணம் இருந்துச்சா உனக்கு-வடிவேலு).. ஆனா அவ்ளோ (வரப்போகும்) பணத்த வச்சிக்கிட்டு என்ன செய்றது?

வருகைக்கு நன்றி :)

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த "போன் கால்" மேட்டர்
எனக்கும் நடந்திருக்கு, ஹி.........ஹி........

பிரசன்னா said...

@சைவகொத்துப்பரோட்டா,

வெஜ் (செல்ல பேர்), நம்ப ரெண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமை..
நன்றி :)

Vels said...

இது எல்லாம் போக,
நாம பணம் எடுக்கப்போகும்போது மட்டும் ATM - ல கூட்டம் இருக்கும். இல்லேன்னா "OUT OF SERVICE" - ஆ இருக்கும்.

//சேட்டு ஷெனாய் வாசித்து கொண்டு இருப்பார்.//

விழுந்து விழுந்து சிரிச்சேன்.

இன்னொன்னும் நடக்கும். ஒளியும் ஒலியும் போயிட்ருக்கும்போது திடீர்னு நிறுத்தி " ஒளியும ஒலியும் சில நொடிகளில் தொடரும்" னு ஒரு அட்டை. பின்னால ஒரு மொக்கை மியூசிக்.

அக்பர் said...

புதுசா சொல்ல என்ன இருக்கு :)

நல்லா சொல்லி இருக்கிங்க.

பிரசன்னா said...

@Vels,
நன்றி! ஆமா ஆமா ஆமா நீங்கள் சொல்வது எனக்கும் நடந்துருக்கு :)

@அக்பர்,
நன்றி :)