ஒரு நடுத்தரமான ஹோட்டலில்..
அவர்: What would you like to have, sir?
நான்: என்ன இருக்குங்க..
அவர் மெனுவை நீட்டுகிறார்.
நான்: ஒரு கொத்து பரோட்டாங்க..
அவர்: Sure.. Hot water or cold water, sir?
நான்: ஏதோ ஒண்ணு..
கொண்டு வருகிறார்..
அவர்: Shall I serve for you..?
நான்: ஐயோ அதெல்லாம் வேண்டாம்..
மொச்சக் மொச்சக் என்று தின்பதை சிறிது வெறுப்புடன் அடிக்கடி பார்க்கிறார்..
அவர்: Anything else?
நான்: இல்ல போதும்..
அவர்: Here is your bill, cash or card..
நான்: பணமாவே கொடுக்கறேன்,
போய் விட்டு மீதியை கொடுக்கும் போது,
நான்: ஏங்க பீடா, வாழைபழம்லாம் கெடையாதா?
அவர்: இல்ல, ஆய் போச்சு.. இன்னிக்கி சரக்கு வரல..
நான் (மனதிற்குள்): அப்படி வாங்க வழிக்கு.. வெற்றி வெற்றி.. ஹீ ஹீ
22 comments:
5 star ஹொட்டேலில் இங்கிலிபீஸ் இல்லைன்னா இந்திதான் செல்லு(மா)ம்:(
ரூல்ஸ்மா ரூல்ஸ்
//Hot water or cold water, sir?//
அடுத்த தட போனா ஜில்தண்ணிய வாங்கி குடிங்க :)
//அவர்: Shall I serve for you..?//
நீங்க கேட்டது கொத்து பரோட்டா அவர் என்னுமா செர்வு கிர்வுன்னு ஏதோ புதுசா கொடுத்து ஏமாத்துனா வாங்கிடுவோமா ? :))
செம்மொழி வாழ்க!செம்மொழிக்கு விழா எடுத்த கலைஞர் வாழ்க!
நான்: ஏங்க பீடா, வாழைபழம்லாம் கெடையாதா?
அவர்: இல்ல, ஆய் போச்சு.. இன்னிக்கி சரக்கு வரல..
நான் (மனதிற்குள்): அப்படி வாங்க வழிக்கு.. வெற்றி வெற்றி.. ஹீ ஹீ///
தல கடைசில, சரண்டர் ஆயிரிச்சே:)
அங்கேயும் கொத்து பரோட்டாவா :)
கடைசில அவரையும் தமிழ் பேச வைத்த உங்களுக்கு வாழ்த்துகள்.
//நான்: ஏங்க பீடா, வாழைபழம்லாம் கெடையாதா?
அவர்: இல்ல, ஆய் போச்சு.. இன்னிக்கி சரக்கு வரல.. //
haa haa சிரிச்சேன் நல்லா..
இப்பிடித்தான் தமிழும் ஆயிப்போச்சி..
தமிழ் காத்த தனயன் வாழ்க!
@ துளசி கோபால்,
அப்போ மௌன விரதம்னு 'சொல்லிட' வேண்டியதான் :)
@ மகேஷ் : ரசிகன்,
We must break the rules anne :)
@ ஜில்தண்ணி,
ஹி ஹி அதானே நாங்க உஷாரான ஆளு..
@ ILLUMINATI,
யோவ் எத்தினி வாட்டி சொல்லி இருக்கேன் அரசியல் பேசாதீங்கன்னு :)
@ Jey,
அதுக்குள்ள நான் பட்ட பாடு :)
@ அக்பர்,
பின்ன நம்ம ஐட்டம் ஆச்சே அண்ணே :) நன்றி நன்றி
@ ப்ரியமுடன் வசந்த்,
ஹீ ஹீ அண்ணே :)
@ வால்பையன்,
ஆ இதெல்லாம் பத்தாது.. எல்லாரையும் ஆட விட்டு பாராட்டு விழா வைங்க :)
ல்ல, ஆய் போச்சு.. இன்னிக்கி சரக்கு வரல..
நான் (மனதிற்குள்): அப்படி வாங்க வழிக்கு.. வெற்றி வெற்றி.. ஹீ ஹீ//
கலக்கல் தமிழை காப்பாற்றிய பிரசன்னா வாழ்க.....
///நான் (மனதிற்குள்): அப்படி வாங்க வழிக்கு.. வெற்றி வெற்றி.. ஹீ ஹீ///
இப்படி தான் நாட்ல ரொம்ப பேர் சுத்துறாங்க....
நீங்களுமா சாமி.... தாங்காது பூமி.....
அருமை...
Climax கலக்கல் :-)
நண்பரே அங்க - கிரீன் வாட்டர் இல்லைங்களா ? ஒன்லி ஹாட் ஓர் கோல்ட் ?
டிப்ஸ் கொடுத்திங்களா இல்லையா......
நானும்கூட இதேமாதிரிதான் வெறித்தனமா( :-)
தமிழ்லயே பேசுவேன்!ஆங்கிலம் நமக்கே புரியாதுல்ல..
ஆனாலும், நீங்க செய்தது ரொம்பச் சரி!
தமிழனோட தமிழ்ல பேசுறதுதான் சரி!
@ Shri ப்ரியை,
நீங்க என்ன புல்லா திட்டிட்டு கடைசில அருமைனு சொல்றீங்க :)
@ Karthick Chidambaram,
அதான் பாருங்க.. ஒரு கிரீன் தமிழனுக்கு கிரீன் தண்ணி இல்லையா கொடுமை :)
@ rk guru,
ஏன் கொடுக்காம? கொத்து பரோட்டாவ இன்னும் நல்லா வேக விட்டு, வெங்காயம் நிறைய போடணும்னு நெறைய டிப்ஸ் கொடுத்தேன் :)
@ அண்ணாமலை,
கமான்.. லெட்ஸ் பாரம் அ க்ரூப் ஹீ ஹீ
பாராட்டுக்கள்.
உங்க மொழி பற்று வாழ்க.
@ பிரசன்னா....
///நீங்க என்ன புல்லா திட்டிட்டு கடைசில அருமைனு சொல்றீங்க///
இதெல்லாம் தங்களுக்கு புதுசா என்ன...... ஐய்யோ... ஐய்யோ...:)
@ சி. கருணாகரசு,
தங்கள் பாராட்டு பெருமையாக உள்ளது.. மிக்க நன்றி :)
@ Shri ப்ரியை,
அட நெஜமா இதெல்லாம் புதுசுதான்.. ஏன்னா, எல்லாரும் திட்டிட்டு மட்டும் போய்டுவாங்க.. அருமைனு சொல்ல மாட்டாங்க ஹீ ஹீ
ha ha ha...good one
நம்ம வித்தியாசமா இருக்கனும் இல்ல... அதான்...... :)
இட்ஸ் ரியலி வெரி நைஸ்...
Post a Comment