Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

May 22, 2014

ஆயிஷா.. குறுநாவல்

நிறைய பேர் ஏற்கனவே படித்திருப்பீர்கள்.. நான் வழக்கம் போல் லேட்டு.. மொத்தமே பதின்மூன்று பக்கங்கள்தான். டப்பென்று ஒட்டிக்கொண்டு விட்டது. கல்வித்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அதோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் (ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்.. முக்கியமாக ஆசிரியர்கள்) அவசியம் வாசிக்க வேண்டிய கதை.. ஆயிஷா.. வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் இக்கதை பேசும் விஷயம் இன்னும் ப்ரெஷ்ஷாக இருக்கிறது என்பது சோகமான விஷயம்.. 

அதிலும் நாமக்கல் டைப் பள்ளிகள், ப்ரீகேஜி க்கு ஒரு லட்சம் வாங்கும் பள்ளிகள் (மற்றும் அவை உருவாகி வந்த காரணங்கள்) ஆயிஷாவின் ஆசையை கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு கொண்டு சென்று விட்டன..



ஆசிரியராக ஆகும் ஆசையையும் இக்கதை தூண்டி விடுகிறது.




முழுதும் படிக்க..

Mar 8, 2014

சன்னு குட்டியின் டெடி பொம்மை

சன்னு குட்டி பள்ளிக்கூடத்துக்கு பாட்டி கூட ஆட்டோல டுர்ர்ர்னு போயிட்டு இருந்தான். வழில வர்ற கடை, குளம்னு வேடிக்கை பாத்துட்டே வந்தான். அப்போ திடீர்னு ஆட்டோ பக்கத்துல ரெண்டு காக்கா பறந்து வந்து 'சன்னு குட்டி நில்லு நில்லு'னு கத்துச்சாம். ஆட்டோ அண்ணா கிட்ட வண்டிய நிறுத்தச்சொல்லிட்டு சன்னு கேட்டானாம் 'என்ன காக்கா எதுக்கு பள்ளிக்கு போகும் போது நிக்கச்சொல்ற? நேரம் ஆகுதுல்ல? சீக்கிரம் சொல்லு'.

அதுக்கு காக்கா சொல்லுச்சாம்.. 'நம்ம டெடி பேர் வீட்டுல யார்கிட்டயும் சொல்லாம வெளில வந்துச்சு, அத நரி தூக்கிட்டு போயிடுச்சு. சீக்கிரம் வா' அப்படின்னுச்சாம்.

'டெடி அப்படி சொல்லாம போகாதே? ஆட்டோவ திருப்புங்க'
'காக்கா, நரி போன இடத்த ஆட்டோ அண்ணாக்கு வழி காட்டு ப்ளீஸ்' அப்படின்னு சொல்லிட்டு வேகமா வண்டில ஏறி உக்காந்தான் சன்னு.

காக்கா முன்னாடி வழி காட்டிகிட்டே போக, பின்னாடி ஆட்டோல சன்னு வந்து நரியோட இடத்துக்கு வந்து பாத்தா.....

நரி டெடி பொம்மையை பத்திரமா வீட்டுல வச்சி ஜூஸ் கொடுத்துக்கிட்டு இருந்தது.

'நரி, ஏன் டெடியை தூக்கிட்டு வந்தீங்க?' அப்படின்னு கேட்டான் சன்னு.

அதுக்கு நரி 'டெடி வழி தெரியாம சுத்திட்டு இருந்தான், அதான் இங்க பத்திரமா வச்சு அப்புறமா உங்க வீட்டுல விடலாம்னு வச்சிருக்கேன்'

'ஓ அப்டியா? ரொம்ப நன்றி.. டெடிய இப்போ நான் கூட்டிட்டு போறேன்' னு சொல்லி வீட்டுல பத்திரமா அவனோட இடத்துல டெடிய வச்சிகிட்டான் சன்னு. 'இனி யார்கிட்டயும் சொல்லாம எங்கயும் போகக்கூடாது சரியா?'அப்படின்னு டெடி கிட்டயும் சொல்லி கொடுத்துட்டான்.

அன்னைல இருந்து சன்னுவும் நரியும் பெஸ்ட் பிரண்ட்ஸ் ஆகிட்டாங்க!


முழுதும் படிக்க..

Feb 28, 2014

புதுமையான தமிழ் பெயர்கள்

குழந்தை பிறக்கையில் தமிழகத்தின் இன்றைய டிரெண்டான தமிழ் பெயர் தேடலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? இன்றைய பெற்றோர்களுக்கு இருக்கும் அதே விதிமுறைகள் - தமிழில் இருக்க வேண்டும். புதிதாக, 'ஸ்டைலிஷாக' வேண்டும் போன்றவை. அந்த தேடலில் கிடைத்த சில பெயர்கள் அனைவருக்கும் உதவக்கூடும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.

பெண் குழந்தை பெயர்கள்
நிலானி
மோனா
இனியா
இலக்கியா
யாழினி
இளமதி
முகில்
ஓவியா
வானதி
வெண்பா
தமயந்தி
கவின்
கயல்
நவிரா
மேதினி
தண்மதி
அதரா
அன்யா

ஆண் குழந்தை பெயர்கள்
ஆதன்
எழினி
சுகதன்
நிதாந்த்
சமரன்
தமன்
வெயின்
நிதில்
வியன்
புரவ்


என் பெண் குழந்தைக்கு நேயா என்று வைத்திருக்கிறோம். நேசத்துக்குரியவர்/பிரியமானவர் என்ற பொருள் வரும் (E.g. மனிதநேயம்). இதே பெயரில் ஒரு ரஷ்ய ஆறும் ஓடுகிறது.


முழுதும் படிக்க..

Jan 27, 2014

குழந்தைகள் இலக்கியம்

சின்ன வயதில் வேகமாக, கோர்வையாக படிக்க வராது என்பதால் அம்மாவை படிக்கச்சொல்லி நானும் அக்காவும் கேட்பதுண்டு. அதில் ஒரு கதையில் கபாலீசுவரி என்கிற வில்லி கதாபாத்திரம் இன்றும் நினைவிருக்கிறது. கபாலீசுவரியை இன்னும் பயங்கரமானவராக ஆக்கி அவளுக்கு பாலீசுவரி என்று பெயர் வைத்து ஒரு கதை எழுதினேன் (நான்காவதில்). அதை ஐந்தாவது படிக்கும்போது நீட்டு பேப்பரில் 'அழகாக' எழுதி கோகுலம் இதழுக்கு அனுப்பி வைத்தேன். அதை அவர்களும் பிரசுரித்து இதழையும் அனுப்பிவிட, அன்று முழுக்க ஒரு இடத்தில் நிற்கவே முடியவில்லை. முதல் பிரசுரம்! அதற்கு சன்மானமாக அவர்கள் அனுப்பிய மணியார்டர் தான் எனது முதல் சம்பாத்தியம். அந்த கிளுகிளுப்பு இன்றும் அப்படியே மனத்தில் உண்டு!

குழந்தை இலக்கியத்திற்கு ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று தேடும்போது கீழ்கண்ட கட்டுரைகள் தென்பட்டது. உங்களுக்கும் உதவக்கூடும். இந்த தலைப்பில் புதிய உபயோகமான தரவுகள் கிடைக்க கிடைக்க இங்கு சேர்த்துக்கொண்டே இருக்கப்போகிறேன்.

ச.தமிழ்ச்செல்வன்

பா.ராகவன்

இப்போதைக்கு இந்த வகை எழுத்து பற்றி சில குறிப்புகள் -
எளிமையாக, சுவாரசியமாக, தகவல் பிழையில்லாமல் இருக்க வேண்டும். அனைத்து தரப்பு குழந்தைகளையும் மனதில் வைத்து எழுதப்பட வேண்டும். நீதி சொல்லக்கூடாது (நம்மள நல்லா ஏமாத்திட்டாங்க). குழந்தைகளின் வயதை தீர்மானித்து அதற்கேற்றவாறு கதையை அமைக்க வேண்டும். வாசிப்பவர்களை கதையில் ஒன்ற வைத்து அவர்களுக்கு கதையின் மீது ஒரு ஆதிக்கத்தை அளிக்க வேண்டும். கதையின் போக்கிலேயே செய்திகளை அறிய வைக்க வேண்டும். விளக்கக்கூடாது.

..தொடரும்..

26/365




முழுதும் படிக்க..