Jul 23, 2010

ஆழ்மனம்



'உனக்கு நம்பிக்கை இல்லனா விட்ரு, எதுக்கு அடுத்தவங்க நம்பிக்கைல தலையிடற..?' 
'சுதர்சன்.. இது மூட நம்பிக்கை. நம்பாதனு சொல்றேன்.. உன் நல்லதுக்கு தான சொல்றேன் ?'
'அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. உன் கிட்ட வந்து இத நம்பு, அத நம்பாதனு எதாச்சும் சொல்றோமா? உன் வழி உனக்கு, என் வழி எனக்கு.. நான் ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் நம்பறேன், அவ்வளவுதான்'
அவன் சொல்வதும் சரியாகவே தோன்றியது.. 'ஹ்ம்ம் சரி.. எப்படியோ போ' - என்று சொல்லிவிட்டு ஒளியும் ஒலியும் பார்க்க கெளம்பினான்..பத்தாம் வகுப்பு, அது ஒன்றைத்தான் பார்க்க விடுவார்கள் விடுதியில்..
**
'உன்னை ரொம்ப பிடிக்கும், இல்லன்னு சொல்லல. ஆனா முடியாது சுரேஷ். வேற எதுனாலும் ஒத்துப்பாங்க. ஜாதகத்துல மட்டும் சமரசமே கிடையாது. அதுவும் செவ்வாய் தோஷம். ஒத்துக்க மாட்டாங்க'
'நீ நம்பறியா இதை?'
'நானும் நம்பறேன்'
'ஓகே.. Thanks for being so open, நாளைக்கு பாப்போம்'
'பாப்போம்.. சாரி..'
**
அடுத்த நாள் காலை..
எப்போதோ தன்னுடன் படித்த.. அவன் பேர் என்ன? ஆ சுதர்சன்.. அவனுடன் தெருவில் உருண்டு சண்டை போடுவது போல் சம்பந்தம் இல்லாமல் கனவு வந்தது குறித்து ஆச்சர்யப்பட்டான் சுரேஷ்..

17 comments:

Philosophy Prabhakaran said...

Simple and Superb... இப்படித்தான் பலபேர் இருக்கிறார்கள்... இளமை பருவத்தில் கடவுள் நம்பிக்கை இல்லை, ஜாதகம், ஜோசியம் எல்லாம் உண்மை இல்லை, வரதட்சணை வாங்கமாட்டேன், பெண்களுக்கு சம உரிமை என்று என்னவெல்லாமோ பேசிவிட்டு பின்னர் பெரியவர்களானதும் சந்தர்ப்பம் சூழ்நிலை என்று பிதற்றுவார்கள்...

சௌந்தர் said...

ரொம்ப நல்ல இருக்கு

Chitra said...

ஆஹா.... காலச்சக்கரம், கொள்கைகளையும் சேர்த்து சுழற்றி போட்டு விட்டது..... ம்ம்ம்ம்.....

Anonymous said...

கதை சின்னதா இருந்தாலும் நிறைய சிந்திக்க வைக்குது..
நல்லா இருக்கு.. :)

பத்மா said...

தனக்கென வரும் போது தான் ....

ப்ரியமுடன் வசந்த் said...

சின்ன குத்தூசி...

பிரபாகர் சொன்னதேதான்...

ஹேமா said...

சின்னதாய் இருந்தாலும் சொன்ன விஷயம் பெரிசு.ஆனால் சந்தர்ப்பம்தான் எல்லா விஷயங்களையும் மாத்துது !

சீமான்கனி said...

சம்ரதாயம் ஜாதகம் மூடநம்பிக்கை எல்லாம் வாழ்வில் ஒருமுறை சட்டையை பிடித்து உழுக்கிவிட்டுதான் போகிறது சிறப்பான பகிர்வு நண்பரே...வாழ்த்துகள்...

pinkyrose said...

தோ போட்டுட்டேன்!

ம்ம் புரிய கொஞ்சம் கஸ்டமா இருந்துச்சு இப்ப ஓகே

Shri ப்ரியை said...

சுருக்கமான ஆனால் சிந்திக்க கூடிய கதை...
ரொம்ப நல்லா இருக்குங்க....

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு பிரசன்னா.

Karthick Chidambaram said...
This comment has been removed by the author.
Karthick Chidambaram said...

நீங்க எனக்கு முன்பாகவே பதிவு போட்டுடீங்க போல :)))
ஆனால் என் பதிவு எதிர் பதிவு இல்லை நண்பா ....

நல்ல எழுத்து நடை. நிறைய எழுதுங்கள்.

geethappriyan said...

இதுபோல அரைப்பக்க கதைகள் படிப்பது அபூர்வாகிவிட்டது,இன்னும் இதுபோல எழுதுங்க

Matangi Mawley said...

:) nalla pathivu...

Prasanna said...

@ philosophy prabhakaran,
மிக்க நன்றி பிரபா.. தங்கள் செரிவான கருத்துக்கு..

@ சௌந்தர்,
மிக்க நன்றி!

@ Chitra,
மிக்க நன்றி!

@ Balaji saravana,
மிக்க நன்றி தங்கள் பாராட்டுக்கு!

@ பத்மா,
மிக்க நன்றி!

ப்ரியமுடன் வசந்த்,
மிக்க நன்றி!

ஹேமா
மிக்க நன்றி!

சீமான்கனி
மிக்க நன்றி!

Shri ப்ரியை
மிக்க நன்றி!

அக்பர்
மிக்க நன்றி!

Karthick Chidambaram
ஆமா தல நான் கூட ஆச்சர்யப்பட்டேன், ஒரே நேரத்தில் ஒரே விஷயத்த பத்தி நாம ரெண்டு பேரும் எழுதி இருக்கோமேனு :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan|,
தங்கள் பாராட்டு நம்பிக்கை அளிக்கிறது..!

Matangi Mawley,
மிக்க நன்றி!

Prasanna said...

@ pinkyrose,
சிறிது புரியவில்லை என்று சொன்னதால் ஒரு விளக்க பதிவு போடுகிறேன்.. பார்க்கவும் :)