(சில spoilers உண்டு. படம் பார்த்தவர்களும், படம் பார்க்குமுன்னமே முழுக்கதையையும் தெரிந்து கொண்டு போகும் வினோத ஐந்துக்களும் மட்டும் மேலே தொடரவும்)
சமீபத்திய படங்களில் இந்தளவிற்கு குதூகளித்தது ஜிகர்தண்டா பார்த்துதான். It is a treat for movie buffs. நலன் குமாரசாமியை அறிமுகக் காட்சியில் வைத்தது, கார்த்திக் என்கிற கதாநாயகன் பெயர் போன்றவை மூலம் ஆரம்பத்திலேயே படத்தை வெகு நெருக்கமாக்கி (personalize) விடுகிறார் இயக்குனர்.
இந்தப் படத்தை கேங்ஸ்டர் படம், சினிமா படம் என்றெல்லாம் வகைப்படுத்தினாலும், இப்படி...