Dec 29, 2009

புது வருடத்தை தொடங்கி வைப்பது யார்?

புத்தாண்டு வந்தால் இந்த 'சம்பவம்'ம் வரும், நினைவுக்கு.. நடந்தது சின்ன வயதில். புதுவருட, தினசரி காலண்டர் ஒன்று கொண்டு வந்தார் அப்பா. சின்ன ஊர் என்பதால் நிறைய எல்லாம் கிடைக்காது. ஒன்று இரண்டு தான். பர்சேசிங் என்ற சர்தார்ஜி அப்போ ரொம்ப இல்லை. அந்த வருடம் வறண்டதால் ஒரு காலண்டர் தான் (மொக்க படம் ஒன்றை போட்டு இருந்தார்கள்). 31 ஆம் தேதி திடீர் என்று சண்டை எனக்கும் என் அக்காவுக்கும். யார் முதலில் தேதி கிழித்து அந்த வருடத்தை தொடங்கி வைப்பதென்று.. வாய்ச்சண்டை முற்றி கைகலப்பாகி, ரத்த...
முழுதும் படிக்க..

Dec 22, 2009

பிடித்த படம் - அன்பே சிவம்

ஒரு பழைய புகைப்பட ஆல்பத்தை திரும்(ப்)பி பார்க்கும்போது கிடைக்கும் உற்சாகம் அலாதியானது. பல தடவை பார்த்திருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு சந்தோஷம். அதிலும் கும்பலாக பார்க்கும் போது? சிரித்து, கிண்டலடித்து, மாற்றங்களை விமர்சித்து என போகும் நேரம்.. போன தடவை பார்க்கும் போது நம் கண்களில் சிக்காத ஒன்று இந்த தடவை சிக்கும் (சிடு மூஞ்சி குமாரு இதுல எப்படி இளிச்சிட்டு இருக்கார்!..)....
முழுதும் படிக்க..

Dec 13, 2009

85-65-75 : கதை... ஆனால் கதை இல்லை!

முதல் முறையாக எனது படைப்பு (கதை) யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. அதுவும் யூத்ஃபுல் விகடனின் டிசம்பர் மின்னிதழில்... பார்க்க இங்கு கிளிக் பண்ணவும் யூத்ஃபுல் விகடன் டிசம்பர் மின்னிதழ் கட்டடங்கள் மட்டும் பெரிது பெரிதாக இருக்கும் கல்லூரிகள் ஒரு வித மிரட்சியை உண்டு பண்ணும். ஆனால் இந்த அமைதியான, மரங்களடர்ந்த கல்லூரி அப்படி இல்லை. நம் சொந்த வீடு, ஊர் போல் ஒரு உணர்வை கொடுக்கிறது. ஓஹோ என்று இல்லாவிட்டாலும்,...
முழுதும் படிக்க..

Nov 29, 2009

பிடித்தவர், பிடிக்காதவர் - தொடர் பதிவு

மணிகண்டன் அவர்கள், 'புதிதாக தமிழ்ப்பதிவு எழுத நினைக்கும் மூன்று வாசகர்களை' இந்த தொடர் பதிவு போட அழைத்திருந்தார்.. நாமளும் புதுசு தானா.. அதனால இதையே எனக்கான அழைப்பாக ஏற்று (இதுக்கெல்லாம் கூச்சமே பட்றது கிடையாது), இதோ.. கொஞ்சம் வித்தியாசமாக.. மணிகண்டன் அவர்களுக்கு முதலில் நன்றி... இந்தப் பதிவோட விதிகள்: 1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். 2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் 3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய்...
முழுதும் படிக்க..

Nov 28, 2009

ஒரே வார்த்தையில் தமிழ் இயக்குனர்கள்..

இந்த இயக்குனர்களின் படங்களை ஒரே வார்த்தையில் ரசிகர்கள் விவரித்தால்..? மணிரத்னம்: இருட்டு ஜெயம் ராஜா: ரிப்பீட்டு சேரன்: பாசம் பி. வாசு: மோசம் அகத்தியன்: காதல் ஹரி: மோதல் பாலா: பிணம் ஷங்கர்: பணம் செல்வராகவன்: சாதனை தரணி: ரோதனை கமல்: புரியல பேரரசு: முடியல அமீர்: பக்கா டி.ஆர். : நக்கா.. டண்டணக்க...
முழுதும் படிக்க..

Nov 15, 2009

ஹைக்கூ கதைகள்..!

1. ஆதி மனிதன் அந்த கூட்டத்தில் அதிகாரம் உள்ளவர்களும் சோம்பேறிகளுமான அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். சாதிகள் பிறந்தது! 2. விடுதலை பருப்பு டப்பாவில் குழந்தையின் வைத்தியத்திற்கென, செல்லம்மா சம்பாதித்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு போய்.. குடித்து விட்டு.. ரோட்டை கடக்கையில்.. அடிப்பட்டு செத்துப்போனான் சின்னப்பா.. 3. அரசியல்வாதி 'கோடா'னு கோடி ரூபாய வச்சிக்கிட்டு என்ன பண்ணுவீங்க? என்றார் அவர். 'எனக்கு முன்னாடி இருந்தவங்க என்ன பண்ணாங்களோ அதயே தான்' என்று மடக்கினார் இவர். 4. நிலா 'காசு எங்க...
முழுதும் படிக்க..

Nov 10, 2009

அரண்டவன் அந்தாதி

அன்புள்ள அனானி அவசரப்பட்டு அனுப்பி விடாதே ஆட்டோ ஆட்டோ அனுப்பும் அளவுக்கு அடியேன் ஆள் அல்ல.. அசட்டு அட்டிவன்! அட்டானவன் ஆனாலும் அன்பானவன் அடக்கமானவன் அடக்க ஆளில்லாமல் அஃதொருமுறை ஆணவத்தில் ஆடினேன் ஆடிக்காற்று ஆலையே அழிக்கலாம்.. ஆனால் அபலைபால் அர்ச்சுனன் அம்பெய்தலாமோ? அம்போவென அடிப்பட்டு அழ ஆவல் அற்றவன் அத்தகையவனிடம் அக்கறையோடு அருள் அளிக்கலாமே..? அளித்து அழிக்கும் ஆண்டவனே.. அணுவே.. ஆழியே.. ஆகவே, ஆட்டோ அனுப்பி விடாதே அவசரப்பட்டு அன்புள்ள அனானி பின் குறிப்பு: அ, ஆ - விலேயே, அந்தாதி...
முழுதும் படிக்க..

Nov 3, 2009

அந்த 15 ரொபாட்கள்..!

மிகவும் ரகசியமான அந்த ப்ராஜக்ட் வெர்ல்ட் ரூலைப்பற்றி (World Rule) தெரிந்தவர்கள் மொத்தம் 8 பேர் தான். US ப்ரசிடன்டிற்கு கூடத்தெரியாது. இந்த ப்ரொக்ராமின் ப்ரம்மாக்களான மார்க் மற்றும் டாம் அன்று இறுதி கட்ட செக்கப்கள் முற்றிலும் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். படபடப்புடந்தான். "இது எந்த அளவு வெற்றி பெரும் என்று நினைக்கிறாய் டாம்?", என்றார் மார்க். "முழு வெற்றி தான். கூடிய சீக்கிரம் இந்த உலகமே...
முழுதும் படிக்க..

Oct 29, 2009

நாயோ போபியா - பாகம் 2

எப்படி 'நாயோ போபியா பாகம் 2' படிக்க பாகம் 1 அவசியம் கிடையாதோ, அது போல மனுஷங்களுக்கும் நாய் தேவை கிடையாது. அப்படிங்கறது என் வாதம். கேக்க மாட்டீங்களே? ஒ.கே, அதுங்க அட்டூழியத்த பாருங்க.. என் சிநேகிதன் வீட்டில் மிகவும் பிடித்து ஒரு நாய் வளர்த்தாங்க, சின்ன வயசில் இருந்தே (அதாவது நாயோட சின்ன வயசு).. அவனுக்கு ஒரே ஒரு குறை, அந்த நாயின் குரை (ரைமிங்கை கவனிக்க). அதாவது...
முழுதும் படிக்க..

Oct 23, 2009

ஃப்ரண்ட்ஸ் தொடர் (Friends Series) - ஒரு அறிமுகம்

ஃப்ரண்ட்ஸ் என்னும் உலக அளவில் மிக பிரபலமான இத் தொடர் NBC சேனலில் 1994-2004 ஆம் வருடம் வரை ஒலி பரப்பு ஆகிய sitcom வகை சிரிப்புத் தொடர் (அடங்கப்பா, எவ்ளோ பெரிய வரி). sitcom என்றால், நடிகர்கள் நடிக்கும் போதே அதை ரசிகர்கள் எதிரில் அமர்ந்து ரசிப்பார்கள். அவர்களின் ரியாக்ஷங்களும் அப்பொழுதே பதிவு செய்ய படும் (Eg. பால சந்தரின் TV சிரிப்பு சீரியல்கள், லொல்லு சபா போன்றவை- இவைகளில் சிரிப்பு சத்தம் ரெக்கார்ட்...
முழுதும் படிக்க..

Oct 20, 2009

பேரரசுகள்

பேரரசு இருக்காரே, அவர பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருக்கலாம். அவரு விஜய் மாதிரி யான ஆட்களுக்கு ஒரு மணி ரத்னம். பரத் மாதிரி ஆட்களுக்கு சத்யஜித் ரே. இப்படி ஒரு சிறந்த இயக்குனர் பத்தி எழுதலனா எபடிங் நா. இவரு எப்டி என்றால், இவரின் காவியங்களில் எல்லாம் சமுதாயத்துக்கு பல நல்ல கருத்துக்கள எடுத்து கூறுவார். உதாரணத்துக்கு கதாநாயகி கொஞ்சமா டிரஸ் போட்டுட்டு வர கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவார். அடுத்த கனவு...
முழுதும் படிக்க..

சாப்ட்வேர் - 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'

அட எவ்வளவு பயமாக இருக்கிறது கொஞ்ச நாட்களாக? ஏன் என்றா கேட்கிறீர்? ஒருவித நிச்சயமற்ற தன்மை தருகிற பீதிதான். பின்னே? என் நண்பர்கள் ஒருவார் பின் ஒருவராக வெளியில் துரத்தப்படுவதை பார்த்தால், அடி வயிறு கனமாகி லப்டப் அதிகம் ஆகுமா ஆகாதா? இதை பார்த்து அவன் குஷியடையத்தான் செய்வான். யாரா? நாங்கள் உட்கார்ந்த இடத்தில் சாப்பிடுவதை பார்த்து எரிச்சல்படுகிறானே, அவன்தான். ஒரு பருக்கை உண்ண அவன் காடு மேடு எல்லாம்...
முழுதும் படிக்க..

Oct 19, 2009

நாயோ போபியா - பாகம் 1

நாய எவன் கண்டு புடிச்சான்? அது சரி எல்லா ஜீவா ராசி போல் அதுவும் ஒன்னு. எனக்கு அது மேல் இருக்கும் பயம் போல வேற யாருக்குமே இல்லையா னுட்டு சில சமயம் எரிச்சலா இருக்கும். எனக்கும் நாய்க்கும் ஆன இந்த பகை இன்னிக்கி நேத்திக்கி இல்ல. ரைட் பரம் மை சைல்ட் வூட். எத்தனை கிலோ மீட்டர் ஓடி இருப்பேன் இது வரைக்கும்? ஆனால் பெருசா கடி வாங்கினது கெடயாது. ஏனோ ஒரு எரிச்சல். கடுப்பு. பயம். ஏழு கழுத வயசு ஆய்டுச்சு. நாய் பயம்...
முழுதும் படிக்க..

முதல் ப்ளாக்

முதல் ப்ளாக் தமிழில் இருந்தால் நலம் என்று எண்ணினேன். இதற்கு முக்கிய காரணம் நான் படித்து வியந்த தமிழ் ப்ளாகுகள். தமிழிற்கு என்று ஒரு நடை அழகு உண்டு. ப்ளாகில் இங்கிலீஷ் டு தமிழ் வசதி இருப்பது பெரும் நன்மை. டவலப்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த ப்ளாகிற்கு பிறகு தமிழிலேயே முழுமையாக எழுதினால் என்ன என்று தோன்றுகிற...
முழுதும் படிக்க..