Jul 1, 2010

பதிவுலகம் பற்றி திரு. கமல்..

அனைவருக்கும் வணக்கம்! நான் நடிகர் கமல் பேசுகிறேன்.. பதிவுலகை பற்றி கமல் பேசுகிறானா? என்ன தகுதி இருக்கிறது இவனுக்கு என்று முந்திரிக்கொட்டை தனமாக கேள்வி கேட்பவர்களுக்கு.. மக்கள் மனதில் தேவையான கருத்துக்களை பதிப்பவன் என்ற முறையில்.. நானும் ஒரு பதிவர்தான் என்று என்னால் பெருமையாகவே சொல்லிக்கொள்ள முடியும்.

எனக்கு தமிழ் வலையுலகம் மிகப்பிடிக்கும். அதில் வரும் படைப்புகள், வாதங்கள் முதலியவற்றை பார்த்தாலே நாம் எந்த கொம்பனுக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது புலனாகும். ஆனால், எனக்கு பிடிக்காத ஒரு அம்சம்.. அடுத்தவர்கள் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் ஆசை.. அவ்வபோது தலை தூக்கிக்கொள்ளும் அந்த ஆசை...

நீ ஏன் இதைப்பற்றி எழுதவில்லை? நீ அதை ஆதரிக்கிறாயா..
நீ ஏன் இதைப்பற்றி எழுதுகிறாய்? நீ ஒரு சொம்பு தூக்கியா..
இவர்கள் இதை கண்டு கொள்ளவே இல்லையே? பின்னூட்டம் கூட போடவில்லை.. எனக்கு ரத்தம் கொதிக்கிறது..

என்பது போன்ற, அடுத்தவனின் பேனாவை பிடுங்கி தான் எழுதும் இந்த போக்கு, கண்டிக்கத்தக்கது.. 'யாரும் இப்படி சொல்லக்கூடாது என்று நீ சொல்கிறாயே, இது சர்வாதிகாரம் இல்லையா கமல்'? என்று கேட்பவர்களுக்கு.. மற்றவர்கள் என்ன எழுத வேண்டும் என்று ஆணையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்று சொல்லும் உரிமை எனக்குண்டு என்றே நம்புகிறேன்..

உன் சுதந்திரம் அடுத்தவனின் மூக்கு நுனிவரை தான் என்பதை புரிந்து கொண்டு, கருத்து சுதந்திரதிற்கு கை கொடுப்போம்.. அந்த சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்வோம். நன்றி.. வணக்கம்!


குறிப்பு: இது என் பக்கத்து தெரு மேடை நாடக நடிகர் திரு. கமல் சக்சேனா சொன்ன கருத்துக்கள் (பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் ஹீ ஹீ) ..

16 comments:

Prasanna said...

ஐயய்யோ.. கோவப்பட்டுடேனே.. சோத்துல வெஷம் வெச்சுருவாங்களே?

ILLUMINATI said...

ச்சே,ச்சே...
டேய்,யாரங்க?அந்த மஞ்சத்தண்ணிய எடு. :P

Prasanna said...

இலுமி.. ஆட்டு மேல இறக்கமே வராதா உங்களுக்கு? :)

ILLUMINATI said...

யோவ்,இரக்கமெல்லாம் பார்த்தா தொழில் நடத்த முடியுமாயா? :P

ILLUMINATI said...

அப்புறம், 'இறக்கமா' வேணும்?
ஒரு நாலு இன்ச்சு எறக்கி வெட்டுனா போதுமாயா? ;)

Prasanna said...

சாரி இலுமி, ஸ்பெல்லிங் நாறிப்போச்சு ச்சே மாறிப்போச்சு :) என்ன இன்னிக்கி ஓவரா ரோலிங் ஆவுது..

மகேஷ் : ரசிகன் said...

தம்பி... சொம்பு அடி வாங்குது போல... ?

மகேஷ் : ரசிகன் said...

கமல் பேசுற மாதிரியே ஒன்னும் பிரியல.

ஹேமா said...

நன்றி வணக்கம் பிரசன்னா !

Chitra said...

குறிப்பு: இது என் பக்கத்து தெரு மேடை நாடக நடிகர் திரு. கமல் சக்சேனா சொன்ன கருத்துக்கள் (பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் ஹீ ஹீ) ..


..... ஓ...... நடிகர் கமலோனு நினைச்சிட்டேன். :-)

ஜில்தண்ணி said...

//மற்றவர்கள் என்ன எழுத வேண்டும் என்று ஆணையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்று சொல்லும் உரிமை எனக்குண்டு என்றே நம்புகிறேன்..//

உரிமை உனக்கு இருக்கு ராசா

//உன் சுதந்திரம் அடுத்தவனின் மூக்கு நுனிவரை தான் என்பதை புரிந்து கொண்டு, கருத்து சுதந்திரதிற்கு கை கொடுப்போம்..//

ரெண்டு கையை கொடுப்போம்ல

கமல் பேர சொல்லி கிடா வெட்டியாச்சி,நடக்கட்டும் நடக்கட்டும்

Prasanna said...

@ மகேஷ் : ரசிகன்,
//சொம்பு அடி வாங்குது போல.//
இல்லனே இல்ல.. சோம்பு எஸ்கேப் ஆய்டுச்சு :) நல்ல வேல புரியல..


@ ஹேமா,
நன்றி வணக்கதுல ஏதோ ஒரு சூட்சமம் தெரியுதே, உண்மைய சொல்லுங்க :)


@ Chitra,
//நடிகர் கமலோனு //
நீங்களாச்சும் அப்படி நெனச்சீகளே :)

@ ஜில்தண்ணி - யோகேஷ்,
//உரிமை உனக்கு இருக்கு ராச//
இருக்கா இருக்கா..?

//கிடா வெட்டியாச்சி,நடக்கட்டும் நடக்கட்டும்//
கெடாவ வெட்டிட்டா அது எப்படி நடக்கும் ஹீ ஹீ

அண்ணாமலை..!! said...

கமல் பேசியது மாதிரியே தான் இருக்கு.
ஆனா, நீங்க ரஜினி பேசின மாதிரி எழுதியிருந்தாதான் இன்னும் நல்லா இருந்திருக்கும்..!ஏன் அப்படி எழுதலை?

ஹி..ஹி..
நான் யாரு பேனாவையும் பிடுங்குறது இல்ல...

:)

Prasanna said...

@ அண்ணாமலை,

ஏன்னா வீட்டு பக்கத்துல ஒரு ரஜினி குமார் இல்லையே? இல்லனா அவர் கருத்தையும் எழுதி இருப்பேன் ஹீ ஹீ (இதுக்கே கும்மிடுவாங்களோனு ஒரு பயம் தான்).. பேனா பிடுங்காத அண்ணன் அண்ணாமலைக்கு கமலின் நன்றிகளும் வாழ்த்துக்களும் (அதே கமல் சக்சேனா தான் :) )

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லாத்தான் பேசுறீங்க... உள்குத்து ஒண்ணும் இல்லியே... இப்பெல்லாம் கமெண்ட் போட்டா கூட ஆட்டோ வருதாம்.... தெரிஞ்சவைங்க சொன்னாக... ஒகே... மீ எஸ்கேப்

Prasanna said...

@ அப்பாவி தங்கமணி,

உள்குத்தா.. அப்படின்னா? அப்புறம், பிரதான சாலையில் இருந்து எங்க வீட்டுக்கு ஆட்டோல போறதுக்கே ஐம்பது ரூபாய் கேக்கறாங்க.. விலை வாசி ஏறிப்போச்சு.. அதுனால இனி யாருக்கும் அவ்வளவு செலவு பண்ணி எல்லாம் ஆட்டோ அனுப்பபடாதாம் :)