Nov 15, 2009

ஹைக்கூ கதைகள்..!

1. ஆதி மனிதன்
அந்த கூட்டத்தில்
அதிகாரம் உள்ளவர்களும்
சோம்பேறிகளுமான அவர்கள்
ஒன்று சேர்ந்தார்கள்.
சாதிகள் பிறந்தது!

2. விடுதலை
பருப்பு டப்பாவில்
குழந்தையின் வைத்தியத்திற்கென,
செல்லம்மா சம்பாதித்திருந்த
பணத்தை எடுத்துக்கொண்டு
போய்.. குடித்து விட்டு..
ரோட்டை கடக்கையில்..
அடிப்பட்டு செத்துப்போனான்
சின்னப்பா..

3. அரசியல்வாதி
'கோடா'னு கோடி ரூபாய
வச்சிக்கிட்டு என்ன பண்ணுவீங்க?
என்றார் அவர்.
'எனக்கு முன்னாடி இருந்தவங்க
என்ன பண்ணாங்களோ
அதயே தான்'
என்று மடக்கினார் இவர்.

4. நிலா
'காசு எங்க இருக்கு புள்ள?
போறதுக்கே நெறையா பணம் வேணும்.
அங்க அவ்ளோ தண்ணி இருக்காம்!
முக்காவாசி பேர் போய்ட்டாங்க தான்.
இருந்தாலும்,
இங்கனயே கெடந்து உங்கள சாக உட்ருவனா?
எப்படியாச்சும் கூட்டி போய்டுறேன்'
என்றான் 2042-இல்
ஒரு பூமி ஏழை!

5. உலகின் கடைசி மனிதன்
தனியான 50ஆவது நாள்.
குதூகலித்தான்..
பொன் விழாவுக்காக அல்ல.
30 நாட்களாக தேடிக்கொண்டிருந்த..
துப்பாக்கி அன்று கிடைத்தது!

6 comments:

Ashok D said...

முதல் கவிதை, அசத்தல் பிரசன்ன குமார்.

கே. பி. ஜனா... said...

விடுதலை என்ற தலைப்பு,
50வது நாள்-30வது நாள் என்ற கணிப்பு...ரசித்தேன். கவிதைகள் நன்று. (சோம்பேறி என்பது சோம்பேரி என்று வந்துவிட்டதோ?)

Prasanna said...

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி D.R.Ashok :)

Prasanna said...

@ K.B. Jana,
உங்களிடம் பாராட்டு பெறுவது பெருமையா இருக்கு..

சோம்பேறியை சரி செய்து விட்டேன் (என்னை அடிக்கடி என் நண்பன் கூப்பிடும் வார்த்தை இது. அதையே மாற்றி விட்டேனே!)..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :)

Unknown said...

கொஞ்சம் விரக்தியும், சோகமும், உண்மைகளும் நிறைந்த கவிதைகள்... அழகு :))

Prasanna said...

//ஸ்ரீமதி said...
கொஞ்சம் விரக்தியும், சோகமும், உண்மைகளும் நிறைந்த கவிதைகள்... அழகு//

வருகைக்கும் கரு(ஊக்க)த்திற்கும் நன்றி ஸ்ரீமதி :)