கதை படித்து விட்டீர்களா? சரி இப்போ விளக்கம்.
அவரவர் நம்பிக்கை அவரவற்கு என்றாலும், ஒரு மூட நம்பிக்கையினால் அதை நம்பாதவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவர் என்பதே கதையின் கரு.
முதல் விவாதம் நடந்தது சில வருடங்கள் முன், தூர்தர்ஷன் காலம் என்பதை விளக்க ஒலியும் ஒளியும்..
இரண்டாவது பத்தி - நிகழ்காலம் என்பதை காட்ட, சுரேஷுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையேயான அந்த வெளிப்படையான பேச்சு,
மூன்றாவது பத்தியில் காலம் வெளிப்படையாக சொல்லப்படுகிறது.
சுரேஷ், தான் மணக்க விறும்பிய (இரண்டாவது பத்தியில் வரும்) பெண்ணை, எப்படி தனக்கு சம்பந்தம் இல்லாத நம்பிக்கையால் இழக்கிறான் என்பது இரண்டாவது பத்தியில் சொல்லப்படுகிறது.
சுரேஷ் சிறுவனாக இதைப்பற்றி சுதர்சனிடம் விவாதித்ததை மறந்து விட்டான். ஆனால் அவனுடைய ஆழ்மனம் மறக்கவில்லை.. 'பார் அதை நம்பாத நான் எப்படி பாதிக்கப்படுகிறேன்' என்பதை சுதர்சனிடம் சண்டை போட்டு (கனவில்) காட்ட முற்படுகிறது.. அவ்வளவுதான். விளக்கம் முடிந்து விட்டது. கதையில் இன்னும் சில விஷயங்களை மறைத்து வைத்துள்ளேன்.. திருப்பி படித்து கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.
17 comments:
உங்கள் கதை எப்ப கொஞ்சம் புரியவில்லை என்று ஒருத்தர் சொன்னாரோ அப்பவே நீங்க இலக்கியவாதி ஆகிட்டீங்க.
எப்ப ஒண்ணுமே புரியல அப்படின்னு ஒருத்தர் சொல்லறாரோ அப்ப நீங்க தேர்ந்த இலக்கியவாதி ஆகிடுவீங்க ...
முதலில் இலக்கியவாதி ஆனதுக்கு வாழ்த்துக்கள் :-)
கனவை இவ்வளவு ஆராய்ச்சி செய்து, அதை புரியாத மாதிரி கதை எழுதி, கொஞ்சம் புரியவைத்து மீதியை open end-ஆக விடும் எங்கள் அண்ணன் பிரசன்னா, இன்றுமுதல் ”பதிவுலக நோலன்” என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாராக...
ஐயையோ..சாமீ!!
இதுக்குக் கதையே பரவால்ல!
:)
(எலக்கியவாதிகளைக் கண்டு
எகிறி ஓடுவோர் சங்கம்!)
கதை நல்லாயிருக்குங்க பிரசன்னா!
குறிப்பு: பதிவு போடுவதற்கு விஷயமே கிடைக்கவில்லை என்பதை இப்பதிவின் மூலம் சூசகமாக கூறியுள்ளேன்.. அதையும் கவனித்துக் கொள்ளவும்..
.....இந்த விளக்கம் நல்லா இருக்குது.... உங்க approach கலக்குது.... ஹா,ஹா,ஹா,ஹா,...
ஓ! இப்படியெல்லாம் கூட பதிவு போடலாமா?!(வடிவேலு ஸ்டைல்ல படிங்க..)
ரைட்டு.. நடத்துங்க :))
ஹீ ஹீ,இங்கன ஒரு ஆடு ரெடி ஆவுறது கண் கூடா தெரியுது.அப்படியே,"நான் தான் இலக்கியவாதி,தமிழர்கள் முட்டாள்கள்,உங்களுக்கு பிரேசில் எழுத்தாளர் லான் பான் தெரியுமா? " அப்டின்னு எல்லாம் சலம்ப கத்துக்க மச்சி.
அப்ப தான்,ஏற்கனவே ஒருத்தரை புல் டோசர் விட்டு நிரவுன மாதிரி உம்மையும் நிரவலாம்.எப்புடி இலக்கியவாதி? :)
Inception பார்த்துட்டியா?
பிரசன்னா...விளங்கிச்சு ...!
//Karthick Chidambaram said...எப்ப ஒண்ணுமே புரியல அப்படின்னு ஒருத்தர் சொல்லறாரோ அப்ப நீங்க தேர்ந்த இலக்கியவாதி ஆகிடுவீங்க ...//
அட இப்படி ஒரு மேட்டர் இருக்கறதே எனக்கு தெரியாதே... இனிமே நான் பிரெஞ்சுல தான் கதை எழுதுவேன்... அதுவும் நெறைய பேருக்கு புரியாதே (எனக்கும் தான்) அப்போ நான் இலக்கியவாதி ஆய்டுவேணா... விளக்கம் ப்ளீஸ் (இன்னொரு பதிவா போட்டாலும் சரி...ஹி ஹி ஹி)
ஜஸ்ட் கிட்டிங்...நல்ல explanation
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
தங்கள் கதை நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!
hi prasanna!
me back ...
ஏற்கனவே ஒரு கொடுமை இப்ப அதுக்கு இன்னொரு கொடுமை
ஓஹ் சாரி சாரி கதைக்கு பதில கொடுமைன்னு வந்துடுச்சு..
கதை புரியலன்னா இலக்கியவாதின்னுதேன் அர்த்தம்ங்ணா...இன்னும் எழுதுங்க!! :)
அண்ணா, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html
//கனவை இவ்வளவு ஆராய்ச்சி செய்து, அதை புரியாத மாதிரி கதை எழுதி, கொஞ்சம் புரியவைத்து மீதியை open end-ஆக விடும் எங்கள் அண்ணன் பிரசன்னா, இன்றுமுதல் ”பதிவுலக நோலன்” என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாராக...//
repeat-டு....
அனைவருக்கும் மிக்க நன்றி :)
ஜெய் & துரோகி,
நோலனா.. எனக்கே நெஞ்சு பொறுக்குதில்லையே :)
@ அன்னு,
ஆஹா மிக்க நன்றி.. தொடர்கிறேன்..
@ pinkyrose,
இதெல்லாம் நாளைக்கு பேப்பர்ல வரும்.. வரலாறு பேசும்..
மகேஷ் அண்ணே.. இந்த பதிவு போட்டு கொஞ்ச நாள் கழிச்சு தான் பாத்தேன்.. சான்சே இல்ல :)
Post a Comment