Jun 29, 2010

Rope (ரோப்) - சிறந்த படம்

ஒரு கொலையை எந்தவித உள்நோக்கமும் (Motive) இல்லாமல், 'கொலை செய்ய வேண்டும்' என்ற ஒரு காரணத்திற்காகவே செய்ய முடியுமா?
ஒரு உயிரை பறிப்பதில்.., உயிரை உருவாக்குவதில் உள்ளதை போலவே அல்லது அதைவிட அதிகமாக அளவுக்கடங்கா கிளர்ச்சி/திருப்தி இருக்குமா?
கொலையை திறம்பட திட்டம் போட்டு செய்தவனுக்கு, அதை யாராவது 'கண்டு பிடித்துத்தான் பார்க்கட்டுமே' என்ற ஒரு ஆசை ஆழ்மனதில் இருக்குமா?


இப்படி தினுசான கேள்விகளையும் இன்னும் சில விஷயங்களையும் ஒரு வீடு, எட்டு பேர் மற்றும் ஒரு பெட்டி - இவற்றைக்கொண்டு அலசுகிறது 1948-இல் வெளிவந்த Rope படம். மொத்தமே ஒன்னேகால் மணி நேரம் தான் படம். ஆரம்பமே கொலைதான். அப்புறம் அதில் என்ன த்ரில்? படம் முழுக்க கொலையாளியின் மன நிலையில் நம்மையும் அந்த பதைப்பை அனுபவிக்க வைப்பதுதான் படத்தின் சிறப்பம்சம் (Mrs. Wilson அந்த பெட்டியை திறக்கப்போகும்போது நமக்கு வருமே ஒரு படப்பிடிப்பு ச்ச படபடப்பு..).


கதைச்சுறுக்கும் வேணுமா? கதையே சுருக்கம் தான் - ரெண்டு பேர் ஒருத்தனை திட்டம் போட்டு கொலை செய்து ஒரு பெட்டியில் போட்டு விடுகிறார்கள். எதற்கு? சும்மாதான்.. பண்ணிவிட்டு, கொல்லப்பட்டவனுக்கு சம்பந்தப்பட்ட ஆட்களை அழைத்து அந்த பெட்டி மீதே உணவுகளை அடுக்கி பார்ட்டி வைக்கிறார்கள். இவர்கள் கடைசியில் மாட்டுகிறார்களா? என்பதுதான் படம் (படம் இதை விட நறுக்குனு இருக்கும்).

கொலையாளி நம் 1 ப்ராண்டன் (ஸ்டூடன்ட் நம்பர் 1 மாதிரி சொல்ற?) படம் முழுக்க கொலைக்கான காரணம் என்று சொல்வது, நீட்ஷேவின் 'சூப்பர்மேன்' தத்துவம். அதாவது, மனித இனத்திலேயே 'மேலானவர்கள்' என்று உள்ளவர்களுக்கு சரி, தவறு என்ற வரையரை எல்லாம் கிடையாது.. அப்புறம், 'கீழானவர்கள்' உயிருடன் இருக்க தகுதி அற்றவர்கள் (ஹிட்லர் ஞாபகம் வரானா..?). மேலும் கொலை என்பது ஒரு கலை (ரைமிங்க் கவனிக்க), அதை சிலரால் தான் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புபவன். கொலைக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த தத்துவத்தை விளையாட்டாக இவர்களிடம் பள்ளி நாட்களில் பகிர்ந்து கொண்ட ஆசிரியர் ஒரு காரணம் ஆகிறார். அவரும் பார்ட்டிக்கு அழைக்கப்படுகிறார் (படிக்க.. பதிவின் மூன்றாவது வரி).

சரி.. உண்மையிலேயே, 'கொலை செய்ய வேண்டும்' என்ற ஒரு நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதா அந்த கொலை? வேறு மோட்டிவ் இல்லையா? ஒரு வெங்காயமும் கெடையாது.. கொலை செய்யப்பட்டவன் மீது இருக்கும் ஆழ்மன வெறுப்பே கொலைக்கு காரணம் என்று மறைமுகமாக சொல்கிறார் இயக்குனர் (படிக்க.. பதிவின் முதல் வரி). கொலையுண்டவனின் காதலி, ப்ராண்டனின் முன்னாள் காதலி.. அவளை வைத்து சில இடங்களில் அந்த வெறுப்பை வெளிப்படையாக காட்டுகிறான் ப்ராண்டன்.


படத்தின் சிறப்பம்சங்கள் என்ன? ஒன்றா இரண்டா? பட்டியலே இருக்கிறது.. இங்கே சிலது மட்டும்..

பெரிய பெரிய ஷாட்கள் (மொத்தமே ஆறேழு ஷாட்ஸ் தான், ஒவ்வொன்றும் இடையில் கட்டே இல்லாமல்). ஒரே வீடு (அதான் ஏற்கனவே சொல்லிட்டியே).
சீன் ஒன்றொன்றும் மிக அற்புதமாக ஷூட் செய்யப்பட்டு இருக்கும். ஒரு சிலதை சொல்ல வேண்டும் என்றால்..
-எல்லாரும் சாப்பாடு முடித்து டேவிட் எங்கே என்று பேசிக்கொண்டு இருக்கும்போது, கேமிரா அவர்களை கவனிக்காமல், டேவிட் இருக்கும் பெட்டியை போகஸ் செய்து கொண்டு இருக்கும்.. படு டென்ஷனான சீன் அது..
-தைரியம்கரது பயம் இல்லாத மாதிரி நடிப்பது - ப்ராண்டனின் விரல்கள் நடுங்கும் அந்த ஷாம்பெயின் குடிக்கும் காட்சி..
-கொலையாளி நம் 2 அவன் மன நிலையை ப்ரதிபலிப்பதை போல் மெதுவாக, வேகமாக என்று பியானோ வாசிப்பது
-படம் முழுக்க பல குறியீடுகள் (சிறந்த இயக்குனர்களுக்கே உரிய குணாதிசியம் அல்லவா இது)..கொலை செய்வதின் திருப்தியை 'அதனுடன்' (படிக்க.. பதிவின் இரண்டாம் வரி) ஒப்பிட்டு வரும் ஆரம்ப காட்சிகள்.. உதா கொலையை முடித்தவுடன் இப்படி ஒரு வசனம் 'Let's stay this way for a minute'.. அதை தொடர்ந்து ப்ராண்டன் திருப்தியுடன் பிடிக்கும் சிகரட்.

கொலையுண்டவனின் தந்தையாக வரும் செட்ரிக்கின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பிரமாதப்படுத்தி இருப்பார். ஆசிரியராக வரும் (கதாநாயகன்?) James Stewart (Its a beautiful life, The rear window) வழக்கம் போல் அட்டகாசம் + அபாரம் .

அப்புறம், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.. சரி, அந்த காலத்திலேயே இப்படி படங்களை எடுத்த ஹிட்ச்காக், இப்போது இருந்திருந்தால், இன்றைய தொழில் நுட்பத்தை வைத்து எப்படி மிரட்டி இருப்பார்? ஆனால், அவர் ஆவி இப்படி சொன்னாலும் சொல்லும் -
'போய்யா, எல்லா வேலையையும் கம்ப்யூட்டரே செஞ்சுட்டா அப்புறம் நான் எதுக்கு?'


குறிப்பு: கொஞ்ச நாட்களாக எனக்குள் தூங்கிக்கொண்டு இருந்த சினிமா மிருகம் திரும்பவும் முழித்துக்கொண்டது.. ஜெய்யின் சில பதிவுகளால்.. ஆகவே இனி அடிக்கடி சினிமா கட்டுரைகளை ரசிகர்கள் ரசித்து மகிழலாம் (ஹேய் யாரு அழுகின தக்காளி எடுக்கறது)..

22 comments:

ஜெய் said...

பாஸ்.. சூப்பரா சைக்கலாஜிகலா எழுதி இருக்கீங்க... கிளர்ச்சி, திருப்தி, ஷாம்பெய்ன், பியானோ, சிகரெட்-னு.. எனக்கு இந்த எஃபெக்ட் எல்லாம் புரியுமே தவிர இப்படி எழுத வராது.. Insomnia, Prestige, Dark Knight, Good will hunting, Taxi Driver எல்லாம் கொஞ்சம் சைக்கலாஜிகலா எழுத வேண்டிய படங்கள்... அதையும் ட்ரை பண்ணி பாருங்க...

ஜெய் said...

// மொத்தமே ஆறேழு ஷாட்ஸ் தான் //
சரியா சொல்லணும்னா, பத்து ஷாட்... அதிகபட்சமா ஒரு ஷாட் பத்து நிமிஷத்துக்குப் போகுது.. எத்தனை டேக் எடுத்தாங்களோ.. பாவம்...

ILLUMINATI said...

நல்லா எழுதி இருக்கீங்க தல.இந்த படத்தோட specialty லாங் shots மற்றும் ஒரே ரூமில் திகிலாக கதையை நகர்த்துவதுனு கேள்விப்பட்டேன். :)

நானு இன்னும் இதைப் பார்க்கலை.அப்புறம்,vertigo படம் பாருங்க.அதுவும் ஒரு psychological probing டைப் கதை தான்.

அப்புறம்,அதே மாதிரியான சில நல்ல, psychology பத்தி பேசுற படங்கள்,good will hunting(நானு ஏற்கனவே மொக்க போட்டாச்சு. :) ),12 angry men,dark knight(my favorite).

ILLUMINATI said...

//(ஹேய் யாரு அழுகின தக்காளி எடுக்கறது).. //

இல்லையே,நானு அழுகின முட்டய இல்ல எடுத்தேன்? :)

= YoYo = said...
This comment has been removed by the author.
ஜில்தண்ணி said...

பழைய பையாஸ்கோப்பெல்லாம் தேடுறீங்களா, நடக்கட்டும் நடக்கட்டும்
ஏதோ உங்க புன்னியத்துலயாவது தமிழ் படத்தவிட்டு வெளியே வருவோம்

உங்க விவரிப்பு நல்லாயிருக்கு பிரசன்னா(உன்மை தான்)

தரவிறக்க லிங்க் இல்லையா
இருந்தா யாராவது கொடுங்க

ஜெய் பயங்கரமா எழுதுராரு,அவரை இப்போதே பார்க்கிறேன்

Prasanna said...

@ஜெய்,

//இந்த எஃபெக்ட் எல்லாம் புரியுமே தவிர இப்படி எழுத வராது//
உங்க பதிவுகளை நீங்க சரியாவே படிப்பதில்லைன்னு நினைக்கிறேன் ;)

இவற்றில் Good will hunting, Taxi Driver மட்டும் பார்த்து இருக்கேன்.. நிச்சயம் எழுதறேன்..

//எத்தனை டேக் எடுத்தாங்களோ//

உண்மைதான்.. அதிலும் பத்து நிமிஷத்துக்கு மேல எடுக்க முடியாதுங்கறதால நிறுத்தி இருக்கார் மனுஷன்.. இல்லனா, முழு படமும்.. ஒரே ஷாட் தான்.. நுரை தள்ளி இருக்கும் :)

ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஜெய்.. அப்புறம் நீங்க ப்ளாக்கர் பத்தி கொடுத்த டிப்சுக்கும் ;)

Prasanna said...

@ ILLUMINATI,
Vertigoதான் அவரோட சிறந்த படம்னு எங்கயோ படிச்சேன் (அவரோட எல்லா படத்தையும் இப்படிதான் சொல்வாங்க)..

Good will hunting - எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படம்.. உன் மனதுக்கு பிடிச்சத செய்.. அடுத்தவர்களுக்கு ஏற்ற மாதிரி உன் வாழ்கை பாதையை அமைக்க தேவை இல்லை என்று சொன்ன படம். நம் நடவடிக்கையில் சிறிதேனும் மாறுதலை நிச்சயம் கொண்டு வரும்..
படத்தை எழுதியவர்கள் அந்த ரெண்டு பேரும் என்று பார்த்த போது, நம்பவே முடியவில்லை :)


//இல்லையே,நானு அழுகின முட்டய இல்ல எடுத்தேன்?//

கண்டிப்பா தெரியும்.. நான் மிச்ச பேரை சொன்னேன் ;)

Prasanna said...

@ ஜில்தண்ணி - யோகேஷ்,

I see only English moviesனு சொல்ற ஆள் இல்லைனாலும், ஆங்கிலத்தில் (பிற மொழிகளில்) பார்க்க வேண்டிய படங்கள் நிறைய இருக்கு..

//(உன்மை தான்)//
இந்த குசும்பு தான வேணாங்கறது :)

//லிங்க் இல்லையா//
லிங்கா.. அதெல்லாம் தப்பு (தனியா அனுப்பறேன் ஹீ ஹீ)


//ஜெய் பயங்கரமா எழுதுராரு,அவரை இப்போதே பார்க்கிறேன்//
நிச்சயம் பாருங்க.. பிரிச்சி மேயறார் :)

ILLUMINATI said...

//உன் மனதுக்கு பிடிச்சத செய்.. அடுத்தவர்களுக்கு ஏற்ற மாதிரி உன் வாழ்கை பாதையை அமைக்க தேவை இல்லை என்று சொன்ன படம். நம் நடவடிக்கையில் சிறிதேனும் மாறுதலை நிச்சயம் கொண்டு வரும்..//

அட,அது மட்டும் இல்லை.ஒரு மனுஷன் எப்புடி எல்லாம் ஒரு பிரச்சனைய எதிர்கொள்ளுறான்,எப்புடி எல்லாம் அதை complicate பண்ணிகிறான் னும் அலசின படம்.

மனுசனோட அற்புதமான விஷயம் மூளை தான்.புரிஞ்சுக்க முடியாத ,குழப்படி பிடிச்ச விசயமும் மூளை தான். முக்கியமா மூளை எப்படி ரியாக்ட் பண்ணும் னு சொல்லவே முடியாது.

அதை பத்தி அலசுன படம் தான் இது.

//படத்தை எழுதியவர்கள் அந்த ரெண்டு பேரும் என்று பார்த்த போது, நம்பவே முடியவில்லை :) //

படம் உருவான கதைய பத்தி படிச்சுப் பாருங்க. இன்னும் நம்பமுடியாம போகும். :)
விக்கி ல போய் பாருங்க. :)

ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.Matt Damon சாதாரண ஆசாமி இல்ல. :)

அப்புறம், vertigo பத்தி,அவரோட எல்லாப் படத்தையும் விட இது கொஞ்சம் ஸ்பெஷல். ஏன்னா,இதுல நான் சொன்ன மாதிரி psychological probing இருக்கும்.

இதுல வர்ற எல்லோருமே ஏதோ ஒரு விசயத்துக்காக ஏங்கிகிட்டே இருப்பாங்க.

ஹீரோ-ஹீரோயின நினைச்சு ஏங்குவான்.

ஹீரோவின் நண்பி- முன்ன ஒரு காலத்துல ஹீரோ propose பண்ணினப்ப reject பண்ணிட்டு,ஏண்டா அப்பிடி செய்தொம்னு ஏங்குவா.

ஹீரோயின்னோட புருசன்- ஹீரோயின் நிலமைய பார்த்து ஏங்குவான். (இது உண்மையில வேற மீனிங். :) படம் பாருங்க )

ஹீரோயின்- அதை சொன்னா படமே சொன்ன மாதிரி...

படத்த பாருங்க... :)

Chitra said...

Its a classic movie. Good review. :-)

Paleo God said...

//குறிப்பு: கொஞ்ச நாட்களாக எனக்குள் தூங்கிக்கொண்டு இருந்த சினிமா மிருகம் திரும்பவும் முழித்துக்கொண்டது.. ஜெய்யின் சில பதிவுகளால்.. //

அதானே :)) வந்து கலக்குங்க:))

Post & Comments எல்லாம் சூப்பரு!

Paleo God said...

//குறிப்பு: கொஞ்ச நாட்களாக எனக்குள் தூங்கிக்கொண்டு இருந்த சினிமா மிருகம் திரும்பவும் முழித்துக்கொண்டது.. ஜெய்யின் சில பதிவுகளால்.. //

அதானே :)) வந்து கலக்குங்க:))

Post & Comments எல்லாம் சூப்பரு!

க ரா said...

நல்ல விமர்சனங்க.

சிநேகிதன் அக்பர் said...

ஏற்கனவே படித்ததாக இருந்தாலும். உங்கள் விமர்சனமும் அருமை.

ஹேமா said...

படத்தைப் பார்க்க வைக்கும் விமர்சனம்.உங்க உள்ளுக்குள்ள மிருகம் முழிச்சிக்கிச்சு பிரசன்னா.தொடருங்க.

Prasanna said...

///மனுசனோட அற்புதமான விஷயம்
மூளை தான்//
எனக்கு மிகவும் ஈடுபாடுள்ள விஷயம் இது. நீங்கள் சொன்னதை அப்படியே way-language கிறேன் (அதாங்க வழி மொழியர்து)..

உண்மைதான், எந்த சிறந்த படங்களையும் போலவே Good Will-ம் பல சிறந்த விஷயங்களை உள்ளடக்கியது.. அதில் எனக்கு பிடித்தது மேலே நான் சொன்னது :)


//படம் உருவான கதைய பத்தி படிச்சுப் பாருங்க//
உண்மையிலேயே ஆச்சர்யம் தான் :)


//vertigo பத்தி,அவரோட எல்லாப் படத்தையும் விட இது கொஞ்சம் ஸ்பெஷல்//
ஏலே யாருடா அங்க.. போடுடா டவுன்லோட ;)

Prasanna said...

@ Chitra,
True :) Thanks madame


@ 【♫ஷங்கர்,
அண்ணே நான் தமிழன்.. சினிமா ரத்ததுலேயே ஊறி இருக்குல்லா :)) பலாவிடம் பாராட்டு பெற்றுவிட்டேன்.. மகிழ்ச்சி :) அப்புறம், புது வீட்டில் செட்டில் ஆகியாச்சா..


@இராமசாமி கண்ணண்,
முதல் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி :)

Prasanna said...

@ அக்பர்,
மகிழ்ச்சியாக இருக்கு அக்பர் அண்ணே :)


@ ஹேமா,
ஆமா, மறுபடி பைத்தியக்காரன் மாதிரி படம் பாக்க ஆரம்பிச்சிடியானு வீட்ல ஒரே திட்டு :)

அண்ணாமலை..!! said...

விமர்சனம் நல்லாவே எழுதுறீங்க பிரசன்னா!
மிக வாழ்த்துகள்!

தக்குடு said...

கலக்கல் விமர்சனம் பிரஸன்னா!

ஜூலை 2வது வார வெள்ளிக்கிழமை போஸ்ட்ல தக்குடு ஒரு மலையாள படம் பத்தி எழுதலாம்னு நினைச்சுண்டு இருக்கான், நீங்க வந்து பாக்கனும் சரியா!...;)

Prasanna said...

@ அண்ணாமலை,
ஊக்கத்திற்கு நன்றி அண்ணே :)


@ தக்குடுபாண்டி,
//நினைச்சுண்டு இருக்கான், நீங்க வந்து பாக்கனும் சரியா//

நீங்க நெனச்சிட்டு இருக்கறதை எப்படி நான் பக்க முடியும் :)
.
.
ஹீ ஹீ நீங்க போடுங்க.. சினிமானா ஓடி வந்துடுவேன்..