Nov 20, 2010

ட்விட்டர் மொழிகள்-2

எனக்கு மதிய நேரத்தில் உறங்கவே பிடிக்காது.. அதனால், இரவு தூங்கி மதியத்திற்கு முன்னமே எழுந்து விடுவேன்..

                                                                              ############
எனக்கு தெரிந்து காதலர்களுக்கு தான் முதலில் திருமணம் நடக்கிறது.. வேறு யாருடனோ..

                                                                              ############


பதிவர்கள் எல்லாரும் இந்து வெறியர்கள். எல்லார் பக்கங்களிலும் RSS-க்கு 
லிங்க் கொடுத்திருக்காங்க.

                                                                              ############
ஹார்ட் டிஸ்கு சைசும், வாங்கும் சம்பளமும், ஒண்ணு.. எவ்வளவு இருந்தாலும் பத்தாது :)
                                                                             ############
நண்பர்கள் சொல்வதுண்டு.'நல்லா சம்பாரிச்சிட்டு,கொஞ்சம் வயசான பெறகு (சொந்த) கிராமத்துல போய் செட்டில் ஆகிடனும்'#isitpossible
                                                                             ############
25ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினால் ஒரு iMandu பாய்ண்டு. இப்படி 500 பாய்ண்டுகள் சேர்த்தால் ஒரு கைக்குட்டை
  
                                                                            ############
கூலிங்க்ளாஸ் போட்டா மாதிரி என்னிடம் புகைப்படம் இல்லை.. இப்போ எப்படி ப்ரோபைல் போட்டோ வைக்க?

  
                                                                            ############
வெயில் காலங்களில் விடுமுறைகளே இல்லாததும், Oct-Jan நேரத்தில் அதிக விடுமுறைகள் இருப்பதும் தற்செயலாக நிகழ்ந்ததா? #Diwali
  
  
                                                                          ############
என்னை படுக்கையிலேயே ’நம்பர் ஒன்’ போக வைக்க எப்படியெல்லாம் பிரயத்தனப்படுகிறது கனவு #டாங்க் புல் #Inception
                                                                             ############




ஆங்கிலத்தில் இதை படிக்க...

13 comments:

எஸ்.கே said...

எல்லா ட்வீட்டுகளும் அருமையாக உள்ளன! மிகவும் ரசித்தேன்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லா ட்விட்டும் அருமை நண்பரே... இரண்டாவது உண்மை..

ஹேமா said...

முதலாவது தூக்கம் பிடிச்சிருக்கு பிரசன்னா !

ஆமா...எங்க நிறையக் காலமாக் காணோம்.கவிதையைத் திட்டவாச்சும் வருவீங்க.என்ன ஆச்சு.சுகம்தானே !

Philosophy Prabhakaran said...

// பதிவர்கள் எல்லாரும் இந்து வெறியர்கள். எல்லார் பக்கங்களிலும் RSS-க்கு
லிங்க் கொடுத்திருக்காங்க. //

கலக்கல்... எப்படி இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறீங்க...

Philosophy Prabhakaran said...

Where is ur twitter link...?

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

சௌந்தர் said...

எனக்கு மதிய நேரத்தில் உறங்கவே பிடிக்காது.. அதனால், இரவு தூங்கி மதியத்திற்கு முன்னமே எழுந்து விடுவேன்..///

இப்படி தான் இருக்கணும் நல்ல பழக்கம்


பதிவர்கள் எல்லாரும் இந்து வெறியர்கள். எல்லார் பக்கங்களிலும் RSS-க்கு
லிங்க் கொடுத்திருக்காங்க////

ஆமா ஆமா அவங்களுக்கும் கூகிள் என்ன லிங்க் இருக்கு

கூலிங்க்ளாஸ் போட்டா மாதிரி என்னிடம் புகைப்படம் இல்லை.. இப்போ எப்படி ப்ரோபைல் போட்டோ வைக்க?////

ஹி ஹி ஹி நீங்க தேவாவை தானே சொல்றிங்க..?

Unknown said...

ட்விட்ஸ் எல்லாமே நல்லாயிருக்கு..

Anonymous said...

சூப்பர் பாஸ்!

Prasanna said...

எஸ்.கே,
மிக்க நன்றி :)

வெறும்பய,
மிக்க நன்றி.. தெரியும் உங்களுக்கு பிடிக்கும்னு :)

ஹேமா,
சுகம்தான்.. கொஞ்சம் வேலை அதிகம் வேற ஒன்னும் இல்லை :) இதோ வந்து திட்டறேன்.. மிக்க நன்றி..


philosophy prabhakaran,
அது வந்து.. போங்க ரொம்ப புகழ்றீங்க.. இதோ லிங்க் http://twitter.com/prasannag6

Prasanna said...

T.V.ராதாகிருஷ்ணன்,
மிக்க நன்றி :)

பதிவுலகில் பாபு,
மிக்க நன்றி :)முதல் வருகைக்கும்..

Balaji saravana,
மிக்க நன்றி :)

@ சௌந்தர்,
//நல்ல பழக்கம் //
நீங்களாச்சும் சொன்னீங்களே வீட்ல திட்றாங்க..
//கூகிள் என்ன லிங்க் இருக்கு //
ஹிஹி கண்டிப்பா 'லிங்க்' இருக்கு :)
// நீங்க தேவாவை தானே சொல்றிங்க..//
நைசா நீங்க சொல்லிக்கறீங்களா :)

Chitra said...

எனக்கு மதிய நேரத்தில் உறங்கவே பிடிக்காது.. அதனால், இரவு தூங்கி மதியத்திற்கு முன்னமே எழுந்து விடுவேன்..



...... being practical? :-))

Anisha Yunus said...

//எனக்கு மதிய நேரத்தில் உறங்கவே பிடிக்காது.. அதனால், இரவு தூங்கி மதியத்திற்கு முன்னமே எழுந்து விடுவேன்..

//

அடா அடா அடா...என்ன சொல்ல, இவ்வளவு ஒழுக்கமான பிள்ளைய உலகத்துல பாத்ததே இல்ல, சுத்திப்போட சொல்லுங்க :))