Nov 10, 2009

அரண்டவன் அந்தாதி

அன்புள்ள அனானி
அவசரப்பட்டு
அனுப்பி விடாதே
ஆட்டோ

ஆட்டோ அனுப்பும் அளவுக்கு
அடியேன் ஆள் அல்ல..
அசட்டு அட்டிவன்!

அட்டானவன் ஆனாலும்
அன்பானவன்
அடக்கமானவன்

அடக்க ஆளில்லாமல்
அஃதொருமுறை
ஆணவத்தில் ஆடினேன்

ஆடிக்காற்று
ஆலையே அழிக்கலாம்.. ஆனால்
அபலைபால் அர்ச்சுனன்
அம்பெய்தலாமோ?

அம்போவென
அடிப்பட்டு அழ
ஆவல் அற்றவன்
அத்தகையவனிடம் அக்கறையோடு
அருள் அளிக்கலாமே..?

அளித்து அழிக்கும்
ஆண்டவனே..
அணுவே.. ஆழியே..

ஆகவே,
ஆட்டோ
அனுப்பி விடாதே
அவசரப்பட்டு
அன்புள்ள அனானி


பின் குறிப்பு:
அ, ஆ - விலேயே, அந்தாதி முறையில், அன்பிற்க்கினிய அனானியை பாட்டுடை தலைவனாகக் கொண்டு, தனது முதல் கவிதை(!)யை ஒருவன் எழுதி இருக்கிறான் என்றால்..
அவனுக்கு வந்த மிரட்டலின் பரிமாணத்தை புரிந்து கொண்டு, அவனுக்கு கை கொடுப்போமாக!! அவ்வ்வ்வ்வ்வ்.........

8 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//அந்தாதி முறையில், அன்பிற்க்கினிய அனானியை பாட்டுடை தலைவனாகக் கொண்டு,//

ஒஹோ...

நல்லா வந்துருக்கு,,,

ஆமா அனானி எதுக்கு ஆட்டோ அனுப்புறார்?

--------------------------------------------

பிரசன்னா ஃபாலோவர் விட்ஜெட் இணைத்திடுங்களேன்...அப்பொழுதுதான் புதிய இடுகைகள் என் முகப்பிற்க்கு வந்தடையும்...

Prasanna said...

//ஃபாலோவர் விட்ஜெட் இணைத்திடுங்களேன்//
Experimental
This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon!

இப்படியே சொல்லுது தல.. Add பண்ண முடியல :(

//ஆமா அனானி எதுக்கு ஆட்டோ அனுப்புறார்?//

அதாவது, இது future-ல எழுதுன கவிதை.. இன்னும் அந்த கார சாரமான, அடி வாங்க போற கட்டுரைய அவர் எழுதல.. ஹீ ஹீ

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி வசந்த் :)

கலையரசன் said...

அசட்டு அட்டிவன்னா என்ன பாஸ் அர்த்தம்?

Prasanna said...

அசட்டுத்தனமா எழுதுற, அட்டு+இவன் என்று பிரித்து படிக்கவும் (நீ எல்லாம் ஒரு மனுசனான்னு எல்லாம் மனசுல திட்ட கூடாது).. அட்டு பீசுனு கேள்வி பட்டு இருப்பீங்களே :)

வருகைக்கு நன்றி கலையரசன்!!

Hisham Mohamed - هشام said...

சூப்பர் கவிதை நல்ல அவையடக்கம்...
அநாநிகளை பொருட்படுத்தாதீர்கள்.
தொடரட்டும் பணி

Prasanna said...

ஊக்கத்திற்கும் சப்போர்டிற்கும் நன்றி ஹிஷாம் :))

மகேஷ் : ரசிகன் said...

சூப்பரா இருக்கு பாஸ்.

//அன்பிற்க்கினிய அனானியை பாட்டுடை தலைவனாக//

அடுத்து என்ன? புறநானூறு?

ஆமா, நீங்க GCE ல எந்த இயர்? எந்த டெப்ட்?

Prasanna said...

புறநானூறா.. எழுதலாமே.. எத்தனை போர், அரசியல் பார்த்து இருக்கோம்?
பி.கு. தமிழ் ஆர்வலர்கள் மன்னிப்பார்களாக..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தல..