"சுமார்
ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது
அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது"
டாக்டர் கோபால் (பிஎச்டி) தனது குறிப்புகளின் முதல் வரிகளை ஆயிரம் முறை
படித்திருந்தாலும், அதன் மீது கண்கள் ஓடியதும், மனது
தன்னையறியாமல் மறுபடி படித்தது. இந்த வருட புதிய மாணவர்களுக்கு
மறுபடியும் முதலில் இருந்து வரலாற்றைச் சொல்ல வேண்டும். ஆனால் சிந்து சமவெளி
நாகரிகம் மட்டும்...
Dec 15, 2014
Nov 6, 2014
இரண்டாவது முகம் - நீல பத்மநாபன்

வானம் எப்படி அவ்வளவு தூரம் போனது என்று கர்ண பரம்பரை கதை ஒன்றுண்டு. சிறு
வயதில் நாம் அனைவருமே கேட்டதுதான். பாட்டி ஒருத்தி கோலம் போட்டு நிமிர்கையில் வானம் அவள் முதுகில் இடித்ததாம்.
உடனே 'எட்டாத உயரத்துக்குப்
போய்த்தொலை' என்று அதைச்
சபித்தாள். அப்போது கைக்கு எட்டாமல் போன அது, பிறகு திரும்பவில்லை. அறுபது வயது திருமணமாகாத அர்ச்சகர் ஒருவர், தனது பால்ய சினேகிதி கோமு இறந்த தினத்தன்று, வானத்தைப் பார்த்தவாறு...
Sep 8, 2014
ஜிகர்தண்டா பற்றி சில உதிரி சிந்தனைகள்
(சில spoilers உண்டு. படம் பார்த்தவர்களும், படம் பார்க்குமுன்னமே முழுக்கதையையும் தெரிந்து கொண்டு போகும் வினோத ஐந்துக்களும் மட்டும் மேலே தொடரவும்)
சமீபத்திய படங்களில் இந்தளவிற்கு குதூகளித்தது ஜிகர்தண்டா பார்த்துதான். It is a treat for movie buffs. நலன் குமாரசாமியை அறிமுகக் காட்சியில் வைத்தது, கார்த்திக் என்கிற கதாநாயகன் பெயர் போன்றவை மூலம் ஆரம்பத்திலேயே படத்தை வெகு நெருக்கமாக்கி (personalize) விடுகிறார் இயக்குனர்.
இந்தப் படத்தை கேங்ஸ்டர் படம், சினிமா படம் என்றெல்லாம் வகைப்படுத்தினாலும், இப்படி...
Aug 25, 2014
சக்கரம் - சிறுகதை
தினமலர் நாளிதழுடன் வெளிவந்த சென்னை தின சிறப்பிதழ், அறிவியல் புனை கதைகளின் (Science Fiction) தொகுப்பாக வெளிவந்துள்ளது. உணவு என்பதையே இல்லாமல் ஆக்கிவிட்டால் என்ன ஆகும் என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த மையம். அதில் வெளிவந்த எனது சிறுகதை.. தினமலர் இ-பக்கத்தில் படங்களுடன் படிக்க இங்கு அழுத்தவும்
***
சக்கரம்
இன்டர்வியூ
நேரில்தான் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இது என்ன புது வழக்கம்? மனு குழம்பினான். தொலைபேசி வழியாகவே
இணைந்துகொள்கிறேன் என்று சொன்னதற்கு அக்குழுவின் நிர்வாகி என்ன பேச்சு...
Subscribe to:
Posts (Atom)