ஒரு பாடல். இரு வேறு சூழல்கள். இரண்டு விதமான உணர்ச்சிகளை தருகிறதே? அதை விட, சூழலை பொறுத்து ஒரு பாடல் பிடித்தோ பிடிக்காமலோ கூட போய் விடுகிறது. சின்ன வயதில் (இப்போவும் தான் யூத், நான் சொல்வது குழந்தையில்..), 'சுந்தரி நீயும்.. சுந்தரன் ஞானும்' பாடல், நாங்கள் இருந்த 'லைன்' வீட்டில், பக்கத்து வீட்டின் ஒரு சிகப்பு கலர் டேப் ரெக்கார்டரில் தினம் சாயந்திரம் ஓடும். அந்த வேளை தான் பொடிசுகளுக்கு வீட்டு பாடம் எழுதி, படிக்கும் நேரம். அடுத்தநாள் வகுப்பில் என்ன நடக்குமோ, டெஸ்ட் வைப்பார்களா என்று ஒரே பீதியான...
Dec 6, 2010
பாட்டின் பொழுதுகள்
முழுதும் படிக்க..
Dec 4, 2010
நான் எப்படிப்பட்டவன் (ஐம்பதாவது பதிவு)
திக்கி முக்கி ஐம்பது பதிவு வந்தாச்சு (எனக்கும் ஆசைதான் மாதத்திற்கு 15 பதிவு போடணும்னு.. ஹ்ம்ம் என்ன செய்ய?). ஐம்பதாவதா நம்மள பத்தியே எழுதலாம்னு யோசிச்சப்ப, அன்னு அக்கா பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் எழுத அழைச்சாங்க. நல்லதா போச்சுன்னு, இதோ..
1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
Prasanna (பிரசன்னா)
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உண்மை பெயர்தான். என் பெயரில் ரொம்ப பேர் எழுதவில்லை என்று நினைக்கிறேன். அதனால்..
3. நீங்கள் தமிழ்...
Nov 29, 2010
ஒரு என்சிசி மாணவனின் கதை
ஒழுங்கு, ஒழுங்கு. இது தான் தேசிய மாணவர் படை என்னும் என்சிசி (NCC). எல்லா பயல்களையும் போலவே எனக்கும் சிறுவயது முதலே ராணுவம், துப்பாக்கி, camouflage உடை, பச்சை ஜீப், தொப்பி (இது முக்கியம்) இதுங்க மீது ஒரு ஈர்ப்பு. முதல் நாளே கல்லூரியில் பெயர் கொடுத்து ஆர்வத்துடன் சேர்ந்தாயிற்று ('நேர்முகத்தில் இதுக்கெல்லாம் வெயிட் அதிகம்').
கல்லூரியின் அந்த முதல் வார சனிக்கிழமை 'துள்ளுவதோ இளமை' புகழ் செல்வராகவன் எடுத்த காதல் கொண்டேன் படத்திற்கு போயிருக்கலாம். போகவில்லை. திடும் திடும் என்று எல்லா விடுதி அறைகளில் இருந்தும்...
Nov 26, 2010
நந்தலாலா - நாவலான கவிதை புத்தகம்

ரொம்ப நாள் கழித்து முதல் நாளே ஒரு திரைப்படத்தை பார்த்தேன். முதல் முறை சுடச்சுட படப்பார்வையும் (இதை விமர்சனம்னு சொல்ல முடியுமா தெரியலை). மிஷ்கின் என்ற பெயர் மீது இருக்கும் ஒரு ஈர்ப்பே காரணம்.
15-20 சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுதியினை படித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது இப்படம் (கவிதையை ரசிப்பவர்களுக்கு கவிதைத்தொகுதி). சிறுவயதில் தொலைத்த தன் தாயை தேடிப்போதல் என்ற ஒற்றை இலக்கில், இச்சிறுகதை தொகுதி...
Nov 25, 2010
பட்டாம்பூச்சி அதிர்வு
ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார் இன்று மதியம்.
நேற்று, தனது வீட்டில் வந்து ஒன்றுக்கு இருந்த ஒரு கொழுத்த நாயை ஒரு கொழுத்த கனவான் கொழுத்த கல்லால் அடிக்க, அது வலி மிகுந்து கத்திக்கொண்டு அதன் முதலாளி சிறுவனிடம் ஓட, அவன் 'அப்சட்' ஆகி வீட்டு (விலை உயர்ந்த) பொருள் ஒன்றை உடைத்தான்.
பதிலுக்கு 'அப்சட்' ஆன சிறுவனின் அம்மா, கரண்டி வளையும் அளவுக்கு அவனை அடித்து விட்டு, அவன் சேட்டையை அடக்க வழி தெரியாமல் உட்கார்ந்து அழுதாள். அந்த நேரம் பார்த்து, வெளியில் போயிட்டு வந்த அவள் கணவன் வழக்கம் போல 'என்னடி இன்னும்...
Nov 20, 2010
ட்விட்டர் மொழிகள்-2
எனக்கு மதிய நேரத்தில் உறங்கவே பிடிக்காது.. அதனால், இரவு தூங்கி மதியத்திற்கு முன்னமே எழுந்து விடுவேன்..
############
எனக்கு தெரிந்து காதலர்களுக்கு தான் முதலில் திருமணம் நடக்கிறது.. வேறு யாருடனோ..
...
Nov 12, 2010
காட்சி மாறுதல் (திடுக்)
நிலவற்ற தனி இரவில்,
நெடுந்தெருவில்
தயங்கி நடக்க
திடீரென்று எங்கிருந்தோ தோன்றி,
பயங்கர சத்தத்துடன்,
எதையோ
விளையாடும் குழந்தைகள்..
*******************
அரட்டை
சிரிப்பு
குழந்தை அழுகை
கும்மாளம்
நிசப்தம்-அலறல்
விபத்து
(விபத்தை போன்ற திடுக் காட்சி மாற்றம் மனிதனுக்கு வேறு இல்லை)
*******************
நூறு
ஆயிரம்
லட்சம்
வைரஸ்
*******************
நொடி தாமதித்தாலும்
சளார் சளார் ஹாரன்கள்
வசைகள்
இன்று அதே தெருவில்
கிரிக்கெட்
பந்த்
*******************
வியர்வை
கொடுத்த
சாவுக் க...
Nov 1, 2010
The Way Home 2002 - வீடு திரும்பல்
ஒரு சூரிய சாப்பாட்டு வேளையில், வழியில் உட்கார்ந்து ஒரு பாட்டி கையேந்திக்கொண்டு இருந்தார். ரொம்ப வருந்தாமல், கண்களாலேயே.. சுலபமாக அவரை பார்க்காமல் கடந்து விட முடியும். ஆனால் நான் பார்த்துவிட்டேன்., பணம் கொடுப்போமா என்றும் எவ்வளவு கொடுக்கலாம் என்றும் யோசித்து முடிக்குமுன் அந்த இடத்தை கடந்தாயிற்று. சரி வரும் போது தரலாம் என்று முடிவு செய்து, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, திரும்பும்போது ஞாபகமாக அவரை தேடிக்கொண்டுதான் வந்தேன். அவர் அங்கே இல்லை. சரி, எனக்கு சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கும், இந்த படத்துக்கும்...
Oct 30, 2010
ஆனந்த விகடனில் என் ட்வீட்..!
வாரா வாரம் ஆனந்த விகடன் வாங்கியதுமே, வலைபாயுதேவில் நமக்கு தெரிந்தவர்கள் யார் யாரின் ட்வீட்கள் வந்துள்ளன என்று பார்ப்பது வழக்கம். இந்த தடவை, அந்த பக்கத்தில் இருந்த தோனி சம்சாரம் சகிதம் இருந்த படத்தை பார்த்து கடந்து விட்டேன். திரும்ப புரட்டும் போது அட இதை எப்படி விட்டோம் என்று வந்த ட்வீட்களை படித்துக்கொண்டு இருக்க, கனவு போல என் பெயரும் இருந்தது.. prasannag6@twitter.co (m விட்டு போய் இருந்தது. 'எம்', 'என்' என்று சுயநலத்தை கை விட்டால் நீதான் ராஜா (கோ) என்று சொல்கிறார்களோ?)
வீட்டில் அனைவருக்கும்...
Oct 18, 2010
Le Grand Voyage (2004) - மகத்தான பயணம்
பயணங்களின் கதை சொல்லும் படங்கள் எப்போதுமே எனக்கு மிக பிடித்தவை.. அதிகம் பயணப்படாதவன் என்பதாலா என்று தெரியவில்லை (அது 'ண', ண் அல்ல) .. அந்த வகையில் எழுத்தாளர் எஸ்.ராவின் வலைத்தளத்தில் தெரிந்துகொண்டு பார்த்த இப்படமும், இதுவரை பார்த்ததிலேயே சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது..
ஒரு சிறப்பான படம் எப்போதும் பல தளங்களில் இயங்கும். அதை நிரூபிக்கும் வகையில் இதுவும் தந்தை-மகன் உறவு, பயணத்தின் மகத்துவம், வாழ்க்கையின் அர்த்தம் என்று பல விஷயங்களை போகிற போக்கில் சொல்கிறது...
Jul 26, 2010
ஆழ்மனம் குட்டிக்கதை - ஒரு அலசல்
சில நண்பர்கள் என்னுடைய முந்தைய பதிவான இந்த குட்டிகதை புரியவில்லை என்று சொன்னதால (சின்ன கதை தான்.. படிக்கவும்), கதையை பற்றி ஒரு சின்ன விளக்கம் (இலக்கியவாதிகள் பொதுவாக இதை செய்யக்கூடாது.. திட்டுவார்கள்.. நான் ’அது’வாக ஆவதற்கு இன்னும் காலம் இருப்பதால் சொல்கிறேன்).
கதை படித்து விட்டீர்களா? சரி இப்போ விளக்கம்.
அவரவர் நம்பிக்கை அவரவற்கு என்றாலும், ஒரு மூட நம்பிக்கையினால் அதை நம்பாதவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவர் என்பதே கதையின் கரு.
முதல் விவாதம் நடந்தது சில வருடங்கள்...
Jul 23, 2010
ஆழ்மனம்
'உனக்கு நம்பிக்கை இல்லனா விட்ரு, எதுக்கு அடுத்தவங்க நம்பிக்கைல தலையிடற..?' 'சுதர்சன்.. இது மூட நம்பிக்கை. நம்பாதனு சொல்றேன்.. உன் நல்லதுக்கு தான சொல்றேன் ?''அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. உன் கிட்ட வந்து இத நம்பு, அத நம்பாதனு எதாச்சும் சொல்றோமா? உன் வழி உனக்கு, என் வழி எனக்கு.. நான் ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் நம்பறேன், அவ்வளவுதான்'அவன் சொல்வதும் சரியாகவே தோன்றியது.. 'ஹ்ம்ம் சரி.. எப்படியோ போ' - என்று சொல்லிவிட்டு ஒளியும் ஒலியும் பார்க்க கெளம்பினான்..பத்தாம் வகுப்பு,...
Jul 21, 2010
நண்பர்களை குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..
மனைவியும் இல்லாமல் தோழியும் இல்லாமல் அல்லாடுபவர்கள், இரண்டும் இருக்கும் நண்பர்களை (அட தனித்தனியாதான்... ஐயோ வேற வேற... அட எப்படி சொன்னாலும் தப்பா வருதே?) ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..
.
சார்ஜ் இல்ல என்று சொல்லி, 'அஞ்சு நிமிஷம் உன் மொபைல் குடு மச்சி' என்று வாங்கி விட்டு, தொலை நோக்கோடு நாம் ஆறு மாதத்திற்கு போட்டு வைத்து இருந்த ரீசார்ஜ் தொகையை ஒரே நாளில் தீர்த்து விடுவானே, அப்போ..
கூட வாடா என்று போட்டு இருக்கும் கைலியோடு இழுத்துச்சென்று, ஒரு இடத்தில் நின்று கொண்டு...
Jul 14, 2010
தமிங்கலம்..
ஒரு நடுத்தரமான ஹோட்டலில்..
அவர்: What would you like to have, sir?
நான்: என்ன இருக்குங்க..
அவர் மெனுவை நீட்டுகிறார்.
நான்: ஒரு கொத்து பரோட்டாங்க..
அவர்: Sure.. Hot water or cold water, sir?
நான்: ஏதோ ஒண்ணு..
கொண்டு வருகிறார்..
அவர்: Shall I serve for you..?
நான்: ஐயோ அதெல்லாம் வேண்டாம்..
மொச்சக் மொச்சக் என்று தின்பதை சிறிது வெறுப்புடன் அடிக்கடி பார்க்கிறார்..
அவர்: Anything else?
நான்: இல்ல போதும்..
அவர்: Here is your bill, cash or card..
நான்: பணமாவே...
Jul 13, 2010
விழாக்களில் பெண்கள்
பொதுவாக, திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் பெண்களின் ஆளுமை பயமுறுத்துவதாக இருக்கும்.. நம்ம பயல்கள் டென்ஷனாக இங்கும் அங்கும் ஓடியபடி சத்தம் போட்டு திரும்பி வருவதற்குள் ஒரு தீர்வை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.
.
ஜீவநதி என்பது வேறு எதுவும் இல்லை. பெண்களின் பேச்சுதான். தெரிந்தவர்களோ, புதிதாக சந்திப்பவர்களோ.. அனாயசமாக அடுத்த ஆள் கிடைக்கும் வரை பேச்சு ஓடிக்கொண்டே இருக்கும் - 'உங்க ஒன்னு விட்ட சித்தபபா பையன் யூஸ்ல எந்த ஸ்டேட்டில் இருக்கான்?' என்ற அளவுக்கு நேர்த்தியாக. வரும் தகவல்கள் டேடாபேசில் பதிவாகி,...
Jul 12, 2010
The Matrix படத்தை தமிழில் போடுகிறார்கள்
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்..
வரும் வெள்ளிக்கிழமை, 7.30 PM இந்திய நேரத்திற்கு கலைஞர் தொலைகாட்சியில் மாட்ரிக்ஸ் (The Matrix) படத்தை தமிழில் போடுகிறார்கள். தவறாமல் பார்க்கவும். ஏற்கனவே பார்த்து விட்டீர்களா? பரவாயில்லை, இன்னொரு முறை பாருங்கள்..
...
Jul 6, 2010
முதல் நாள் கல்லூரி
நேற்று நடந்த சம்பவங்களே நினைவில் நிற்க மறுக்கும் போது, 7 வருடங்கள் முன் (அத்தனை காலம் தாண்டி விட்டதா?), முதல் நாள் கல்லூரி காட்சிகள் 'பச்சக்' என்று ஞாபகத்தில் எப்படி?
முதல் நாள் விடுதி அறையினுள் நுழைய, எனக்கு முன்னமே அங்கு இரண்டு பேர். உன்னுடன் தான் குப்பை கொட்ட வேண்டுமா என்ற பார்வைகள் (பின்னர் அறை குப்பைகள் வெளியில் கொட்டப்படவே இல்லை என்பது வேறு விஷயம்).. கைக்குளுக்கல்கள்.. விசாரிப்புகள்..
...
Jul 2, 2010
தேவதை விருதுகள் அறிவிப்பு
சேர்ந்து விட்டார்கள் எனக்கு 50 பாலோவர்கள் (இப்போ 51).. என்னளவில் இது ஒரு பெரிய மைல்கல்.. ஏன் என்றால், ஆரம்பித்த சில நாட்களில், என்னடா இது, நம்ம பக்கம் யாரும் வர மாட்றாங்க என்று சில நேரம் வருத்தப்பட்டு புலம்பியதும் உண்டு.. ஆனால், எழுத எழுததான், அடுத்தவர்களையும் படிக்க படிக்கத்தான் நம் எழுத்தோ, சொன்ன கருத்தோ (அப்படி வேற நெனச்சிட்டு இருக்கியா நீயி) இல்லை எதுவோ பிடித்து, கண்டிப்பாக நமக்கு என்று ஒரு நட்பு வட்டம் உருவாகும் (#அறிவுரை)..
...
Jul 1, 2010
பதிவுலகம் பற்றி திரு. கமல்..
அனைவருக்கும் வணக்கம்! நான் நடிகர் கமல் பேசுகிறேன்.. பதிவுலகை பற்றி கமல் பேசுகிறானா? என்ன தகுதி இருக்கிறது இவனுக்கு என்று முந்திரிக்கொட்டை தனமாக கேள்வி கேட்பவர்களுக்கு.. மக்கள் மனதில் தேவையான கருத்துக்களை பதிப்பவன் என்ற முறையில்.. நானும் ஒரு பதிவர்தான் என்று என்னால் பெருமையாகவே சொல்லிக்கொள்ள முடியும்.
எனக்கு தமிழ் வலையுலகம் மிகப்பிடிக்கும். அதில் வரும் படைப்புகள், வாதங்கள் முதலியவற்றை பார்த்தாலே நாம் எந்த கொம்பனுக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது புலனாகும். ஆனால், எனக்கு பிடிக்காத ஒரு...
Jun 29, 2010
Rope (ரோப்) - சிறந்த படம்

ஒரு கொலையை எந்தவித உள்நோக்கமும் (Motive) இல்லாமல், 'கொலை செய்ய வேண்டும்' என்ற ஒரு காரணத்திற்காகவே செய்ய முடியுமா?
ஒரு உயிரை பறிப்பதில்.., உயிரை உருவாக்குவதில் உள்ளதை போலவே அல்லது அதைவிட அதிகமாக அளவுக்கடங்கா கிளர்ச்சி/திருப்தி இருக்குமா?
கொலையை திறம்பட திட்டம் போட்டு செய்தவனுக்கு, அதை யாராவது 'கண்டு பிடித்துத்தான் பார்க்கட்டுமே' என்ற ஒரு ஆசை ஆழ்மனதில் இருக்குமா?
இப்படி தினுசான கேள்விகளையும்...
Jun 9, 2010
வெள்ளை நிறத்தில் ஒரு பூனை..
அது வீட்டின் சேமிப்பு அறை மற்றும் ஆடைகள் தொங்கவிடப்படும் அறை மற்றும் பூஜை அறை. தீர்ந்து போனால் புது சோப்பு எடுப்பது போன்ற 'காரிய நிமித்தம்', அங்கு எப்போதாவது போவது உண்டு. அன்று அப்படி தற்செயலாக செல்ல, க்ர்ர்ர்ர் என்று உறுமல் சத்தம். குனிந்து பார்த்தால், அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பூனை. கீழே வைக்கப்பட்டு இருந்த பாத்திரங்களை அரணாகக்கொண்டு..
அவசரமாக வெளியே வந்து அம்மாவிடம் இதை சொல்ல.. நேற்றில்...
Jun 4, 2010
பரிணாமம்
மூன்றாவது கையில் விசிறி போன்ற அமைப்புடன் முதலில் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தது.,
தமிழகத்தில்..
குறிப்பு: இந்த 'கதை' புரியாதவர்கள் என்னுடைய முந்தைய பதிவான இந்த புலம்பலை படித்தால் புரியும...
Jun 2, 2010
பவர் கட்

எனக்கு வேற எதுவும் வருத்தம் இல்லை.. அது எப்படி நான் தூங்கும் நேரம் ஈ.பி (EB) ஆட்களுக்கு இவ்வளவு சரியாக தெரிகிறது? நான் தூங்கும் நேரத்தை மிகத்துல்லியமாக பாதியாக பிரித்து, அந்த புள்ளியில் மின்சாரம் நிறுத்தப்படுவதை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறேன். அது பகலாக இருந்தாலும் சரி.. உதாரணத்திற்கு, 10 PM - 4 AM தூங்குகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் (அட சும்மா ஒரு பேச்சுக்கு)....
May 27, 2010
பதினைந்தாவது ரொபாட்

அதி ரகசியமான அந்த ப்ராஜக்ட் வெர்ல்ட் ரூல் (Project World Rule) பற்றி தெரிந்தவர்கள் மொத்தம் எட்டு பேர் தான். அமெரிக்க அதிபருக்கு கூடத்தெரியாது. இந்த ப்ரொக்ராமின் அ,ஆ வான மார்க் மற்றும் டாம் அன்று இறுதி கட்ட செக்கப்கள் முற்றிலும் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். படபடப்புடந்தான்.
"இது எந்த அளவு வெற்றி பெரும் என்று நினைக்கிறாய் டாம்?", கேட்டவர் மார்க்.
"முழு வெற்றி...
May 22, 2010
பாசக்கார பதிவர்களுக்கு பாராட்டு விழா..

மின்மினி.com என்ற வலைத்தள திரட்டி இருப்பதை கேள்வி பட்டு இருப்பீர்கள். இதைப்பற்றி சுருக்கமாக இங்கே படிக்கலாம். இதில் என்ன விஷயம் என்றால், முதல் 101 பதிவர்களை இலவசமாக இணைக்கிறார்கள். அதில் சில பிரபல பதிவர்களை அவர்களே தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் அண்ணன் (நாந்தான்) இரண்டாம் வரிசையில் முதலில் இடம் பெற்றுள்ளேன்..
இதை பற்றி ஒரு துணுக்கு இந்த பதிவின்...
May 7, 2010
பிடித்த பத்தும்., ராவணன் பாடல்களும்..
பிடித்த பத்தை எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று இப்போது தான் தெரிகிறது.. பிடித்த படம், அதற்கு கீழே ஏன் என்று..
************
சபாஷ் மீனா
நகைச்சுவை, சிவாஜி (இயல்பான நடிப்பு), சந்திரபாபு
நாயகன்
மணி, கமல்
முள்ளும் மலரும்..
ரஜினி,ரஜினி,ரஜினி
அன்பே சிவம்
செவத்த அன்பு :)
பேசும் படம்
புதுமை
தில்லு முள்ளு
'வெண்கல கடையில் யானை புகுந்தது போல' படம்..
மௌன ராகம்
மென்மை, பெண்மை, பிளாஷ்பேக்
பம்பாய்
இரண்டாம் பகுதி (எதுக்குடாப்பா இதெல்லாம் என்று தோன்ற வைப்பதால்)
காக்க காக்க
ஸ்டைல்,...
May 3, 2010
உலகின் கடைசி மனிதன்
கண் முழித்து பார்த்தால், வீடு கரகர என்று அமைதியாக இருந்தது (மின்விசிறி மட்டும்). முகம் கழுவலாம் என்று போனால், குழாயில் தண்ணி வரவில்லை. என்ன, யாரும் மோட்டர் போடவில்லையா? போய் போட்டு விட்டு வந்தான். பின்னால் போகும்போது தான் கவனித்தான். பக்கத்து வீடும் அமைதியாக இருந்தது. அதற்கு வாய்ப்பு இல்லாததால், சற்று குழம்பி, இவர்களுடன் சேர்ந்து வீட்டில் இருப்பவர்கள் வெளியில் சென்று விட்டார்களா? அப்படியே வெளியில் வந்து பார்த்தால்...
வீதி அம்போ என்று தனியாக இருந்தது. கொஞ்சம் வண்டிகள் நடு நடுவில் நிறுத்தப்பட்டு...
May 1, 2010
ஔவையார் விண்வெளி ஆராய்ச்சியாளரா?

'அண்ணே, ஔவையார் பெரிய விண்வெளி ஆராய்ச்சியாளர்னு கண்டு பிடிச்சிருக்கேன்' என்றபடியே ஓடி வந்தான் மானஸ்தன்.
இவனை பற்றி நன்றாக தெரிந்தவர் ஆதலால், மணி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், 'என்னடா சொல்ற' என்றார்.
'ஔவையார் பெரிய விண்வெளி ஆராய்ச்சியாளர்னு கண்டு பிடிச்சிருக்கேன்' என்று மறுபடியும் அதையே சொன்னான்.
'டேய் டகால்டி மண்டையா.. எத வச்சி சொல்றனு கேக்கறேன்?'
'அண்ணே.. இங்க்லீஷ்காரனே கண்டு...
Apr 26, 2010
சில பாடல்களும் எண்ணங்களும்..

ரொம்ப நாள் கழித்து, கிழக்கு சீமையிலே படத்தில் கத்தாழங்காட்டு வழி பாடலை பார்த்தேன்.. ஒரு பெண் மணம் முடித்து புகுந்த வீடு போகும் போது, அண்ணனும் தங்கையுமாக தங்கள் மனதில் உள்ள வலியை (பிரிவு என்றாலே வலிதானே?) பாடுவதாக இருக்கும். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, இருவர் உள்ளம் மட்டும் பழைய நினைவுகளை நினைத்து அழும்..
இனி, நான் என் வீட்டில் இருக்க போவதில்லை என்ற உண்மை அவளை தாக்கும்...
Apr 19, 2010
பிடித்த படம் - Shawshank Redemption (ஷாஷன்க் ரிடம்ப்ஷன்)

'சிறைக்குள் இருக்கும் எல்லாரும் கெட்டவங்க இல்லை. வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியன்கள் இல்லை' என்பது படத்தின் உட்கரு. ஆனால் எனக்கு படத்தில் பிடித்தது- ஒரு மனிதன் வாழ்க்கையில் எதை இழந்தாலும், 'நம்பிக்கை' இழக்காமல் இருந்தால் போதும் என்பதே. மற்றும் ஞயாயம் இறுதியில் வென்றே தீரும் என்ற இயற்க்கையின் தீர்ப்பு. மற்றும் விடா முயற்சி.. தன்னம்பிக்கையின் சக்தி.. இன்னும் பல 'மற்றும்'கள்.. இத்தனை விஷயங்களையும்...
Apr 17, 2010
தனிமை

ரயில் பயணத்தில், வெளியில் தெரியும் இருட்டில், திடீரென்று ஒரு வீடு தெரிகிறது. அதில் ஒற்றை மஞ்சள் பல்பு. வெளியில் ஒரு குழந்தை வேறு உட்கார்ந்திருக்கிறதே? சட்டென்று பார்வையில் இருந்து அக்காட்சியை மறைத்து விடும் ரயிலின் வேகம். இப்படி தனிமையை அப்பட்டமாக பார்த்ததில் ஒரு பிரமிப்பு கலந்த பரிதாபம். அந்த வீட்டை சுற்றி பல கிலோ மீட்டருக்கு ஒன்றும் கிடையாது. அப்படி ஒரு வீட்டை பார்த்தவுடன் பல கேள்விகள்...
Apr 9, 2010
இன்பர்மேஷன் கலெக்டரா நீங்கள்?

அவருக்கு தெரியாமல் அவர் சுற்று வட்டாரத்தில் ஒரு அணுவும் அசையாது (பாய்ஸ் செந்தில் மாதிரி), என்பது போல் ஒரு காரெக்டர் எல்லா க்ரூப்பிலும் நிச்சயம் இருக்கும். உதாரணத்திற்கு, என் அலுவலகதில் இருக்கும் இப்படி ஒரு 'கலெக்டர்'ஐ பற்றி சொல்கிறேன். யார் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் பூர்விகம்/ஜாதி மதம், சொத்து போன்ற எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பான். இவனுடைய தகவல் திரட்டும்...
Subscribe to:
Posts (Atom)