ஒழுங்கு, ஒழுங்கு. இது தான் தேசிய மாணவர் படை என்னும் என்சிசி (NCC). எல்லா பயல்களையும் போலவே எனக்கும் சிறுவயது முதலே ராணுவம், துப்பாக்கி, camouflage உடை, பச்சை ஜீப், தொப்பி (இது முக்கியம்) இதுங்க மீது ஒரு ஈர்ப்பு. முதல் நாளே கல்லூரியில் பெயர் கொடுத்து ஆர்வத்துடன் சேர்ந்தாயிற்று ('நேர்முகத்தில் இதுக்கெல்லாம் வெயிட் அதிகம்').
கல்லூரியின் அந்த முதல் வார சனிக்கிழமை 'துள்ளுவதோ இளமை' புகழ் செல்வராகவன் எடுத்த காதல் கொண்டேன் படத்திற்கு போயிருக்கலாம். போகவில்லை. திடும் திடும் என்று எல்லா விடுதி அறைகளில் இருந்தும்...
Nov 29, 2010
Nov 26, 2010
நந்தலாலா - நாவலான கவிதை புத்தகம்

ரொம்ப நாள் கழித்து முதல் நாளே ஒரு திரைப்படத்தை பார்த்தேன். முதல் முறை சுடச்சுட படப்பார்வையும் (இதை விமர்சனம்னு சொல்ல முடியுமா தெரியலை). மிஷ்கின் என்ற பெயர் மீது இருக்கும் ஒரு ஈர்ப்பே காரணம்.
15-20 சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுதியினை படித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது இப்படம் (கவிதையை ரசிப்பவர்களுக்கு கவிதைத்தொகுதி). சிறுவயதில் தொலைத்த தன் தாயை தேடிப்போதல் என்ற ஒற்றை இலக்கில், இச்சிறுகதை தொகுதி...
Nov 25, 2010
பட்டாம்பூச்சி அதிர்வு
ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார் இன்று மதியம்.
நேற்று, தனது வீட்டில் வந்து ஒன்றுக்கு இருந்த ஒரு கொழுத்த நாயை ஒரு கொழுத்த கனவான் கொழுத்த கல்லால் அடிக்க, அது வலி மிகுந்து கத்திக்கொண்டு அதன் முதலாளி சிறுவனிடம் ஓட, அவன் 'அப்சட்' ஆகி வீட்டு (விலை உயர்ந்த) பொருள் ஒன்றை உடைத்தான்.
பதிலுக்கு 'அப்சட்' ஆன சிறுவனின் அம்மா, கரண்டி வளையும் அளவுக்கு அவனை அடித்து விட்டு, அவன் சேட்டையை அடக்க வழி தெரியாமல் உட்கார்ந்து அழுதாள். அந்த நேரம் பார்த்து, வெளியில் போயிட்டு வந்த அவள் கணவன் வழக்கம் போல 'என்னடி இன்னும்...
Nov 20, 2010
ட்விட்டர் மொழிகள்-2
எனக்கு மதிய நேரத்தில் உறங்கவே பிடிக்காது.. அதனால், இரவு தூங்கி மதியத்திற்கு முன்னமே எழுந்து விடுவேன்..
############
எனக்கு தெரிந்து காதலர்களுக்கு தான் முதலில் திருமணம் நடக்கிறது.. வேறு யாருடனோ..
...
Nov 12, 2010
காட்சி மாறுதல் (திடுக்)
நிலவற்ற தனி இரவில்,
நெடுந்தெருவில்
தயங்கி நடக்க
திடீரென்று எங்கிருந்தோ தோன்றி,
பயங்கர சத்தத்துடன்,
எதையோ
விளையாடும் குழந்தைகள்..
*******************
அரட்டை
சிரிப்பு
குழந்தை அழுகை
கும்மாளம்
நிசப்தம்-அலறல்
விபத்து
(விபத்தை போன்ற திடுக் காட்சி மாற்றம் மனிதனுக்கு வேறு இல்லை)
*******************
நூறு
ஆயிரம்
லட்சம்
வைரஸ்
*******************
நொடி தாமதித்தாலும்
சளார் சளார் ஹாரன்கள்
வசைகள்
இன்று அதே தெருவில்
கிரிக்கெட்
பந்த்
*******************
வியர்வை
கொடுத்த
சாவுக் க...
Nov 1, 2010
The Way Home 2002 - வீடு திரும்பல்
ஒரு சூரிய சாப்பாட்டு வேளையில், வழியில் உட்கார்ந்து ஒரு பாட்டி கையேந்திக்கொண்டு இருந்தார். ரொம்ப வருந்தாமல், கண்களாலேயே.. சுலபமாக அவரை பார்க்காமல் கடந்து விட முடியும். ஆனால் நான் பார்த்துவிட்டேன்., பணம் கொடுப்போமா என்றும் எவ்வளவு கொடுக்கலாம் என்றும் யோசித்து முடிக்குமுன் அந்த இடத்தை கடந்தாயிற்று. சரி வரும் போது தரலாம் என்று முடிவு செய்து, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, திரும்பும்போது ஞாபகமாக அவரை தேடிக்கொண்டுதான் வந்தேன். அவர் அங்கே இல்லை. சரி, எனக்கு சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கும், இந்த படத்துக்கும்...
Subscribe to:
Posts (Atom)