Jul 4, 2016

Master of None

ஒரு முன்னணி ஆங்கில சிட்காம் தொடரில் டிஎம்எஸ் பாடுகிறார் "பொன் அந்தி மாலைப்பொழுது...". காரணம் தமிழரான அஜிஸ் அன்சாரி (சரி.. தமிழ் வம்சாவளி). நம்மவர் எடுக்கும் தொடர் என்பதாலேயே ஒரே நேரத்தில் நல்லாயிருக்கணும் - நல்லாயிருக்காதோ என்று புத்தி அலைக்கழித்தாலும் தற்சமயம் வெளிவந்து கொண்டிருக்கும் எந்த சிட் காமை விடவும் மேலான தரத்துடன் அருமையான அனுபவத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட 'Louie' தொடரை ஒட்டிய ஸ்டைல், ஆனால் அதைவிட இலகு.


தொடரும் கிட்டத்தட்ட அஜீஸின் சொந்த வாழ்வை ஒட்டியதே (இதுவும் லூயியை போல்.. லூயி இப்போது Horace & Pete என்று வேறு தளத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார். அதைப்பற்றி பிறகு.. பிகு:நான் ஒரு லூயி சி.கே. வெறியன்). தொடரிலும் நிஜத்திலும் அஜீஸின் தந்தை அமெரிக்காவில் செட்டிலான தமிழ் டாக்டர். அஜிஸ் பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்குதான் என்பதால் முழு அமெரிக்கர். அவர் சந்திக்கும் வேலை/முடிவுகள்/அன்றாட/தத்துவ/கனவு/உறவுச் சிக்கல்களின் தொகுப்பே இத்தொடர்.. அவரே உருவாக்கியது. நம்மவர் என்பதால் (முடிவெடுக்க திணறும் மத்திம வயது என்பதாலும்) உடனே அவரோடு சேர்ந்து கொள்ள முடிகிறது.. நகைச்சுவைத் தொடர் ரசிகர்களுக்கு நிச்சயம் பரிந்துரைக்கிறேன்..


No comments: