Oct 18, 2010

Le Grand Voyage (2004) - மகத்தான பயணம்

பயணங்களின் கதை சொல்லும் படங்கள் எப்போதுமே எனக்கு மிக பிடித்தவை..  அதிகம் பயணப்படாதவன் என்பதாலா என்று தெரியவில்லை (அது 'ண', ண் அல்ல) .. அந்த வகையில் எழுத்தாளர் எஸ்.ராவின் வலைத்தளத்தில் தெரிந்துகொண்டு பார்த்த இப்படமும், இதுவரை பார்த்ததிலேயே சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது..


ஒரு சிறப்பான படம் எப்போதும் பல தளங்களில் இயங்கும். அதை நிரூபிக்கும் வகையில் இதுவும் தந்தை-மகன் உறவு, பயணத்தின் மகத்துவம், வாழ்க்கையின் அர்த்தம் என்று பல விஷயங்களை போகிற போக்கில் சொல்கிறது.

அவ்வளவாக புரிதல் இல்லாத தந்தையும் (வற்புறுத்தல் பேரில்) மகனும் தரை மார்க்கமாக பிரான்சில் இருந்து மெக்காவிற்கு புனிதப்பயணம் கிளம்புகிறார்கள், ஒரு பழைய காரில்.. அவர்களின் இலக்கை அடைகிறார்களா? அதைவிட, இலக்கை எப்படி அடைகிறார்கள்? இதுதான் படம்.





படம் முழுக்கவே, பார்வையாளன் அந்த மகனின் பார்வையில் பயணிக்கிறான் (வயது காரணமாக எனக்கு அப்படி தெரிந்திருக்கலாம்). ஆரம்பத்தில் அந்த அப்பாவை நாமும் வெறுக்கிறோம். அவரின் நடவடிக்கைகள் விசித்திரமாக, எரிச்சலை தூண்டுவதாக உள்ளது. ஆனால் போகப்போக அந்த அமைதியின், அனுபவத்தின் பெருமையை உணர்கிறோம். அவரும் அப்படியே (கடைசியில் மகனின் காதலை புரிந்து கொள்கிறார்).



மெல்லிய நகைச்சுவை படம் முழுக்க, இரண்டாம் தடவை பார்த்த போதும் அலுக்கவில்லை. உதாரணம் அந்த வயதான (மர்மமான) பெண்மணியை விட்டுவிட்டு வரும் காட்சியில் மகனின் பரபரப்பு. சொல்லத்தகுந்த சம்பவங்கள்/காட்சிகள் படத்தில் நிறைய. பணத்தை தொலைத்துவிட்டு தந்தை தானம் 
செய்யும் போது வரும் சண்டை, மகன் ஆட்டை தவற விடும் காட்சி, கூட்டத்தில் தந்தையை தேடும் மகன் (நமக்கே மூச்சு முட்டும்), பிணவறை காட்சி.. இப்படி பல..

பயணங்களின் மகத்துவம் பற்றி மிக அழகாக ஒரு காட்சியில் விளக்குகிறார் தந்தை. கடல் நீர் நெடும் பயணத்தின் பின் மேகமாக ஆகி, சுத்தமான மழை நீராக மாற்றம் பெறுவதை போல், பயணமே மனிதனை முழுமை ஆக்குகிறது. புனிதப்பயனங்களின் நோக்கம் இலக்கு மட்டுமல்ல, அதனை அடையும் வழியும்தான். இதையே வாழ்க்கை பயணத்திற்குமான அர்த்தமாகவும் கொள்ளலாம். இலக்குடன், அதை நாம் எப்படி அடைகிறோம் என்பதில் இருக்கிறது அந்த பயணத்திற்கான மரியாதை.


எனக்கு இப்படம் பிடித்ததற்கு முதன்மையான காரணம், இப்படி ஒரு சிறப்பான அனுபவத்தை, அறை நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் நமக்கு தந்து விடுவதுதான். அவர்கள் வெயிலில் போகும் போது நமக்கு வேர்க்கிறது, பனியில் மாட்டிக்கொள்ளும்போது நமக்கு குளிர்கிறது.. அனைத்திலும் மேலாக, அவர்கள் மூவாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து கற்றுக்கொண்டதை, நாம் நூறு நிமிடங்களில் கற்றுக்கொள்கிறோம்.


மகன் எப்படி அந்த பயணத்திற்கு பிறகு ஒரு மனிதனாக முழுமை பெறுகிறானோ, நாமும் (கொஞ்ச காலத்திற்காவது) மனிதாபிமானியாக நடந்து கொள்ள ஆசைப்படுகிறோம். ஒரு திரைப்படத்திற்கு இதைவிட வேறு வெற்றி என்ன தேவை?




Le Grand Voyage - இது வாழ்க்கை பயணம்

16 comments:

Prasanna said...

வேலை பளு (!) காரணமாக நண்பர்கள் பதிவுகளை படிக்க முடியவில்லை.. அதற்கெல்லாம் கோபித்துக்கொள்ளாமல் படிக்கவும் :)

Anonymous said...

வாங்க பிரசன்னா..
விமர்சனம் நல்லா இருக்கு.. பார்க்கனும்கிற ஆர்வத்த தூண்டி இருக்கீங்க :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாங்க நண்பரே.. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர்கள்...

நல்ல விமர்சனம்..

Philosophy Prabhakaran said...

As வெறும்பய said ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க... எப்படி இருக்கீங்க... மீள் பதிவு எதுவும் போடாம நீங்க மீண்டு(ம்) வந்ததைப் பற்றி ஒரு பதிவு போடுங்க....

geethappriyan said...

நல்ல விமர்சனம் நண்பா
பார்த்துவிடுகிறேன்

Chitra said...

Good review....

ILLUMINATI said...

//ஒரு சிறப்பான படம் எப்போதும் பல தளங்களில் இயங்கும். அதை நிரூபிக்கும் வகையில் இதுவும் தந்தை-மகன் உறவு, பயணத்தின் மகத்துவம், வாழ்க்கையின் அர்த்தம் என்று பல விஷயங்களை போகிற போக்கில் சொல்கிறது.//

Good review buddy.Welcome back...

asker said...

நான் சென்னையில் உலக சினிமா dvd கடை வைத்துள்ளேன்.
என்னிடம் உள்ள திரைப்படங்களின் தொகுப்பு . dvdworld65.blogspot.com

Anisha Yunus said...

கண்டிப்பா ஒரு தடவை பார்த்துட்டு சொல்றேன் :)

எஸ்.கே said...

நல்ல அறிமுகம்,
சிறப்பான விமர்சனம்.
நல்ல நடை.
வாழ்த்துக்கள்!

ஜெயந்தி said...

இவ்வளவு நாள் எங்க போயிருந்தீங்க. நாங்க உங்க ப்ளாக்க விக்கலாம்னு பார்த்தோம்.

சௌந்தர் said...

நல்ல விமர்சனம் படம் பார்கிறேன் நீண்டநாட்களாய் எங்க ஆளை காணோம்

மாதேவி said...

பட அறிமுகத்திற்கு நன்றி.

மகேஷ் : ரசிகன் said...

U r Back ?

OMK!!!!!!!!!

http://rkguru.blogspot.com/ said...

சிறப்பான விமர்சனம்....வாழ்த்துக்கள்!

தக்குடு said...

படம் பார்த்த மாதிரியே இருக்கு பிரசன்னா!! அருமை!!