Jul 12, 2010

The Matrix படத்தை தமிழில் போடுகிறார்கள்

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்..
வரும் வெள்ளிக்கிழமை, 7.30 PM இந்திய நேரத்திற்கு கலைஞர் தொலைகாட்சியில் மாட்ரிக்ஸ் (The Matrix) படத்தை தமிழில் போடுகிறார்கள். தவறாமல் பார்க்கவும். ஏற்கனவே பார்த்து விட்டீர்களா? பரவாயில்லை, இன்னொரு முறை பாருங்கள்..







ஒரு வாரம் லீவ் போட்டு விட்டு, இப்படத்தை பற்றி பதிவு எழுதும் எண்ணம் உண்டு.. இப்படி ஒரு கற்பனை சாத்தியமா என்று வியக்க வைக்கும் இப்படம், ஒரு அனுபவம். படத்தின் பல சிறப்பம்சங்களில் வசனமும் பிரதானமான ஒன்று.. தமிழில் என்ன செய்திருக்கிறார்கள் பார்க்க வேண்டும்.


குறிப்பு: இப்படத்திற்காக PRO வேலை பார்ப்பதில் எனக்கு பெருமையே..

11 comments:

மகேஷ் : ரசிகன் said...

செம கான்செப்ட்மா...

சென்ஷி said...

:)

இந்தப் படத்தை ரிலீஸப்ப பார்த்து கதை புரியாம வெறும் கிராஃபிக்ஸ் மாத்திரம் வச்சிக்கிட்டு எதுக்கு இந்த அலும்பு பண்றாய்ங்கன்னு சலம்பிட்டு இருந்தோம். அப்புறமா பொறுமையா சப்டைட்டிலோட பார்த்த பிறகுதான் இந்த திரைப்படம் ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது. முதல் பாகத்தோட ஒப்பிடும்போது மத்த ரெண்டு பாகமும் அவ்வளவா கவரலை.

நீங்க எழுதுறத வாசிக்க வெயிட்டிங்.

ஜில்தண்ணி said...

சொல்லிட்டீங்கள கண்டிப்பா பாத்துடுவோம் :)

ILLUMINATI said...

மாட்ரிக்ஸ் படம் முதல் பாகம் மட்டுமே எனக்குப் பிடித்தது.அதிலும் மூன்றாவது பாகம் செம மொக்கை.எப்பயுமே ஒரு படத்தை அதனுடைய ஒரிஜினல் மொழியில் பார்ப்பதே எனக்குப் பிடிக்கும்.மொழியே புரியலைன்னா கூட subtitle வச்சுப் பார்ப்பேன்.அதனால,நோ சான்ஸ்... :)

Prasanna said...

@ மகேஷ் : ரசிகன்,

ஆமான்னா.. பயங்கரம் :)

Prasanna said...

@ சென்ஷி,

நீங்கள் சொல்வது ரொம்ப உண்மை.. படத்தின் மேன்மையை உணர கொஞ்சம் நேரம் எடுத்தது எனக்கும்.. எனக்கும் முதல் பாகம் தான் ரொம்பப்பிடித்தது..

ஆனால், இரண்டாம் மூன்றாம் பாகங்கள், படத்தை வேறு பரிமாணத்தில் காட்டும் முக்கியமான படங்கள்.. சொல்லப்போனால் கான்செப்ட் அளவில், இரண்டாம் பாகத்தில்தான் அதிக தகவல்கள் நமக்கு..

பிறிதொரு பொழுதில் விரிவாக அலசுவோம் :)

Prasanna said...

@ ஜில்தண்ணி,

ஜில்லு, நீங்கதான் முக்கியமா பாக்கணும்.. ஞாபகம் இருக்குல்ல?


@ ILLUMINATI,

//அதிலும் மூன்றாவது பாகம் செம மொக்கை//
இரண்டாம் மூன்றாம் பாகங்கள், படத்தை வேறு பரிமாணத்தில் காட்டும் முக்கியமான படங்கள்.. ஆனால் நீங்கள் சொல்வது போல், ஆக்ஷனில் ரொம்ப கவனம் செலுத்தியதால் மூன்றாவதில் கொஞ்சம் சிதறிவிட்டது..

//அதனால,நோ சான்ஸ்//

இந்த படத்தை சைனீசில் போட்டா கூட நான் பாப்பேன் :)

Ashok D said...

:)

Gayathri said...

உங்க பதிவ படிச்சது லேந்து தமிழ்ல பாக்கனும்னு ஆசையாத்தான் இருக்கு ..ஆனா நான் இருக்கர ஊருல கலைஞ்ஞர் டிவி வராதே.ம்ம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

enga oorla andha thollaikatchi varrathillaingnnaa...

Prasanna said...

@ D.R.Ashok,
வாங்க அசோக் ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கீங்க :)


@ Gayathri,
திருட்டு சிடிலயாச்சும் பாத்துடுங்க :) கற்பனையின் உச்சம் இந்த படம்..


@ அப்பாவி தங்கமணி,
என்ன? அப்போ மானாட மயிலாட பாக்க முடியாதா உங்களால? கூட்டுங்கள் மாநாட்டை, நிறைவேற்றுங்கள் கண்டன தீர்'மானத்தை'..