Nov 3, 2009

அந்த 15 ரொபாட்கள்..!

மிகவும் ரகசியமான அந்த ப்ராஜக்ட் வெர்ல்ட் ரூலைப்பற்றி (World Rule) தெரிந்தவர்கள் மொத்தம் 8 பேர் தான். US ப்ரசிடன்டிற்கு கூடத்தெரியாது. இந்த ப்ரொக்ராமின் ப்ரம்மாக்களான மார்க் மற்றும் டாம் அன்று இறுதி கட்ட செக்கப்கள் முற்றிலும் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். படபடப்புடந்தான்."இது எந்த அளவு வெற்றி பெரும் என்று நினைக்கிறாய் டாம்?", என்றார் மார்க்.
"முழு வெற்றி தான். கூடிய சீக்கிரம் இந்த உலகமே நம் சொல் படி ஆட போகிறது!"

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்ட 15 ரொபாட்களும் 15 சக்தி வாய்ந்த நாடுகளில் விடப்படும். 5 வருடங்கள் கழித்து, அந்தந்த நாடுகளின் சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு, அந்த நாட்டையே ஆட்டி படைக்கக் கூடியவர்களில் ஒருவராக ஆக வேண்டும். இதுவே அந்த 15 'பேரின்' உள்ளே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ப்ரொக்ராமின் சாராம்சம்.

"5 வருடங்களில் இவை அத்தகைய உயர்வை எட்ட வாய்ப்பு இருக்கு என்றா நினைக்கிறாய்?", சந்தேகத்துடன் கேட்டவர் டாம்.
"மனிதனின் சுய சிந்தனையும், மிஷினின் உண்டு - இல்லை என்கிற துல்லியமும் ஒரு சேர வாய்ந்தவை இவை. இதன் சக்தி அளவிட முடியாதது டாம். அதுவும் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று இவைகளை யாராலும் சொல்ல முடியுமா? இதோ இதுக்கு இருக்கும் மீசையைப்பார்" ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் ரொபாட்டின் மீசையை த்டவிக்கொண்டே சொன்னவர் மார்க். டாமிற்கு இது எல்லாம் தெரிந்தாலும் கடைசி நேர பட படப்பை அடக்க முடியாது அல்லவா?

ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. அந்தந்த நாடுகளில் கொண்டு போய் விடப்பட்டனர் அந்த 15 பேரும், அந்தந்த நாடுகளின் குடிமகன் களாக.

....

இதோ ஓடிவிட்டதே 5 வருடங்கள்.. அவர்களின் கண்டுபிடிப்புகள் எந்த பதவியில் இருந்து கொண்டு அந்த நாடுகளை ஆட்டிக்கொண்டு இருக்கிறது என்று அனலைஸ் செய்து, அடுத்த கட்டத்திற்கு தயாராக கிளம்பினர் மார்க்கும் டாமும்.

"அவைகளின் நியூரல் நெட்வொர்க்கும் மனித மூலையை ஒத்து இருப்பதால், எல்லாம் ஒரே அளவு அறிவுடன் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த 15-இல் எது மிக அறிவானது, எது சக்தி வாய்ந்தது என்பதயும் பார்க்க வேண்டும்" பிளைட்டில் பாதி தூக்கத்தில் முனகிக்கொண்டார் டாம்.முதலில் அவர்கள் இறங்கிய இடம் அவர்களின் தலை நகரான வாஷிங்க்டன். இவர்களின் 'அது' அந்த நாட்டின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக இருந்தது.
"ஆகா. என்ன சக்தி வாய்ந்த பதவி? நாம் நினைத்ததை விட இந்த ப்ராஜக்ட் பெரும் வெற்றி தான்" என்று ஆனந்த் குக்கூரலிட்டார்  மார்க்.

அடுத்து ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா என்று பயணப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், ராணுவ தளபதி (பாகிஸ்தான்) என்று விதவிதமான, சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்தார்கள் இவர்களின் கண்டுபிடிப்புகள்.

எல்லா நாட்டையும் முடித்து கொண்டு, கடைசியாக இந்தியா வந்து, அந்த 15வது ரொபாட் வீட்டின் முன் இறங்கியதுமே... இருவரும் சிறிது அதிர்ச்சி அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னே? மத்த 14 நாடுகளில் பார்க்காத காட்சியை அல்லவா இங்கு கண்டனர்? வீட்டின் (அரண்மனையின்) வெளியே ஒரே மக்கள் கூட்டம். எக்கச்சக்க கார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டவை 'நானும் வி ஐ பி தான்' என்று சொல்லிக்கொள்ளும் சிகப்பு விளக்கு பொருத்த பட்டவை.

"ஆ.. இவர்தான் 15 பேரில் மிகுந்த சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும். என்ன கூட்டம்? அதோ, அங்கு நிற்பவர் இவர்களின் பிரதமர் போல் அல்லவா இருக்கிறார்? அவரே வெளியில் காத்து கொண்டு இருக்கிராரே?" வாயை பிளந்தார் டாம்.

"ஆம். உண்மைதான். ஆனால், பிரதமரை விட உயர்ந்தவராக இருந்தாலும், இவர் எந்த பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லையே?" என்றபடியே அங்கு இருந்த 'காரிய தரிசி'யிடம் உள்ளே சொல்லி அனுப்பினார் மார்க்.

அவர்கள் உடனே உள்ளே விடப்பட்டு, 'அவர்' எதிரில் நிற்க வைக்கப்பட்டனர்.

தன் ஒளி பொருந்திய கண்களை திறந்து, இவர்களை நோக்கி புன்முறுவல் பூத்தார் ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த ஸ்வாமிகள்.

10 comments:

சென்ஷி said...

நல்லாயிருக்குங்க!

Thomas Ruban said...

நல்ல (சுஜாதா பாணியில்) கதை. அதிலும் கடைசிவரி சூப்பர். வாழ்த்துக்கள்

Anonymous said...

appu indhian mattum ilichavaaythanama ello0raiym aanmeega kuruva eduthupaanreengala. ille boss indiyalarundhu sonna thaan swamijiaa ella nattilayum athipaanga. Eppudi japan technologykku peer ponadho athumaadhiri aanmeegathirkku indhiyaa thaan adayaalam.

பிரசன்ன குமார் said...

ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி சென்ஷி!

பிரசன்ன குமார் said...

//அதிலும் கடைசிவரி சூப்பர். வாழ்த்துக்கள்//

ஊக்கத்திற்கு நன்றி தாமஸ்!

//(சுஜாதா பாணியில்) கதை//

சுஜாதா இந்த கதையை படித்து இருந்தால், 'இது தமிழை பிடித்த பிணி' என்று திட்டி இருப்பாரோ?? :))

பிரசன்ன குமார் said...

//appu indhian mattum ilichavaaythanama ello0raiym aanmeega kuruva eduthupaanreengala//

அன்புள்ள அனானி,

இந்த கதை ஆன்மீகத்தை பற்றியது அல்ல. ஆன்மீகத்தை விட்டு விட்டு, அரசியல் நடத்தும் சில ஆசாமிகள் மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் சில அரசியல்வாதிகளை பற்றியது..

//athumaadhiri aanmeegathirkku indhiyaa thaan adayaalam//

கண்டிப்பாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்தியா ஆன்மீகத்திற்கு பேர் போனது தான் (குறிப்பாக வெள்ளைக்காரர்கள் மத்தியில்)

பின்னூட்டத்திற்கு நன்றி!

Murali said...

"அவர்கள் உடனே உள்ளே விடப்பட்டு, 'அவர்' எதிரில் நிற்க வைக்கப்பட்டனர்.

தன் ஒளி பொருந்திய கண்களை திறந்து, இவர்களை நோக்கி புன்முறுவல் பூத்தார் ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த ஸ்வாமிகள். "

Very nice

பிரசன்ன குமார் said...

//Murali கூறியது...
Very nice//

Thank you Murali :)

பிரியமுடன்...வசந்த் said...

வலைத்தளபெயரே வித்யாசமா இருக்கே தல

பிரசன்ன குமார் said...

ஆ. பெயர் காரணம் சொல்லி ஒரு இடுகை போட்டுட வேண்டியதான் :)

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி வஸந்த்..