Feb 28, 2014

புதுமையான தமிழ் பெயர்கள்

குழந்தை பிறக்கையில் தமிழகத்தின் இன்றைய டிரெண்டான தமிழ் பெயர் தேடலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? இன்றைய பெற்றோர்களுக்கு இருக்கும் அதே விதிமுறைகள் - தமிழில் இருக்க வேண்டும். புதிதாக, 'ஸ்டைலிஷாக' வேண்டும் போன்றவை. அந்த தேடலில் கிடைத்த சில பெயர்கள் அனைவருக்கும் உதவக்கூடும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.

பெண் குழந்தை பெயர்கள்
நிலானி
மோனா
இனியா
இலக்கியா
யாழினி
இளமதி
முகில்
ஓவியா
வானதி
வெண்பா
தமயந்தி
கவின்
கயல்
நவிரா
மேதினி
தண்மதி
அதரா
அன்யா

ஆண் குழந்தை பெயர்கள்
ஆதன்
எழினி
சுகதன்
நிதாந்த்
சமரன்
தமன்
வெயின்
நிதில்
வியன்
புரவ்


என் பெண் குழந்தைக்கு நேயா என்று வைத்திருக்கிறோம். நேசத்துக்குரியவர்/பிரியமானவர் என்ற பொருள் வரும் (E.g. மனிதநேயம்). இதே பெயரில் ஒரு ரஷ்ய ஆறும் ஓடுகிறது.


5 comments:

Philosophy Prabhakaran said...

கொத்து,

எண்ணிக்கையில் பெண் குழந்தைகளின் பெயர்கள் அதிகமாக இருக்கின்றன கவனித்தீர்களா...? கிடைத்திருக்கும் கொஞ்சம் ஆண் பெயர்களும் சட்டென புரிந்துகொள்ள முடியாதபடி இருக்கின்றன... பெண்களுக்கு நிலா, இனியா, ஓவியா போல ஆண்களுக்கு நச்சுன்னு ஏதாவது பெயர் கிடைக்குமா ?

Rajesh V Ravanappan said...

கௌசிகம் - (ஒரு பண் வகை) - கௌசிகா
இந்தளம் - (ஒரு பண் வகை) - இந்தளா
நனி - (மிக, சால போன்ற மேன்பட்ட சொல்) - நனியவள், நனியா
தாரணி - பூமி

Prasanna said...

பிரபா, ஆண்களுக்கு வித விதமா பெயரும் கிடையாது.. உடைகளும் கிடையாது.. மொத்தத்தில் நோ வெரைட்டி.. அதனால் பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்வது நல்லது :)


ராஜேஷ்,
நன்றி!

அன்பர்களே, மேலும் பெயர்கள் இருந்தால் தெரிவிக்கவும்

Unknown said...

கௌசிகா meaning

Unknown said...

நனியா அர்த்தம் என்ன?