May 22, 2010

பாசக்கார பதிவர்களுக்கு பாராட்டு விழா..

மின்மினி.com என்ற வலைத்தள திரட்டி இருப்பதை கேள்வி பட்டு இருப்பீர்கள். இதைப்பற்றி சுருக்கமாக இங்கே படிக்கலாம். இதில் என்ன விஷயம் என்றால், முதல் 101 பதிவர்களை இலவசமாக இணைக்கிறார்கள். அதில் சில பிரபல பதிவர்களை அவர்களே தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் அண்ணன் (நாந்தான்) இரண்டாம் வரிசையில் முதலில் இடம் பெற்றுள்ளேன்..

இதை பற்றி ஒரு துணுக்கு இந்த பதிவின் கடைசியில்...

                                                                ****************

முதல்முறையாக நமக்கு (வைர) விருது அளித்து அண்ணன் சைவகொத்துப்பரோட்டா பெருமை படுத்தி உள்ளார். அதுவும் சிறப்பாக எழுதுபவர்கள் என்று நம்மால் கருதப்படுவர்களுக்கு கொடுக்கலாம்.. அப்புறம் எப்படி எனக்கு கிடைத்தது என்று யோசித்து கொண்டு இருக்காமல், இதோ அந்த விருதை இவர்களுக்கு அளிப்பதில் நான் மேலும் பெருமைப்பட்டு கொள்கிறேன் -

ஜெய்
Illuminati
ஜெயந்தி
மகேஷ் : ரசிகன்
தக்குடுபாண்டி
பட்டாபட்டி
ருத்ர வீணை
prabhakaran


                                                                ****************

என்னது, இவன் பிரபல பதிவரா, இவனை எதற்கு 'மின்மினியில்' போட்டார்கள், ஏன், எப்படி என்று எல்லாம் பொங்க கூடாது.. நானே மெயில் அனுப்பி 'யப்பா என்னையும் சேர்த்துகோங்க' என்று கேட்டவுடன் இணைத்து விட்டார்கள் (ஹீ ஹீ). 101 பேருக்கு தான் இலவசம் என்பதால், முந்திக்கொள்ளுங்கள்..

19 comments:

பிரசன்னா said...

அடடா.. தமிலிஷ்கு என்ன ஆச்சு.. இணைக்க முடியவில்லை..

அக்பர் said...

வாழ்த்துகள் பிரசன்னா. பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்!! விருது வெற்றவர்களுக்கும்..

ஜில்தண்ணி said...

கொடுத்த தங்களுக்கும் பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

philosophy prabhakaran said...

அட... உண்மைல எனக்குத்தாங்க விருது கொடுத்து இருக்கீங்க... பதிவுலகத்துக்கு வந்து விருது என்று வாங்குவது இதுதான் முதல் முறை... எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை... அதே சமயத்தில் நான் இந்த விருதை யாருக்கு கொடுப்பது... (எல்லோருக்கும் நீங்களே கொடுத்துவிட்டால்...) சில நாட்கள் நேரம் எடுத்து கொள்கிறேன், பெற்ற விருதை பகிர்ந்துக்கொள்வதற்கு...

ILLUMINATI said...

பாஸ்,விருதுக்கு வாழ்த்துக்கள்.அப்புறம்,அன்னிக்கு ஜெய்லானி கிட்ட சொன்னத தான் உங்ககிட்டையும் சொல்றேன்.

"நீங்க ரொம்ப நல்லவருங்க.இன்னமுமா என்ன நம்புறீங்க?" :)

மகேஷ் : ரசிகன் said...

வாழ்த்துக்கள் பிரசன்னா!

அட... எனக்குமா?

பாசக்கார பயபுள்ள... நன்றி தம்பி!

ஹேமா said...

வாழ்த்துகள் பிரசன்னா. பெற்றவர்களுக்கும் தங்களுக்கும்.

ஜெயந்தி said...

எனக்கு முதல் விருது கொடுத்தமைக்கு நன்றி! உங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

Chitra said...

Congratulations! Thats super!

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

பிரசன்னா said...

@அக்பர், மிக்க நன்றி!

@ஜெய்லானி,மிக்க நன்றி!

@ஜில்தண்ணி,மிக்க நன்றி!

@philosophy prabhakaran,
மிக்க நன்றி! அப்புறம், விருது கொடுக்க ஏராளமான பேர் இருக்காங்க.. கஷ்டப்பட்டு எல்லாம் தேடவே வேண்டாம் :)

@ ILLUMINATI,
உங்கள் பலம் உங்களுக்கு தெரியல :)மிக்க நன்றி!

பிரசன்னா said...

@மகேஷ் : ரசிகன்,
உங்களுக்குத்தான் முதல்ல :)

@ஹேமா,மிக்க நன்றி!

@ ஜெயந்தி,மிக்க நன்றி!

@ Chitra,Thanks a lot :)

@ஜெய்லானி,
அட இன்னொன்னா.. ஒரே இன்ப அதிர்ச்சியா இருக்கே.. இதோ உடனே வரேன்.. மிக்க நன்றி ஜெய்லானின்னே

தக்குடுபாண்டி said...

பாஸ் நான் ஒரு டம்மி பீஸு எனக்கு போய் விருது எல்லாம் கொடுத்து கெளரவிக்கர்து, வசூல்ராஜால கமலோட கட்டிபுடி வைத்யம்தான் நினைவுக்கு வருது! நன்னிஹை!!...:)

நறுமுகை said...

நாங்களும் சேர்ந்துக்கலாமா?

அன்புடன்,
www.narumugai.com
கருத்துக்களை பகிர, செய்திகளை படிக்க நமக்கான ஓரிடம் - நறுமுகை.காம்

ஜெய் said...

என்னையும் மதிச்சு வ்ருதெல்லாம் கொடுக்கறீங்க.. ரொம்ப நன்றிங்க பிரசன்னா.. :)

அப்பாவி தங்கமணி said...

வாழ்த்துக்கள் பிரசன்னா... என்ன இப்படி கேட்டுபுட்டீக? பெரிய பதிவரானு...அதே தான் (என்ன சொல்லி குடுத்த மாதிரியே கரெக்ட்ஆ சொல்லிட்டேனா)

பிரசன்னா said...

@ தக்குடுபாண்டி,
அடிக்கடி பேசுற தமிழ் வார்த்த.. இப்போ சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேன்குது...

ஆ.. வெல்கம் ;)

(இருந்தாலும் டம்மி பீஸுனு சொல்றதுலாம் ஓவர் :) )


@ நறுமுகை,
ஆ நிச்சயமா :) வருகைக்கு மிக்க நன்றி!


@ஜெய்,
அவங்கவங்க பெருமை அவங்கவங்களுக்கு தெரிய மாட்டேன்குது :) மிக்க நன்றி!


@அப்பாவி தங்கமணி,
அதுலயும் அந்த தவில்காரன் காதுல விழற மாதிரி சத்தமா சொல்லுங்க.. ஹி ஹி..

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com